கண்களை மூடாமல் வாராது உறக்கம்? - ஸ்லீப் ஃபிட்னஸ் மோகம் பெருகுகிறது
கண்களை மூடாமல் வாராது உறக்கம்? இந்தியாவில் இப்போது முக்கிய பிரச்னையாக உருவாகி இருப்பது, தூக்கமின்மை. வேலையின்மை அளவு கூடிக்கொண்டே செல்வது, வேலையில் உள்ளவர்களுக்கு பெரும் அழுத்தம் தருகிறது. குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைக்கும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இதன் நேரடி விளைவு, தூங்கும் நேரம் குறைவது. இதனால் தூங்கினாலே போதும். உடற்பயிற்சி கூட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறத்தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஸ்லீப் ஃபிட்னெஸ் என்ற வார்த்தை புழக்கத்திற்கு வந்திருக்கிறது. காலையில் எழுந்து அனடோலி(யூட்யூப் பிரபலம்) போல உடற்பயிற்சி செய்வதும் ஒன்றுதான். உழைத்து களைத்த உடலுக்கு, மனதுக்கு ஓய்வளிக்கும் தூக்கமும் ஒன்றுதான் என முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மார்க் ஷூக்கர்பர்க், ஜெஃப் பெசோஸ் ஆகியோர், தூங்கும் வசதிகளைக் கொண்ட நவீன தொழில்களுக்கு முதலீடுகளை வழங்க தொடங்கியிருக்கிறார்கள். தூக்கம்தான் இனி முக்கியம். அதுதான் எதிர்காலம் என உடற்பயிற்சியை கைவிடக்கூறுவது எமது நோக்கமல்ல. உறக்கமின்மை கொண்டவர்கள், ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குப...