பனிரெண்டு முறை நிராகரிக்கப்பட்டு சாதித்த குழந்தை எழுத்தாளர்! - ஜே.கே. ரௌலிங்

 


ஜே.கே. ரௌலிங்







ஜே.கே. ரௌலிங்

எழுத்தாளர்

ஜோன்னா ரௌலிங் என்று கூட இந்த எழுத்தாளரை அழைக்கலாம். 1965ஆம் ஆண்டு இங்கிலாந்தின் யேட் என்ற நகரில் பிறந்தார். இவரை எதற்காக இங்கே எழுதுகிறோம்? எழுதியே சம்பாதித்து இன்று கோடீஸ்வரராக இருக்கிறார். அந்த தில்லுக்குத்தான் எழுதுகிறோம். ஹாரிபாட்டர் தொடர்கதைகள் நூலாக மிகச்சிறப்பாக விற்றன. அதை வார்னர் பிரதர்ஸ் திரைப்படமாக எடுத்தபோது ஜே.கோ. ரௌலிங்கின் புகழ் இன்னும் மேலே போய்விட்டது. நூலும் , திரைப்படங்களும் இன்றும் வெறித்தனமாக விற்றுக்கொண்டிருக்கிறது. 

500 மில்லியன் நூல்கள், 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விற்றுள்ளன என்று கணக்கு சொல்கிறார்கள். கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக 200 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளை ஹாரிபாட்டர் நூல்கள் வசீகரித்துள்ளன. 

ஜே.கே. ரௌலிங் தனது பள்ளிப்படிப்பை புனித மைக்கேல் தொடக்கப்பள்ளியில் படித்தார். பிறகு, பிரெஞ்சு மற்றும் செவ்வியல் படைப்புகள் பற்றிய படிப்பை எக்ஸ்செடர் என்ற பல்கலையில் நிறைவு செய்தார். தொண்ணூறுகளில் போர்ச்சுக்கலுக்கு சென்று ஆங்கிலம் கற்பிக்கும் பணியை செய்து வந்தார். பணியோடு காதலும் வந்தது. போர்ச்சுக்கீசிய பத்திரிக்கையாளர் ஜோர்ஸ் அரான்டஸ் என்பவரை காதலித்து மணந்தார். ஒரு பெண் குழந்தை பிறந்தபோது மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது. பிறகு ஸ்காட்லாந்துக்கு வந்தவர் தனது மகள் ஜெசிகாவை வளர்க்க பொருளாதார பலமின்றி கஷ்டப்பட்டார். 

ஏதோ மெலோடிராமா போல இருக்கிறதல்லவா? ஹாரிபாட்டர் கதை ஐடியா, ஜே.கேவுக்கு எப்போது வந்தது? மான்செஸ்டர் டூ லண்டன் ரயிலுக்கு காத்திருந்தார். ரயில் தாமதமாக வந்தபோதுதான் கதை ஐடியா உதித்தது. உடனே வேலை பார்த்துக்கொண்டு கதையை எழுத தொடங்கினார். பிலாசபர் ஸ்டோன் எனும் கதையை எழுதி முடித்து அதனை பிரசுரிக்க முயன்றார் பனிரெண்டு பதிப்பகங்கள் அதனை நிராகரித்தன. பிறகு ப்ளூம்ஸ்பரி என்ற நிறுவனம் அதனை ஏற்று பிரசுரித்தது. 

தி கிறிஸ்மஸ் பிக் எனும் நூலை 2021ஆம் ஆண்டு எழுதியுள்ளார். இதுவல்லாமல் க்ரைம் நாவல்களை ராபர்ட் கல்பிரெய்த் என்ற புனைப்பெயர்களில் எழுதி வருகிறார். இன்னும் நிறைய நூல்களை எழுதி வருகிறார். நவீன எழுத்தாளர்களில் கோடிக்கணக்கான குழந்தைகள் படிக்கும்படியான நூல்களை எழுதி வருபவர்களில் ஜே.கே முக்கியமானவர். 

டெல் மீ வொய் இதழ் 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்