வரலாற்றை திருத்தி எழுதி அதனை அரசியலுக்க சில கட்சிகள் பயன்படுத்துகின்றன! - பேராசிரியர் உபீந்தர் சிங், வரலாறு, அசோகா பல்கலைக்கழகம்
உபீந்தர் சிங் |
உபீந்தர் சிங்
பேராசிரியர் வரலாற்றுத்துறை அசோகா பல்கலைக்கழகம்
நீங்கள் எழுதியுள்ள நூலில் தொன்மை இந்தியா பற்றி பேசியுள்ளீர்கள். அதில் மதங்களுக்கு இடையில் பன்மைத்தன்மை இருப்பதோடு மதரீதியான வன்முறைகளும் இருப்பதைக் கூறியுள்ளீர்கள்.
தொன்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதற்காக நிறைய நேரத்தையும் ஆற்றலையும் செலவழித்துதான் ஆக வேண்டும். அகிம்சை, வன்முறை, கடவுள் நம்பிக்கை, நாத்திகம், சமூக பாகுபாடு பற்றி நான் நூலில் எழுதியுள்ளேன். இன்று மத வேறுபாடுகள் உருவாக்கப்படுவதைப் போலவே அன்றும் மத சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தன. அசோகர் பௌத்தத்தைப் பின்பற்றினார். மதம் தொடர்பான பன்மைத்துவத்தை கோட்பாடு அளவில் உருவாக்கினார். ஆனால் பிற அரசர்கள் இந்த அளவு யோசிக்கவில்லை. அவர்கள் இருக்கும் மத அமைப்புகளை அப்படியே பராமரித்தனர். மதங்களை பின்பற்றுவதில் பன்மைத்தன்மை நிலவியது.
அதேசமயம் மதரீதியான வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பௌத்த நூலான சூலவம்சத்தில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. பல்லவர்களின் ராணுவம் இலங்கையில் உள்ள அனுராதபுரத்தின் புத்த சிலைகளை கொள்ளையடித்தது பற்றி விவரிக்கிறது. ராஜேந்திர சோழரின் படைகள் இலங்கையில் புகுந்து தங்கத்தையும் மதிப்புமிக்க பொருட்களையும் கைப்பற்றியது சோழர்கள் சாளுக்கியர்களை தாக்கி வீழ்த்தி அவர்கள் உருவாக்கிய பொருட்களை நெருப்பிட்டு எரித்தனர். இதுபற்றிய கல்வெட்டு கூட உள்ளது. போர் என்பதில் கோவில்களை சூறையாடுவது, அதிலுள்ள பொருட்களை திருடுவது பிறரின் கலைப்பொருட்களை அழிப்பது ஆகியவையும் உள்ளடங்கி இருந்தது.
மத்திய காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்த முஸ்லீம் ஆட்சியாளர்கள், ஏராளமான கோவில்களை இடித்துள்ளனர். அதைப்போலவே பார்ப்பன ஆட்சியாளர்கள் பௌத்த மடாலயங்களை உடைத்து நொறுக்கியுள்ளனர். நாட்டை ஆண்டு வந்த மத த்தினர் எல்லோருமே இதுபோல வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறலாமா?
இங்கு உண்மையை விட பொய்களை கூறுவதே அதிகம். அந்த பொய்களையும் கூட பெரிதுபடுத்தி கூறி உண்மையை முழுக்க மறுத்து வருகிறார்கள். தொன்மை இந்தியாவில் மத ரீதீயான வன்முறை , படுகொலைகள் அதிகம் நடந்துள்ளன. புஷ்யமித்ர சுங்கர்கள், பௌத்தர்களின் 84 ஆயிரம் ஸ்தூபங்களை உடைத்து தள்ளியுள்ளார். பாடலிபுத்திரத்தில் உள்ள பௌத்தர்கள் அனைவரையுமே படுகொலை செய்தார். மேலும் பௌத்த துறவியின் தலையை வெட்டி யாரேனும் கொண்டு வந்தால் நூறு பொற்காசுகள் தருவதாக பொது அறிவிப்பு செய்த மன்னர் அவர். ஹூனர்களில் தோரமனா, மிகிரகுலா ஆகியோர் பௌத்தர்களை முனைப்பாக உறுதியாக நின்று அழித்தனர். பல்லவ மன்னரான மகேந்திர வர்மன், சமணர்களை படுகொலை செய்தார். பாண்டிய மன்னர் ஒரு வர், எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட சமணர்களை அழித்து ஒழித்தார். ராஜ தரங்கினி என்ற நூலில் சங்கரவர்மன் என்ற மன்னர், 84 கோவில்களை அழித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
லோகாரா என்ற வம்சாவளி மன்னர் ஹர்சா, செல்வச்செழிப்பு கொண்ட கோவில்களை உடைத்து அதிலுள்ள தங்கங்களை உருக்கி தனது கருவூலத்தில் சேர்த்துக்கொண்டார். நான் இங்கு கூறியதை நீங்கள் அப்படியே நேரடியாக பொருள் கொள்ளக்கூடாது. பொருளாதாரம், அரசியல் காரணங்களுக்காக நடந்த இந்த நிகழ்ச்சிகள் நாட்டில் நிலவிய பன்மைத்துவத்தை சிதைத்தது என்பது உண்மையே.
பொதுவாக இந்தியர்களுக்கு ஓளரங்கசீப்பைத் தெரிந்த அளவுக்கு புஷ்யமித்ர சுங்கர், மிகிரகுலாவைத் தெரியவில்லையே?
வரலாற்றில் உள்ள அனைத்து விஷயங்களும் மக்களிடம் பிரபலமாகுவது கிடையாது. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் இதைபற்றி முன்னமே அறிந்து வைத்திருப்பார்கள் என்பது உண்மைதான். இன்றைய அரசு அரசியல் லாபத்திற்காக வரலாற்றை மாற்றி எழுத நினைக்கிறது. கல்வி சார்ந்தும் இதேபோக்கில்தான் செல்கிறது. வரலாறு, அரசியல் திட்டம் என்பது இரண்டுமே வேறுவேறானவை. வரலாற்றை குறிப்பிட்ட முறையில் திருத்தி எழுதி அதில் அரசியல் கட்சிகள் லாபம் பார்க்க நினைக்கின்றன.
இன்று மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் தலைவர் ஒருவரை பகடி செய்ததற்காக தனிக்குரல் கலைஞர் கைது செய்யப்பட்டார். விளம்பரங்கள் கூட தடைசெய்யப்படும் நிலையில் உள்ளது. தடை கலாசாரம், சகிப்புத்தன்மையற்ற நிலை தொன்மை வரலாற்றில் உள்ளதா?
வெளிப்படையான விவாதங்கள் தொன்மைக் காலங்களில் நடைபெற்றுள்ளன. இதில் பங்குபெறுபவர்கள் உயர் குலத்தைச் சேர்ந்தவர்களாக, உயர் வகுப்பினராகவே இருப்பார்கள். புரட்சிகரமான பல்வேறு கருத்துகளில் இதில் விவாதிக்கப்படும்.
இன்று திரைப்பட இயக்குநர்கள், கவிஞர்கள், தனிக்குரல் கலைஞர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று அறிஞர்கள் என அனைவருமே தடை கலாசாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாங்கள் கூறும் கருத்துகளை அவர்களே சென்சார் செய்து கூறும்படி கட்டாயப்படுத்துகின்றனர். இதன்மூலம் குறிப்பிட்ட கருத்துகள் மட்டுமே ஊடகங்களில் இருக்கும்படி செய்யலாம்.
மதம் என்பது இப்போதைய நிலையைப் போலவே அப்போதும் உறுதியான வலிமையானதாகவே இருந்திருக்கிறது. ஆனால் அப்போது அதனை பகடி செய்து பல்வேறு படைப்புகள் உருவாயின. அகமதம்பரா என்ற சமஸ்கிருத நூல் உள்ளது. இதனை எழுதிய ஜெயந்த பட்டா மத விஷயங்களை சிறப்பாக பகடி செய்துள்ளார். இதில் தத்துவ விவாதங்களும் உண்டு. கேசெமேந்திராவின் படைப்புகளில் கூட மதம், சமூகம் பற்றிய பகடிகள் நிறைய காணப்படுகின்றன.
தொன்மை இந்தியாவில் பெண்களின் நிலை எப்படியிருந்தது? அனுலோமா, பிரதிலோமா என்ற இருமுறைகளின் படிதான் அவர்களது வாழ்க்கை அமைந்ததா?
உயர் வர்க்க ஆண், தாழ்ந்த குல பெண்ணை திருமணம் செய்வது, உறவுகொள்வது அனுலோமா. உயர்வர்க்க பெண், தாழ்த்த குல ஆணை மணம் செய்வது பிரதிலோமா. சமூகத்தில் பிரதிலோமாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அங்கீகாரமும் கிடைக்கவில்லை. பெண்களில் பாலியல் விழைவு, கருவுறுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்தித்தான் சமூகம் வளர்ச்சி பெற்றது. பெண்களுக்கான ஒழுங்குமுறைகள், நெறிகள் நடைமுறையில் இருந்தன. ஆண்களின் பாதுகாப்பில் பெண்கள் இருப்பது, அவர்களை பின்தொடர்வதுதான் பெண்களின் நிலையாக தொன்மை இந்தியாவில் இருந்தது. அக்காலகட்டத்தில் உலக நாடுகளிலும் அப்படித்தான் வழக்கம் நிலவியது.
இதில் பெண்களின் அனுபவங்கள் வாழ்க்கை முறை, பொருளாதாரம், மதம், சாதி சார்ந்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தது.
பிரன்ட்லைன்
ஸியா அஸ் சலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக