2021ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் -இதில் நிறைவேறியவை எவை என யோசியுங்கள்

 

 

 

 

 

2021ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்


சூழல் மாற்றங்கள்


சூழல் கட்டிடங்கள்


பயன்பாட்டிலுள்ள கட்டிடங்கள் பயன்படுத்தும் ஆற்றல் காரணமாக 30 சதவீத பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கின்றன. அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரம் உணவகங்கள் தவிர பிற நிறுவனங்கள் வீடுகளில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் பிறப்பித்துள்ளன. இதனால் ஜூன் 2021 முதல் அனைத்து வீடுகளிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களையே பயன்படுத்த முடியும். பிளாக்பவர் என்ற கட்டுமான நிறுவனம், குறைவாக ஆற்றலைப் பயன்படுத்தும் வீடுகளை கட்டித்தருகிறது. இம்முறை பிற நாடுகளிலும் பிரபலமாக வாய்ப்புள்ளது.


உள்ளூர் சந்தை


உள்நாட்டில் விளையும் காய்கறிகளை, உள்நாட்டிலேயே சந்தைப்படுத்துவது தொடங்கப்படலாம். பல நாடுகளில் பொதுமுடக்கம் தொடர்வதால் அங்கு சரக்குப் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விற்பனை மூலம் மக்களின் உணவுப் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்தலாம். நோய்த்தொற்று காரணமாக நகரங்களிலிருந்து கிராமத்திற்கு திரும்பியுள்ள தொழிலாளர்களால் விவசாயத்துறை வருவாய் கூடலாம்.


பசுமை முதலீடு


அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் காடுகளைப் பாதுகாப்பதற்கான முதலீட்டை செய்யவுள்ளது. இதுபோலவே பல்வேறு நாடுகளும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க காடுகளில் முதலீடுகளை செய்வது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இயற்கை வளங்களே நாட்டின் வணிகத்திற்கு முக்கிய ஆதாரம். எனவே அரசுடன் பல்வேறு பெருநிறுவனங்களும் இணைந்து காடுகளை அழிக்கப்படுவதை தடுப்பதற்கான திட்டங்களில் நிதியை முதலீடு செய்வது தொடங்கலாம்.


மின் வாகனங்கள்


அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கரிம எரிபொருட்களால் இயங்கும் கார்களுக்கு 2035முதல் அனுமதி கிடையாது என முடிவு எடுத்துள்ளனர். தமிழகத்திலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புதிய ஆலை உருவாக்கப்படவுள்ளது. இதனால் மின் வாகனங்கள் அதிகம் விற்கப்பட வாய்ப்புள்ளது. வாகன பராமரிப்பு, குறைந்த விலையில் பேட்டரிகள், வாகனத்தை பகிர்ந்துகொள்ளும் வசதி ஆகியவற்றின் மூலம் மின் வாகனங்கள் பரவலாகலாம்.


அலுவலகம்


மனநல உதவி


இன்று பல்வேறு பெரு நிறுவனங்களும் வீட்டிலேயே பணிசெய்யும் முறையை நிரந்தரமாக்க யோசித்துவருகின்றனர். பணியாளர்களுக்கும் தொழில்நுட்பமே நண்பராக உதவி வருகிறது. கொரோனா சூழலால் பிற மனிதர்களை சந்திப்பது குறைவதால், பணியாளர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்காக பெருநிறுவனங்கள் Calm, Headspace, Classpass, Fitbit, Woebot, Talkspace, BetterHelp ஆகிய நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளனர். அடோப் நிறுவனம், தனது பணியாளர்களுக்கு 24/7 ஆன்லைன் ஆலோசனையை வழங்கியும், பல்வேறு உரைகளை நடத்தியும் வருகிறது. வரும் ஆண்டில் இப்போக்கு அதிகரிக்கலாம்.



பணியாளர்களுக்கான ஆதரவு


டிராப்பாக்ஸ் நிறுவனம், தனது ஊழியர்கள் வீட்டிலேயே வேலை செய்வதற்கான அனுமதியை 2021ஆம் ஆண்டு ஜூன் வரை நீட்டித்துள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனமும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்களை அதிகரித்துள்ளது. வீட்டிலேயே வேலை செய்யும் பணியாளர்கள் நெகிழ்வுத்தன்மையான வேலைநேரம், மனநல ஆலோசனை, ஊதிய உயர்வு என பல்வேறு விஷயங்களை நிறுவனங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். பெருநிறுவனங்கள் பெரும்பாலான ஊழியர்களை வீட்டிலேயே வேலைசெய்ய பணித்துள்ளதோடு, பாதுகாப்பு விஷயங்களிலும் கவனம் செலுத்துகின்றன. இவை வரும் ஆண்டிலும் தொடரலாம்.


வேலைமுறை மாற்றம்


இந்தியாவில் பெருநகரங்களிலுள்ள பணியாளர்கள் நோய்த்தொற்று பயம் காரணமாக இணையம் மூலமாகவே பணிகளைச் செய்து வருகின்றனர். ரெட்டிட் நிறுவனம், வீட்டிலேயே பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள வெட்டின்றி பணியாற்ற அனுமதித்துள்ளது. வேறு நிறுவனங்கள் முன்கூட்டியே போனஸை வழங்கிவிட்டு 10 சதவீத சம்பள வெட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளன. வாரத்திற்கு சிலநாட்கள் அலுவலகமும், பிற நாட்களில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. அலுவலகம், வீடு என ஹைபிரிட் முறை பழக்கமாகும் வாய்ப்பு உள்ளது.


தொழில்நுட்பங்கள் வருகை


பெருந்தொற்று சூழலில் செயற்கை நுண்ணறிவு, தானியங்கி இயக்கமுறை, .ஆர், வி.ஆர் சாதனங்கள், மேக கணினியகம், இணைய பாதுகாப்பு சார்ந்து பணியாளர்கள் இயங்கவேண்டிய தேவை உள்ளது. புதிய திறன்களை பெரு நிறுவனங்கள் கற்றுக்கொடுக்க வாய்ப்புள்ளது. இக்காலகட்டத்தில் பல்லாயிரம் பணியாளர்கள் வேலையிழப்பையும் சந்தித்துள்ளனர். மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப தொழிலாளர்கள் தங்கள் திறன்களை கற்றுக்கொள்வது அதிகரிக்கும்.



கல்வி


விர்ச்சுவல் வகுப்பறை


செயற்கை நுண்ணறிவு மூலம் கல்வித்துறை மாற்றம் பெற்றுள்ளது. ஆன்லைனில் கல்வி, வருகைப்பதிவு, பயிற்சிகளை கண்காணிப்பது என கல்வி கற்கும் முறை மாணவர்கள் ஆசிரியர்கள் என இருதரப்பினருக்கும் உற்பத்திதிறனை அதிகரிக்கும்படி மாறியுள்ளது. வி.ஆர், .ஆர் முறைகளிலும் கல்வி கற்பிப்பது தொடங்கியுள்ளது. விர்ச்சுவல் வகுப்பறை மூலம் உலகில் பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் தடையின்றி கல்வி கற்க முடியும்.


தனிப்பட்டமுறை கல்வி


ஆன்லைன் முறையில் ஒவ்வொரு மாணவருக்குமான திறன்களை ஆசிரியர் மேம்படுத்த முடியும். இம்முறையில் மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறனுக்கேற்றபடி கல்வியை மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்துவதால் ஆசிரியரின் அறிவும் கூடவே விரிவாகிறது. பள்ளி வகுப்பறை, ஆன்லைன் முறை என இரண்டையும் ஆசிரியர்கள் பயன்படுத்தி கல்வி கற்பிக்கும் வாய்ப்பு உள்ளது. வீடியோக்கள், ஆப், பாட்காஸ்ட், இபுக் முறையில் பாடங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.


ரோபோக்கள்


ஆசிரியர் உதவியில்லாத சூழலில் இணையத்தில் இணைக்கப்பட்ட கூகுள் அசிஸ்டெண்ட் அமேசானின் அலெக்ஸா மூலம் மாணவர்கள் கல்வி கற்க முடியும். கணிதம், அறிவியல் பொறியியல் ஆகிய துறைகளில் திறன் கொண்ட ரோபோக்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தரு்ம்.


மேக கணினியக முறை


பள்ளியின் நிர்வாக முறை, பாடங்கள், கட்டணம் கட்டும் முறை என அனைத்தும் மேக கணினியக தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும். இதன்மூலம் கல்வி சார்ந்த அனைத்து விவரங்களையும் ஒருவர் எளிதாக அணுக முடியும். மேக கணினியக நிறுவன உதவியுடன் பள்ளி எளிதாக கற்பித்தலை மாணவர்களுக்கு வழங்கமுடியும்.


பிளாக்செயின்


ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் கல்வி சான்றிதழ்களை காகித வடிவில் வழங்காமல் பிளாக்செயின் மூலம் வழங்கும் முறை பிரபலமாகலாம். வேலைவாய்ப்புக்கு ஒருவர் விண்ணப்பித்தால் கூட அவரின் ஆவணங்களை பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் உண்மையா, போலியா என சோதிக்க முடியும்.


தகவல்


https://grist.org/fix/21-predictions-for-2021-climate-justice-forecast-trends/


https://www.linkedin.com/pulse/top-10-workplace-trends-2021-dan-schawbel/


india today


studyinternational.com

கருத்துகள்