எலன் மஸ்க் - இந்த ஆண்டின் சிறந்த மனிதர் (2021)

 













எலன் மஸ்க்


எலன் மஸ்க், எல்லோருக்கும் பிடிக்கிற தொழிலதிபர் கிடையாது. சிலர் கோமாளி என்பார்கள், சிலர் ஜீனியஸ் என்பார்கள். எதுவாக இருந்தாலும் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உயரத்துக்கு கொண்டு செல்பவர்களில் எலன் மஸ்கை தவிர்க்கவே முடியாது. 

எலன் மஸ்க், ட்விட்டரில் போடும் பல்வேறு பதிவுகளை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைவார்கள். கேலியாக, கிண்டலாக, மூர்க்கமாக என பலவிதங்களில் எழுதுவது உண்டு. கிரிப்டோகரன்சியை டெஸ்லா ஏற்கும் என்றது. கோவிட் -19 கட்டுப்பாடுகள் சும்மா என்று சொல்லி தனது தொழிற்சாலைகளை இயக்கப்போகிறோம் என்று அறிவித்தது, என பல்வேறு விஷயங்களில் எலன் வேற லெவல்தான். இந்தளவு நம்மூரில் யார் இருக்கிறார் என்று யோசித்தால் கொஞ்சம் அருகில் வருபவர் மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மட்டுமே. இந்த கட்டுரை எலனின் நிறுவனங்களைப் பற்றி பேசும் பொறுப்பைக் கொண்டது. தொடங்கலாமா?


பேபால் 

ஆன்லைனில் பணம் கட்டும் சேவை

1.5 பில்லியன் டாலர்களுக்கு நிறுவனத்தை விற்றார் எலன்.

எலன் தொடங்கிய இரண்டாவது ஸ்டார்ட் அப் நிறுவனம் எக்ஸ்.காம். இது ஒரு ஆன்லைன் வங்கி. 1999ஆம் ஆண்டு இதனைத் தொடங்கினார். அதற்குப் பிறகு தொடங்கியதுதான் பேபால், இதனை இபே 2002ஆம் ஆண்டு இவரிடமிருந்து வாங்கிக்கொண்டது. எக்ஸ்.காம் என்ற பெயரை 2017இல் திரும்ப வாங்கிக்கொண்டார். 

டெஸ்லா 

மின் வாகனங்கள்

1.02 ட்ரில்லியன்


2003ஆம் ஆண்டு தொடங்கிய மின் கார் நிறுவனம் இது. பொதுமக்கள் பயணிக்கும் கார்களை தொடங்கும் முன்னரே விளையாட்டு வீர ர்களுக்கான மின் வாகனங்களை தயாரித்து வந்தது. பெட்ரோல், டீசல் என பராசக்தி காலத்திலேயே வாகன நிறுவனங்கள் உருட்டிக்கொண்டிருந்தபோது புதுமையாக யோசித்து சந்தையை இன்று கைக்குள் வைத்திருக்கிறார் எலன் மஸ்க். டைம் இதழுக்கான பேட்டியில், பாரம்பரிய நிறுவனங்கள் எத்தனை கார்களை விற்றாலும் எங்களுக்கு கவலையில்லை என்று தில்லாக பேட்டி கொடுக்கும் அளவு நிறுவனத்தின் மீதும் கார்களின் தொழில்நுட்பம் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார். டெஸ்லாவில் எலன் வைத்திருக்கும் பங்குகள் அதிகம். 

ஸ்பேஸ் எக்ஸ் 

விண்வெளி நிறுவனம்

நூறு பில்லியன் டாலர்கள். 

2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இது. செவ்வாய் கோளுக்கு மக்களைக் கொண்டு செல்லவேண்டும் என்பதுதான் திட்டம் என்று சொல்லி உருவாக்கப்பட்ட நிறுவனம் இது. இன்று வணிகரீதியான விண்வெளி ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் ச்ந்தையில் இதுவே முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தில் பால்கன் ராக்கெட் திரும்ப பயன்படுத்தும் சிறப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது. இதனால் புதிதாக ராக்கெட்டுகளை தயாரித்துக்கொண்டே இருக்கவேண்டியதில்லை. நாசாவுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை தீட்டி சாதித்து வரும் நிறுவனம் இது. 

தி போரிங் கம்பெனி 

பாதாள சுரங்கங்களை வடிவமைக்கும் நிறுவனம் 

920 மில்லியன் டாலர்கள் 

2016ஆம் ஆண்டு சுரங்கப்பாதைகளை அமைக்கும் திட்டத்தை மனதில் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இது. சுரங்கப்பாதை அமைத்து அதன் வழியாக ரயில் போக்குவரத்தை தொடங்குவது எலனின் கனவு. கடந்த ஜூனில் பொது திட்டம் ஒன்றை வெற்றிகரமாக முடித்தார். 

நியூராலிங்க்

மூளை தொடர்பான தொழில்நுட்பம்.

500 மில்லியனுக்கும் அதிகம். 

2016ஆம் ஆண்டு எலன் துணை நிறுவனராக இருந்து தொடங்கிய நிறுவனம் இது. கை, கால்கள் செயலிழந்தவர்களுக்கு உதவும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே நோக்கம். இந்த நிறுவனம் உருவாக்கும் சிப்களை பயன்படுத்தி மனிதர்கள் எந்திரங்களோடு தகவல் தொடர்பு கொள்ள முடியும் என சொல்லுகிறார்கள். இதற்கான ஏராளமான பரிசோதனைகளை செய்து வருகிறார்கள். மருத்துவத்துறையில் இது முக்கியமான கண்டுபிடிப்பு. 

ஓப்பன் ஏஐ

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி

மதிப்பு தெரியவில்லை

2015ஆம் ஆண்டு ஓப்பன் ஏஐ என்ற நிறுவனத்தை துணை நிறுவனராக இருந்து தொடங்கினார். மனிதநேய அடிப்படையில் மக்களுக்கு உதவும் படி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் லட்சியம். 2018ஆம் ஆண்டு எலன் இந்த நிறுவனத்தில் போர்டில் இருந்து விலகிவிட்டார். 

சோலார் சிட்டி

புதுப்பிக்கும் ஆற்றல் 

டெஸ்லாவுக்கு 2.6 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டுவிட்டது. 

2006ஆம் ஆண்டு தனது இரண்டு சகோதர ர்களோடு இணைந்து தொடங்கிய நிறுவனம் இது. இதனை விற்றது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. 

ஜிப் 2

ஆன்லைன் பிஸ்னஸ் டைரக்டரி

307 மில்லியன் டாலர்களுக்கு விற்றாயிற்று

இதுதான் எலனின் முதல் கம்பெனி. தனது சகோதர ர் கிம்பாலுடன் இணைந்து தொடங்கினார். 1999ஆம் ஆண்டு காம்பேக் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். எலனுக்கு கிடைத்த லாபம் 22 மில்லியன் டாலர்கள். 

டைம் இதழ் 










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்