இடுகைகள்

பட்ஜெட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் வறுமையில் வாடும் குழந்தைகள்!

படம்
  அமெரிக்காவில் வறுமை விளிம்பில் தள்ளப்படும் சிறுவர்கள்! அமெரிக்காவில் வறுமை நிலையில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. இதை அமெரிக்க அரசின் மக்கள்தொகை அமைப்பு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு, 5.2 சதவீதமாக இருந்த வறுமை நிலையிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது 12.4 சதவீத்த்திற்கும் அதிகமாக உள்ளது. அமெரிக்க அரசும் கையைக் கட்டிக்கொண்டு சும்மாயிருக்கவில்லை. குழந்தை வரி கடன் திட்டம் என்பதை அமல்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்கள் தொழில் செய்து வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குழந்தைக்கு 3,600 டாலர்கள் வரியைக் கடனாக கொடுக்கிறார்கள். இத்தொகையை அரசு வரி வருவாயில் இருந்து விட்டுக்கொடுக்கிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் குறைந்தாலும் கூட குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு இந்த திட்டம் மூலம எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை . ஆனால் எதிர்காலத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் தோல்வி என்று இல்லாமல் அரசின் கொள்கை ரீதியான முடிவுகளே

பணம் கையாளப் பழகுவோம் - பட்ஜெட் திட்டம்

படம்
        4 பணம் கையாளப் பழகுவோம் பட்ஜெட் திட்டம் இந்திய அரசு , ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை ( பட்ஜெட் ) உருவாக்குகிறது . அதில்தான் நாட்டில் வருமானம் , செலவு , பற்றாக்குறை ஆகிய விஷயங்கள் இடம்பெறும் . அனைத்து மக்களுக்கும் என்னென்ன திட்டங்களுக்கு அரசு செலவு செய்கிறது என மக்களுக்கும் தெளிவாகும் . தனிப்பட்ட முறையில் நாமும் வாரம் தோறும் , மாதந்தோறும் , ஆண்டுதோறும் செய்யும் செலவுகளையும் , சேமிப்பையும் கண்டறிய பட்ஜெட் போடுவது அவசியம் . தனிமனிதராக ஒருவர் தனது எதிர்கால வருமானத்தை யூகித்து பட்ஜெட் போடுவது அவசியம் . அப்போதுதான் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து அவர் முன்னேற முடியும் . ஒருவரின் நிதி நிர்வாகத்திறனை முன்னேற்றுவதற்கே பட்ஜெட் உருவாக்கப்படுகிறது . சேமிப்பு சேமிப்பு = வருமானம் - செலவு வருமானத்திலிருந்து செலவைக் கழித்தால் கிடைப்பதுதான் ஒருவரின் சேமிப்பு . செலவு = வருமானம் - சேமிப்பு வருமானத்திலிருந்து சேமிப்பைக் கழிப்பது போக கிடைப்பதுதான் செலவு . ஒருவர் தான் செய்யும் செலவுகளைத் திட்டமிட்டு , வருமானத்தில் ஒருபகுதியை சேமிப்து அவசியம் ப

தினசரி வாழ்க்கையில் பயன்படும் எளிமையான ஆப்கள் இவை!

படம்
  ஆப்கள் ஓட்டெர் வாய்ஸ் மீட்டிங் நோட்ஸ் இது ஒரு டிக்டேஷன் ஆப். எனவே யார் பேசினாலும் நீங்கள் அதனை ரெக்கார்ட் செய்து வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். நேர்காணல், ஆசிரியரின் உரைகள், சந்திப்புகள் என அனைத்தையும் ஆடியோ டூ எழுத்தாக கூட மாற்றிக்கொள்ளும் வசதியை தருகிறார்கள். கூகுள் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. மன்த்லி பட்ஜெட் பிளானர், டெய்லி எக்ஸ்பென்ஸ் டிராக்கர். தலைப்பில் சொல்லிவிட்டோமே அதுதான் விஷயம். நாயர் கடையில் டீ குடித்துவிட்டு மிச்ச சில்லறைக்கு சென்டர் பிரஷ் வாங்குவது வ்ரையில் அனைத்து விஷயங்களையும் இதில் பதிவு செய்து கணக்கு பார்த்து பட்ஜெட் போடலாம். ஆக்ட் ஆப் காட் என்று பழி சொல்லாதபடி கணக்கு வழக்குகளை சுத்தமாக கணக்கு போட்டு காட்டுகிறது இந்த ஆப். பிளே ஸ்டோர் கிராமர்லி ஆப் இலக்கணத்திற்கான உதவியாளர். நீங்கள் எழுதும் வார்த்தைகள் ஆங்கிலத்தில் சரியானபடி உள்ளதா என கண்டுபிடித்து பாலீஷ் போட்டு நம் மாண்பைக் காக்கிறது. நீங்கள் செய்யும் அசைன்மெண்டுகளில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்து சொல்லுகிறது. பிளே ஸ்டோர் ஆன்டி சோசியல் போன் அடிக்‌ஷன் நீங்கள் செய்யும் வேலைகளைக் கண்காணித்து உங்களை எச்சரிக்கிறது. இதனா

கல்விக்கான நிதியை வெட்டும் இந்திய அரசு!

படம்
pixabay இந்திய அரசு, கல்விக்கான பட்ஜெட் தொகை குறைந்து வருவதால், மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.  கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்விக்கான பட்ஜெட் தொகை பெருமளவில் வெட்டப்பட்டு வருகிறது. இதனால், பட்டியலின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலுள்ள அரசு கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் தம் கல்விக்கட்டணங்களை அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள பட்டியலின மாணவர்கள் (SC,ST), கல்வி கற்கும் சதவீதம் 20 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஎஸ்இ வாரியம், பத்தாவது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுக் கட்டணங்களை உயர்த்தியது. இதன்விளைவாக எஸ்.சி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.50லிருந்து ரூ.1,500 ஆக அதிகரித்தது. இதோடு ஐஐடி, எய்ம்ஸ், ஜேஎன்யு ஆகிய கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணங்களும் கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. 2014- 15 லிருந்து 2019 -2020 வரையிலான காலகட்டத்தில் கல்விக்கான அரசின் செலவு 4.1லிருந்து 3.4 ஆக சரிந்துள்ளது. இதன் விளைவாக, ம

கிஃப்ட் வாங்குவதில் என்ன குழப்பம்?

படம்
மிஸ்டர் ரோனி கிறிஸ்துமஸ், பிறந்தநாள், புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளின்போது என்ன பரிசு பிறருக்கு கொடுப்பது என்று குழப்பம் ஏற்படுகிறது என்ன செய்வது? யாருக்கு பரிசு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு என்ன உதவும் என்று பார்த்து பரிசு கொடுங்கள். அதற்கு என்று ஜட்டி, பனியன் வாங்கி தரக்கூடாது. அதெல்லாம் அவரே பார்த்து வாங்கிக்கொள்வார். இன்று பெரும்பாலும் அமேசான், ஃபிளிப்கார்ட்டில் விஷ் லிஸ்டை தயாரித்து வைத்துவிடுகின்றனர். பிறந்தநாளின்போது, அதைப்பார்த்து அதில் ஒன்றை வாங்கிக்கொடுங்கள் என்கிறார்கள். கல்யாணத்திற்கு கூட மொய் எழுதுவதை விட வீட்டுக்கு தேவையான பொருட்களாக கொடுக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஆபீஸ் சார்பில் கொடுத்துவிடலாம். வேறு எதுவுமே மண்டையில் தோன்றவில்லையா? இரண்டு ரூபாய்க்கு மொய் கவர் வாங்கி அதில் காசை வைத்து கொடுத்துவிடலாம். யாருக்கு கொடுக்கிறோமே அவருக்கு நம்முடைய விருப்பம், ஆசை, ஈடுபாடு சார்ந்தும் பரிசுகளை வாங்கிக் கொடுக்கலாம். அதேசமயம் அவர்களுக்கு பயன்படும்படு இருக்கவேண்டியது முக்கியம். இதற்கெல்லாமா கவலைப்படுவது? பட்ஜெட் போடுங்கள் அப்புறம் அதற்கேற்ப கிஃப்ட் தேடுங்கள்

பிட்ஸ் - இஸ்ரோவின் சாதனைகள்!

படம்
இஸ்ரோ - சாதனைத் துளிகள் 1981ஆம் ஆண்டு, இஸ்ரோவின் ஆப்பிள் செயற்கைக்கோள் மாட்டுவண்டியில் வைத்துக் கொண்டுவரப்பட்டது. மோட்டார் வண்டிகளில் கொண்டு வரும்போது, அதிலுள்ள உலோகங்களோடு ஆன்டெனாவின் சிக்னல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கருதினர். 2013 ஆம் ஆண்டு இஸ்ரோ, செவ்வாயை ஆராய்வதற்கான விண்கலமாக மங்கல்யானை விண்ணில் ஏவியது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற இத்திட்டத்தின் செலவு 450 கோடி ரூபாய். 2008ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்ற சந்திரயான் 1, நிலவில் தடம் பதித்த நாடுகளில் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குக் கொடுத்தது. இஸ்ரோ கடந்த நாற்பது ஆண்டுகளாக செய்த பணிகளுக்கான செலவுத்தொகை, நாசாவின் ஓராண்டு பட்ஜெட்டில் அடங்கிவிடும். இஸ்ரோவின் வர்த்தக ராக்கெட் ஏவும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் (Antrix), 2008 ஆம் ஆண்டு இந்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்றது. 2016 -2019 வரையில் 239 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, 6,289 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.  இஸ்ரோ, பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சுபார்கோ தொடங்கியபிறகு ஆறு ஆண்டுகள் கழித்து தொடங்கப்பட்டது. இன்று இஸ்ர

கல்வித்துறைக்கு நிதி எவ்வளவு?

படம்
பட்ஜெட்டில் கல்வித்துறையின் பங்கு! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் கல்வித்துறைக்கான சில திட்டங்களை நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.  இத்திட்டங்கள் கல்வியின் தரத்தை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது. ரூ.400 கோடி ரூபாய் செலவில் கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய கல்வி நிறுவனங்களின் தரம் உலக கல்வி நிறுவனங்களுக்கு நிகராக உயரும். 2019-20 ஆம் ஆண்டில் ஸ்டடி இந்தியா எனும் திட்டத்தை அரசு உருவாக்க உள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவுக்கு கல்வி கற்க ஈர்ப்பது நோக்கம். இம்முறையில் இந்தியா முக்கியமான கல்வி மையமாக உருவாகும். தேசிய விளையாட்டுக்கல்வி போர்ட்டில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டுக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகளை முழுமுனைப்புடன் செய்ய, தேசிய ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை இந்திய அரசு நிறுவ உள்ளது. இந்த அமைப்பு, மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கான நிதியை ஒதுக்கும். கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு த