காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நம்பிக்கை - கன்னையா குமார், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்

இடதுசாரி அமைப்புகள் இவருக்கு ஆதரவாக இருந்தபோதிலும் கூட அதிகாரத்திற்கு வர காங்கிரஸ்தான் சரியான கட்சி என அதில் சேர்ந்துவிட்டார். இப்போது பீகாரில் செயல்பட்டு வருகிறார். நேரு பல்கலைக்கழக காலத்திலிருந்து ஜனநாயகத்தை காக்கும் புரட்சி குரலாக ஒலித்து வந்தார். நாடு முழுவதும் இவரது புகைப்படங்கள சென்றன. பிறகு தேர்தலில் நின்றார். பாஜகவின் கிரிராஜ் சிங் என்பவரிடம் தோற்றுப்போனார். ஆனால் இப்போது நாம் கன்னையாவைப் பற்றித்தானே பேசுகிறோம். கிரிராஜைப் பற்றி அல்ல. அதுதான் கன்னையாவின் செல்வாக்கு. இவரின் பேச்சுகளை சமாளிக்க முடியாத பாஜக, உதைப்பதற்குள் ஓடிவிடு என மிரட்டியும் பார்த்தது. அப்போதும் பணியாத ஆள் என்பதால், தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றாவது நினைவுநாளில் தேசவிரோத ஸ்லோகன்களை சொன்னதாக உபா சட்டத்தைப் பயன்படுத்தியது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி இந்த சம்பவம் நடைபெற்றது. 2019இல் தேர்தலில் நின்று தோற்றுப்போனவரை காங்கிரஸ் கட்சி அரவணைத்து ஏற்றுக்கொண்டது. இந்த சம்பவம் நடந்தது செப்டம்பர் மாதம் 28. சவால்கள் இதோடு நின்றுவிடவில்லை. பீகாரில் புகழ்பெற்ற பெரிய கட்சி ஆர்ஜேடி. பெயரைப் பார்த்தால் ஏதோ ரியல் எஸ்டேட் கம்பெனி என நினைக்காதீர்கள். மாட்டுத்தீவன ஊழல் புகழ் லாலுவின் குடும்ப கம்பெனி, மன்னிக்கவும் கட்சிதான் ஆர்ஜேடி. இதனை வழிநடத்தும் தலைவர் தேஜஸ்வி யாதவ். அண்மையில் டெல்லியில்தான் இவர் தனது பள்ளிக்கால தோழியை மணந்தார். இந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், கன்னையா குமாரா யார் அவர் என கிண்டல் செய்து சிரித்தார். அந்த சிரிப்புக்கு எதிர்காலம் உண்டா இல்லையா என்பதை கன்னையா குமாரின் செயல்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தொண்ணூறுகளில் காங்கிரஸ்தான் இங்கு சார்பட்டா பரம்பரையாக இருந்தது. அந்த அதிர்ஷ்டத்தை தனது உழைப்பின் வழியாக கன்னையா குமார் ஏற்படுத்துவாரா என்று இனிமேல்தான் பார்க்கவேண்டும். இந்தியா டுடே அமிதாப் ஸ்ரீவஸ்தவா

கருத்துகள்