மேட் இன் இந்தியா ட்ரோன்ஸ்! - தன்மய் பங்கர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற விமானப்படையின் போட்டியில் கூட தோல்விதான். ஆனாலும் ட்ரோன்களை தயாரிப்பதை கைவிடவில்லை. இவரது ஆர்வத்தைப் பார்த்து, ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை 50 லட்ச ரூபாயை ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ளது. இந்திய அரசு, மேட் இன் இந்தியா பொருட்களை தேவை என்று கூவினாலும் பெரியளவு பொருட்கள் அனைத்து துறைகளிலும் உருவாகவில்லை. அதற்கு தேவையான ஊக்கமும் பணமும் கிடைக்கவில்லை என்பதே காரணம். இதன் காரணமாக டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியா, அமெரிக்காவிடமிருந்து அதிக செலவில் வாங்கி வந்தது. இதை எப்படி தயாரிக்கிறார்கள் என தன்மய் ஆராய்ந்தார். பொட்டாசியம் நைட்ரேட்டை பயன்படுத்துவது தெரிய வந்தது. இது அதிக செலவு பிடிக்கும் ஏவுகணைத்திட்டம் என்பதை அறிந்து அதனை கைவிட்டார். பிறகுதான் ட்ரோன்களை தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கினார். பாகிஸ்தான் அண்மையில் ஜம்முவில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது பலருக்கும் நினைவிருக்கலாம். துருக்கியும் கூட இப்போது பெருமளவு தனது ஆயுதங்களை விட ட்ரோன்களை பயன்படுத்தி எதிரிகளை தாக்கத் தொடங்கியுள்ளது. 2014இல் தொடங்கிய ஆராய்ச்சி 2016இல் பாட் டைனமிக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்குமளவு முன்னேறியிருக்கிறது. இன்னொரு விஷயம், இவர் டெல்லி ஐஐடியில் படித்த மாணவர். இவரது உருவாக்கத்தின் உருவான ட்ரோனை அல்காரிதம் மூலம் எளிதாக பறப்பதை கட்டுப்படுத்த முடியும். மத்தியப் பிரதேச போலீஸ்கார ரின் மகன்தான் தன்மய். இவரது அப்பா , கொரோனா காலத்தில் மன அழுத்தம் காரணமாக இறந்துபோனார். மகன் தனது அறிவால் இந்தியாவைக் காப்பதை ஆகாயத்திலிருந்து கூட பார்த்து மகிழ அப்பாவுக்கு உரிமையிருக்கிறது தானே? இந்தியா டுடே சந்தீப் உன்னிதன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்