பௌத்தம் அறிவோம் - வழிகாட்டும் புத்தரின் நெறிகள்
புத்தர் காலமாகிவிட்ட நிலையில் அவர் எப்படி நமக்கு உதவி செய்ய முடியும்?
மின்சாரத்தை கண்டறிந்த பாரடே இறந்துவிட்டார்தான். ஆனால் நாம் இன்றும் மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொண்டுதானே இருக்கிறோம். ஆன்டி பயாடிக் மருந்தைக் கண்டுபிடித்து லூயி பாஸ்டர் இன்று நம்மோடு இல்லை. ஆனாலும் கூட அவரின் கண்டுபிடிப்பு மக்களின் உயிரைக் காத்துக்கொண்டுதானே உள்ளது. ஓவியத்துறையில் பல உன்னத படைப்புகளை உருவாக்கிய லியனார்டோ டாவின்சி காலமாகி பல்லாண்டுகள் ஆகிறது. அவரது ஓவியங்களைக் காணும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. ஊக்கம் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறோம் அல்லவா?
வரலாற்று நாயகர்களும், நாயகியரும் இறந்து பல நூறு ஆண்டுகளானாலும் கூட அவர்களின் லட்சியங்கள், நம்பிக்கை நமக்கு ஊக்கம் கொடுப்பவை. நீங்கள் கூறியதுபோல புத்தர் காலமாகி இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். ஆனால், அவர் கற்பித்த கொள்கைகள், நெறிகள், கூறிய அறம், காட்டிய பாதை இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு ஊக்கம் தந்து வருகிறது. வழிகாட்டியாக அமைந்துள்ளது. புத்தரின் வார்த்தைகள் பல நூறு மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இறந்து பல நூறு ஆண்டுகளாயினும் புத்தருக்கு மட்டுமே இப்படியான ஆற்றல் உள்ளது.
புத்தாநெட்.நெட்
கருத்துகள்
கருத்துரையிடுக