உலகளவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் ஷியாவோஹாங்சு ஆப்(ரெட்நோட்)
உலகளவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் ஷியாவோஹாங்சு ஆப்(ரெட்நோட்) 2013ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் ஷியாவோஹாங்சு என்ற ஆப்பை மிராண்டா க்யுவும் அவரது நண்பரும் சேர்ந்து தொடங்கினர். இந்த ஆப், இன்று முன்னூறு மில்லியன் பயனர்களுக்கு மேல் கொண்டுள்ள சமூக வலைத்தள ஆப்பாக மாறியுள்ளது. மிராண்டா க்யூ, பார்ச்சூன் ஆசியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் கூட இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். ஷியாவோஹாங்சூ என்ற வார்த்தைக்கு சிறிய சிவப்பு புத்தகம் என்று அர்த்தம். சீனாவை, மக்கள் சீன குடியரசாக போராடி உருவாக்கிய மாவோசேதுங்கின் மேற்கோளைத்தான் நிறுவனத்திற்கு பெயராக வைத்திருக்கிறார்கள். பெயர் மட்டும்தான் இப்படி. மற்ற விஷயங்கள் எல்லாமே நவீனமாக உள்ளது. குறிப்பாக, பொருட்களை வாங்குவது, சுற்றுலா தளங்களை பிரபலப்படுத்துவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீன ஆப் இயங்குகிறது. சீனாவில் உள்ளவர்கள், ஷியாவோஹாங்சு ஆப் மூலமாக உள்நாடு, தெற்காசியா முழுக்க பல்வேறு நாடுகளுக்கு பயணித்து சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார்கள். அண்மையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் கூட அங்குள்ள உணவகங்கள் இந்த சீன ஆப்பின் லோ...