நிலச்சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குத் தேவை!
நிலச்சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குத் தேவை!
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெற்றோரின் எண்ணிக்கை 11.17 கோடியாக உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற ஒருவருக்கு விவசாயம் செய்வதற்கான சொந்த நிலம் இருப்பது அவசியம். விவசாயிக்கான தகுதி இருந்தாலும் சில விதிகளால் அவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெறாமல் போவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை விவசாய கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய அரசு வெளியிடுகிறது. 2015-16ஆம்ஆண்டு அறிக்கையில் நிலங்களை உரிமையாக வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 14.6 கோடியாக அதிகரித்துள்ளது. 2010-11 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 13.8 கோடியாக இருந்தது. இவர்கள் அனைவருமே நிலங்களை உரிமையாக கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய விவசாயக்கொள்கை (2006) தகவல் தெரிவிக்கிறது.
எனவே, இவர்கள் ஒருவரின் நிலத்தில் விவசாயக் கூலியாக பணியாற்றி வந்தாலும் கூட அவர்களையும் விவசாயிகள் பிரிவில்தான் சேர்ப்பார்கள். நிலங்களுக்கு சொந்தக்காரர்கள், அதில் பணியாற்றுபவர்கள் என பலரையும் ஆய்வு செய்யும் பணிக்கு முதலில் அரசு பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால் 2009ஆம் ஆண்டு முதலாக இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் நிலங்களைப் பற்றிய தகவல்களை விரிவாக சேகரித்து அதனை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் பணிகள் வேகமெடுத்தன. இதற்காக உருவானதுதான் டிஜிட்டல் இந்தியா லேண்ட் ரெக்கார்ட்ஸ் மாடர்னைஷேசன் புரோகிராம் (DILRMP).
நிலப்பதிவு மற்றும் சேவைகள் தொகுப்பு பட்டியலில்(2020), மத்தியப்பிரதேசம், ஒடிஷா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முன்னிலை பெற்றுள்ளன. இங்கு நிலப்பதிவு ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பதி்வு செய்யப்படுகின்றன. தற்போது, விவசாய மசோதாக்களுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் மாநிலங்களாக பஞ்சாப், ஹரியாணாவில், டிஜிட்டல் முறையிலான பதிவுப்பணிகள் ஏனோ வேகமாக நடக்கவில்லை. இந்த இரு மாநிலங்கள்தான் பசுமைப் புரட்சி பணியில் இந்தியாவில் முதுகெலும்பாக இருந்தன என்பதை யாரும் மறக்கமுடியாது. நிலங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்ப ஆய்வு செய்வது அவசியமாகிறது. காரணம், பலர் விவசாய நிலங்களில் வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தாலும் கூட அவர்களது ஆவணம், அரசிடம் பதிவாகும் வரை அவர் விவசாயியாக கருதப்படுவார். இதனால் அரசின் கணக்கெடுப்பில் தவறுகள் ஏற்படும். அரசின் திட்டங்கள் உண்மையா விவசாயிகளைச் சென்று சேராது.
2015-16 விவசாய கணக்கெடுப்பு அறிக்கைப்படி அதிகளவு விவசாய நிலங்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளது தெரியவந்துள்ளது. 2 ஹெக்டேர்களுக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 86.1 சதவீதமாக உள்ளது. அதாவது சிறு, குறு விவசாயிகள் அதிகமாக உள்ளனர். நவீன இந்தியா, பசுமை புரட்சி காலத்திலிரு்ந்து வெகுவாக முன்னேறிவிட்டது. பீகார், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் மாநிலத்தில் செயல்படும் விவசாய உற்பத்தி மற்றும் சந்தை கமிட்டிகளை(APMC) தேவையில்லை என்று கூறிவருகின்றன.1991இல் தொடங்கிய தாராளமயமாக்கம் விவசாயத்துறைக்கு வரவில்லை என்று பலர் கூறுகிறார்கள். விவசாயத்துறையில் சீர்திருத்தங்களை செய்து, திறனை வளர்த்து உலகளவில் போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கமுடியும்? எதிர்கால இ்ந்தியா இப்படித்தான் உருவாக முடியும்.
தகவல்
FE
Fields of change
Bibek debroy
கருத்துகள்
கருத்துரையிடுக