இடுகைகள்

கருப்புக்கோடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணில் கருப்புக்கோடு கொண்ட பழுப்பு கீச்சான் !

படம்
  தரைவாழ் பறவைகள் பழுப்பு கீச்சான் ) அறிவியல் பெயர்:  லானியஸ் கிரிஸ்டாடஸ் (Lanius cristatus) குடும்பம்: Laniidae இனம்: எல்.கிரிஸ்டாடஸ் (L. cristatus) சிறப்பு அம்சங்கள்: ஆண் பறவையின் தலை, பழுப்பு நிறத்திலும், பெண் பறவையின் தலை, சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். பழுப்பு கீச்சானின் பின்புறப்பகுதியில், சிறு பிளவு காணப்படும். கண்ணுக்கு அருகில் காணப்படும் கருப்புக்கோடு இதன் முக்கிய அடையாளம்.இதற்குமேல் வெள்ளைநிற புருவம் அமைந்துள்ளது. புதர்ப்பகுதிகளில் பழுப்புக் கீச்சானைக் காணலாம். சிறுபூச்சிகள், பல்லிகள், சிலந்திகளை உண்கிறது. எங்கு பார்க்கலாம்: மத்திய, கிழக்காசியாவைச் சேர்ந்த காட்டுப்பகுதி, பாலைவனம், சதுப்புநிலத்தில் பார்க்கலாம்  ஐயுசிஎன்: அழியும் அச்சுறுத்தல் நிலையில் இல்லாதவை (Least Concern LC) ஆயுள்: 4 ஆண்டுகள் முட்டைகளின் எண்ணிக்கை: 2 - 6 எழுப்பும் ஒலி: கீச்...கிர்...(Keech..kirr) https://www.beautyofbirds.com/brownshrikes.html https://dibird.com/species/brown-shrike/