இடுகைகள்

அசுரகுலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசுரகுல தலைவரின் இரண்டாவது பிறப்பு

படம்
  பாத் ஆஃப் சாமன்ஸ் காமிக்ஸ் மங்காபேட்.காம் அசுரகுல இனக்குழுவைச் சேர்ந்த தலைவர் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவருக்கு எமனின் அழைப்பு மூன்று முறை கேட்டால் உயிர் பிரிந்துவிடும். இந்த நிலையில், அவரது விசுவாச சீடன் யூம்யங் அமர வாழ்க்கை தரும் மூலிகையை கொண்டு வந்து வாயில் பிழிகிறான். இதனால், அவரது உடல் பலம் பெறுகிறது. அதேசமயம், ஆன்மா உடலை விட்டு வெளியே வருகிறது. அதை எமன் கொண்டு போக நினைக்கிறார். ஆனால் உடல் மூலிகையால் பலம் பெற்றவுடன் ஆன்மா உள்ளே நுழைய முயல்கிறது. உண்மையில் தலைவருக்கு பணம், செல்வாக்கு, மனைவிகள் என அனைத்துமே கிடைத்தும் நினைத்த லட்சியங்களை அடையமுடியவில்லை. அதை அடையவே அமரத்துவ வாழ்வை பெற நினைக்கிறார்.  இம்முறை எமன் செய்த விளையாட்டால் அவரது உயிர், வுடாங் இனக்குழுவில் தாவோயிசம் பயிலும் மாணவன் உடலில் புகுந்துவிடுகிறது. அந்த மாணவனுக்கு அசுரகுல தலைவரின் நினைவுகளும் உள்ளது. அந்த மாணவனின் உடலில் உள்ள இயற்கையான நினைவுகளும் இருக்கிறது. இந்த பிறப்பில் அசுரகுல தலைவர் அவரது இயல்பான தீயசக்திகளை பயன்படுத்த முடியாமல் போகிறது. அதேசமயம் அவரது எதிரிகளை நண்பர்கள் என்ற முறையில் சந்திக்க நேரிடுகிறது

அசுரகுலம் 5 - ரகசிய நரகம் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  ரகசிய நரகம், அசுரகுலம் தொடர்வரிசையில் ஐந்தாவது நூல். இந்த சிறுநூல், குற்றங்களை செய்வதில் உள்ள பல்வேறு உளவியல் அணுகுமுறைகளை ஆராய்கிறது. சிக்மண்ட் பிராய்ட் தொடங்கி அதற்கு பிறகு உருவான உளவியல் கோட்பாடுகள், குற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை எளிமையாக விளக்குகிறது. நூல்களை அமேஸானில் தரவிறக்கி வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BTY7MZQV

மதமும், மாந்த்ரீகமும் மனிதர்களை வேட்டையாடியபோது....

படம்
அசுரகுலம் - ரத்தசாட்சி  நிறைய கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ள தொடர் கொலைகாரர், நான்கு இடங்களையாவது தேர்வு செய்து கொல்வார்.  உள்ளூர், வெளியூர் என இடங்கள் மாறுபடுவது உண்டு. செய்யும் கொலைகளுக்கான இடைவெளி என்பது மெல்லல குறையும். இது கொலை செய்வதன் மகிழ்ச்சி காரணமாக ஏற்படுவது. மகிழ்ச்சியும் அதிகம் கிடைக்கவேண்டுமென்பது அழுத்தமாக மாறும்போது கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொலை செய்வதற்கான இடைவெளி இருக்கிறதென்றால், கொலைகாரர் நேரம், தயாரிப்பு, திட்டமிடல் ஆகியவற்றை செய்துகொண்டிருக்கிறார் என உறுதியாக கூறலாம். கொலை செய்யும் தொடர் கொலைகாரர்களுக்கு நோக்கம் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். கொலை செய்தால் மனது சந்தோஷமாக இருக்கிறது என ஒருவர் சொன்னால் அவரை நீங்கள் என்ன சொல்வீர்கள்? புணர்ச்சி, திருட்டு, கொள்ளை என லட்சியத்திற்காக மனிதர்களை கொல்பவர்களே அதிகம். முதல் சீரியல் கொலைகாரர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வந்திருக்கும். இங்கிலாந்தில் மக்களை இரவில் தெருவிறங்கி நடக்கவே யோசிக்கவைத்த கொலையாளி  ஜேக் தி ரிப்பர்.ஆறு வாரங்களில் நான்கு கொலைகளை செய்து உலக ஊடகங்களை லண்டனின் ஒயிட்சாப்பல் பகுதியை நோக்கி திர

வாழ்க்கையை அழித்த வசை! - இனவெறி, கருப்பினத்தவர்களின் குற்றங்கள், பெண் கொலைகாரர்கள், சிறுவயது சைக்கோ கொலைகாரன் ...

படம்
                  மனதைக் கொல்லும் வார்த்தை ! உணர்ச்சிகளை பகிரங்கமாக வெளிப்படுத்துவது , கோபத்தை , பொறாமையை , விரோதத்தை , வன்மத்தை , பகையை நேரடியாக வெளிப்படுத்துவது அதற்கான விளைவுகளை கூடவே எடுத்துவரும் . அதற்கான உதாரணம் எட்மண்ட் கெம்பர் . இவரைப் பற்றி அசுரகுலம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது . இப்போது அவரது வாழ்க்கையை சுருக்கமாக பார்க்கலாம் . அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாத குழந்தை . ஆறடி ஒன்பது அங்குல ஆளுமை . ஆனால் மனதளவில் அன்பும் அங்கீகாரமும் கிடைக்காத காரணத்தால் புறக்கணிப்பை எதிர்கொள்ள முடியாமல் பெண்களை கொல்வதே அவர்கள் தன்னை மறுக்காமலிருக்கும் வழி என முடிவுக்கு வந்தவர் . இதற்கு ஒரே காரணம் , அவரது அம்மா . தினந்தோறும் சித்திரவதையான வார்த்தைகள் , தண்டனைகள் என அம்மாவிடம் இருந்து கிடைத்த அத்தனையும் மனதில் வன்முறையாக மாறத் தொடங்க , விலங்குகளை துன்புறுத்தி மகிழத் தொடங்கினார் . கொன்று புதைப்பது , உயிரோடு புதைப்பது என தொடங்கிய பழக்கம் மெல்ல முன்னேறி இறந்த உடல்களில் அருகில் சுய இன்பம் அனுபவிப்பது வரை வளர்ந்தது . பள்ளியில் பலரும் சூப்பர்மேன்களாக மாறி மக்களைக் கா