யூட்யூபில் கலக்கும் சீன ஷார்ட் டிராமாக்கள்! சூப் விற்று குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவரும் நாயகி!
சீன ஷார்ட் டிராமாக்கள் முதல் கதை, இளம்பெண் படுக்கையில் விபத்துக்குள்ளாகி படுத்திருக்கிறாள். எழும்போதுதான் தெரிகிறது. அவளுடைய உடலில் நவீனகால இளம்பெண்ணின் ஆன்மா இடம்பெயர்ந்திருக்கிறது. காலப்பயண ஷார்ட் டிராமா இந்த டிராமாக்கள் தரத்தில் சன்டிவி சீரியல்களைப் போன்றவை. மிகையான நடிப்பு, பொல்லாத வில்லத்தனம் ஆகியவை உள்ளவை. இளம்பெண்ணுக்கு இரண்டு அண்ணன்கள் உண்டு. இருவருமே சம்பாதிக்க தெரியாதவர்கள். மணமானவர்கள் என்றாலும் தங்கையின் பேச்சை கேட்டு நடப்பவர்கள். அந்த இளம்பெண்ணோ, தான் காதலிப்பவனுக்காக அண்ணன் மனைவி வளர்க்கும் கோழி, ஆடுகளை கூட திருடிக்கொண்டு விற்று செலவழிக்கும் முட்டாள். இதை இளம்பெண் புரிந்துகொண்டு தனது குடும்பத்தை எப்படி செல்வம் கொண்டதாக வளர்த்து எடுக்கிறாள் என்பதே கதை. இளம்பெண்ணுக்கு தான் வாழும் காலத்தை தாண்டிய எதிர்கால அறிவு உண்டு. எனவே, அதை வைத்து பணம் சம்பாதிக்க முயல்கிறாள். முதலில், பதினான்கு பேர் கொண்ட பெரிய குடும்பத்திற்கு சாப்பிடும் அளவுக்கு அரிசியோ, பருப்போ எதுவுமே இருப்பில் இல்லை. இல்லை என்றால் சம்பாதிக்கவில்லை என்றல்ல. அவர்கள் செய்த தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில...