டைம் 100 - நீரிழிவு, உடல் பருமன் தொடர்பாக ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள்

 

 

 

 


 

 

 


ஸ்வெட்லானா மோஜ்சோவ், ஜோயல் ஹேபனர், டான் டிரக்கர்
ஆராய்ச்சியாளர்கள்
svetlana mojsov
joel habener
dan drucker

நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியமான விஷயம் என்றால், அந்நோய் காரணமாக அதிகரிக்கும் உடல் எடை இன்னொரு பெரிய பிரச்னை. எனவே, உடல் எடையைக் கட்டுப்படுத்துவது பற்றி அமெரிக்கா, ஐரோப்பா என உலகமெல்லாம் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நீரிழிவு நோய்க்கும் அதோடு தொடர்புடைய இன்சுலின், இன்கிரிடின்ஸ் ஆகியவற்றைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன் வழியாக குளுகாகோன்ஸ் என்ற ஹார்மோனுக்கும் உடல் எடைக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.

கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் குடல் அறுவை சிகிச்சையொன்று நடைபெற்றது. அதில், குளுகாகோன், இன்சுலின் அளவை அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர் ஜென்ஸ் ஜூல் ஹோஸ்ட் அடையாளம் கண்டார். இந்த நேரத்தில் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த டான் டிரக்கர், ஜோயல் ஹேபனர் ஆகியோர் ஜிஎல்பி -1 எனும் குளுகாகோன் வடிவத்தைக் கண்டறிந்தனர். டிரக்கர், ஜிஎல்பி-1 வடிவத்தை துல்லியமாக கண்டறிந்து இன்சுலினை அதிகரிப்பதை அடையாளம் கண்டுள்ளார். இதை மையமாக வைத்து செய்யப்படும் உடல் பருமன், நீரிழிவு சிகிச்சைகளுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்துகளைப் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு இதய நோய், அல்சீமர், பார்க்கின்சன், சிறுநீரக, கல்லீரல் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும் குறைகிறது என்பது சாதகமான அம்சம்.



டைம் 100
அலைஸ் பார்க்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்