கண்களை மூடாமல் வாராது உறக்கம்? - ஸ்லீப் ஃபிட்னஸ் மோகம் பெருகுகிறது

 

 

 

 

 


 


கண்களை மூடாமல் வாராது உறக்கம்?

இந்தியாவில் இப்போது முக்கிய பிரச்னையாக உருவாகி இருப்பது, தூக்கமின்மை. வேலையின்மை அளவு கூடிக்கொண்டே செல்வது, வேலையில் உள்ளவர்களுக்கு பெரும் அழுத்தம் தருகிறது. குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைக்கும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இதன் நேரடி விளைவு, தூங்கும் நேரம் குறைவது. இதனால் தூங்கினாலே போதும். உடற்பயிற்சி கூட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறத்தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஸ்லீப் ஃபிட்னெஸ் என்ற வார்த்தை புழக்கத்திற்கு வந்திருக்கிறது.
காலையில் எழுந்து அனடோலி(யூட்யூப் பிரபலம்) போல உடற்பயிற்சி செய்வதும் ஒன்றுதான். உழைத்து களைத்த உடலுக்கு, மனதுக்கு ஓய்வளிக்கும் தூக்கமும் ஒன்றுதான் என முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.  மார்க் ஷூக்கர்பர்க், ஜெஃப் பெசோஸ் ஆகியோர், தூங்கும் வசதிகளைக் கொண்ட நவீன தொழில்களுக்கு முதலீடுகளை வழங்க தொடங்கியிருக்கிறார்கள்.

தூக்கம்தான் இனி முக்கியம். அதுதான் எதிர்காலம் என உடற்பயிற்சியை கைவிடக்கூறுவது எமது நோக்கமல்ல. உறக்கமின்மை கொண்டவர்கள், ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்கள், சற்று நிதானமாக நேரமெடுத்து உறங்கலாம். அதுவே உடலிலுள்ள பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கும் என மருத்துவ, ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நோய்த்தொற்று, உடல்பருமன், நீரிழிவு, நோய்எதிர்ப்பு சக்தி சார்ந்த நோய்கள், புற்றுநோய் ஆகியவை ஏற்படுவதை நல்ல தரமான தூக்கம் தூங்குபவர்கள் தடுக்க முடியும். உடலைப் பொறுத்தவரை தசைகள் வளர, அதிலுள்ள பழுதுகளை நீக்க தூக்கமே சிறந்த கருவி. சரியாக தூங்காதபோது ஒருவரின் உடலில் உணவு மூலம் பெறும் சத்துகளை உட்கிரகிக்க முடியாது. தினசரி ஐந்து மணிநேரம் மட்டுமே தூங்கும் ஆண்களுக்கு உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்துகொண்டே வரும். உறக்கமின்மை, உறக்க குறைவு பிரச்னைகள லெப்டின், கெரலின் ஆகிய ஹார்மோன்களை பாதிக்கும். லெப்டின், பசி எடுப்பதைக் கட்டுப்படுத்துகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது பசியின்மை, அதிக பசி என இருவேறு பிரச்னைகள் உருவாகும். உடல் திருப்திகரமாக பசியைத் தீர்த்துக்கொண்டுவிட்டதை லெப்டின் மூளைக்கு தகவல் கொடுக்கிறது.

கெரலின், பசி உணர்வை ஏற்படுத்துகிறது. தூக்கம் குறைவாகும்போது, பசி உணர்வு தீவிரமாகிறது. லெப்டின் ஹார்மோன் குறைவும்போது, எவ்வளவு சாப்பிட்டாலும் பசி தீராது.

ஆக, தூக்கம் குறையும்போது உடலின் முக்கியமான ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் இயல்பான செயல்பாடு கோளாறாகிறது.

உடலின் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் இன்சுலின் அளவு குறைந்துபோகிறது. இதனால், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தசை வளராது. உணவில் உள்ள புரதம் உடம்பில் சேராது. தசைகளும் பழுது பார்க்கப்படாது அழற்சி பாதிப்பில் சிக்கும்.



டெக்கன் கிரானிக்கல்
விக்ரம் சர்மா 

pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்