இடுகைகள்

பணவீக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்க்கரையும் சந்தை நிலவரமும் எப்போதும் கலவரம்தான்!

படம்
            மதிப்பிற்குரிய பொன்னி சர்க்கரை விநியோக குழுவினருக்கு, வணக்கம். நான் தங்களுடைய பொன்னி சர்க்கரையை, கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். பொடி போல இல்லாமல் சர்க்கரை பெரிதாக தரமாக இருக்கிறது. தொடக்கத்தில் ஒரு கிலோ பாக்கெட் சற்று அளவில் பெரிதாக இருந்தது. பிறகு, பாக்கெட் சற்று கச்சிதமாக்கப்பட்டது நல்ல முயற்சி. பொன்னி சர்க்கரை விலை அதிகபட்ச வரி உட்பட ரூ.55 என அச்சிடப்பட்டுள்ளது. கடையில் விநியோகம் செய்யும்போது என்ன விலைக்கு கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.45க்கு விற்ற சர்க்கரை, பத்து நாட்கள் இடைவெளியில் ரூ.48 என விலை கூடிவிட்டது.  இந்த ரீதியில் சென்றால், விரைவில் நீங்கள் பாக்கெட்டில் அச்சிட்ட விலையை மூன்று மாதங்களில் அடைந்துவிடலாம். தரம் சிறப்பாக உள்ளது. எனவே, விலை நிர்ணயத்தில் நீங்கள் சற்று கவனம் செலுத்தினால் பொன்னி சர்க்கரை, வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புள்ளது. கிராமப்புறம் சார்ந்த கடைகளில் சர்க்கரையை மூட்டையாக வாங்கி எடுத்து வந்து விற்கிறார்கள். அதன் தரம் அந்தளவு சிறப்பாக இல்லை. ஏற...

திவாலாகும் வங்கி!

படம்
        பாயும் பொருளாதாரம் 15 திவாலாகும் வங்கி உள்நாட்டு உற்பத்திக்கு அரசு சில தொழில்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. சில இனக்குழுவினரின் உழைப்பை கருத்தில் கொள்வதில்லை. இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. முறையாக அவர்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள். அவர்களின் வருமானம் ஆவணங்களில் பதிவாகியிருக்காது. வங்கியில் கடன் பெறவும் மாட்டார்கள். உண்மையில் நிறைய பெண்கள் திருமணத்திற்கு முன்னர் வேலைக்குப் போய் சம்பாதிப்பார்கள். திருமணமான பிறகு வீட்டில் சமையல் வேலை பார்த்து சட்டி கழுவிக்கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்று வம்சத்தை தழைக்க வைப்பார்கள். அவர்களை வேலை செய்கிறார்கள் என யாரும் கருதுவதில்லை. பெண்கள் தங்களின் சொந்த செலவுக்கு கூட வேலை செய்யும் கணவனை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள். சில நிறுவனங்களில் பாலின பாகுபாடு உண்டு. ஒரே வேலை ஆனால் ஆணுக்கு ஒரு சம்பளம், பெண்ணுக்கு ஒரு சம்பளம் என தரம் பார்ப்பார்கள். சாதி, மதம், இனம் பார்த்து சம்பளம் போடும் கிறுக்கு புத்திக்காரர்களும் நிறுவனத்தில் உண்டு. ஏன் இப்படி குறைத்து சம்பளம் போடுகிறீர்கள் என்றால் அதற்கு உனக்கான தகுதி இதுத...

வட்டி விகிதம் ஏற்படுத்தும் சாதக, பாதகங்கள்! - பாயும் பொருளாதாரம்

        பாயும் பொருளாதாரம் 8 வட்டி விகிதம் ஏற்படுத்தும் சாதக, பாதகங்கள்! உள்நாட்டு உற்பத்தி குறைவைப் பற்றி பேசினோம் அல்லவா? கும்பமேளாவுக்கு மக்களை ரயிலில் கூட்டிவந்து ஆற்றில் குளிக்கவைப்பதை விட அரசுக்கு நிறைய கடமைகள் பொறுப்புகள் உள்ளன. மும்பையில் முஸ்லீம் நடிகரைக் கத்தியால் குத்திவிட்டார்கள். அவர் முஸ்லீம் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என மதவாத கட்சி வாதிடக்கூடும். பொருட்களின் விலை ஆண்டுதோறும் ஏறிக்கொண்டேதான் இருக்கும். அதை பணவீக்கம் எனலாம். மக்களின் வருமானம் உயர்ந்தால் பணவீக்கம் பற்றி பல்வேறு வர்க்க மக்களும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், வருமானம் குறைந்து வேலைநேரம் அதிகரித்து பொருட்களின் விலையும் விண்ணுக்கு ஏறினால் மக்கள் வெளிப்படையாக பேசுவார்கள். கைக்கூலி ஊடகங்கள் முணுமுணுப்பாக பேசிவிட்டு, கோவில் குடமுழுக்கு, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு, பற்பசையில் உப்பு இல்லை என திசைதிருப்ப பல பிரச்னைகள் உண்டுதானே? விலைவாசி உயர்வு, வேலையின்மை என பல்வேறு காரணங்களால் மக்கள் காசை செலவழிக்காமல் சேமித்து வைப்பார்கள். இப்படியான சூழலில் விலைபோகாத பொருட்கள், மெல்ல விலை குறையு...

மக்கள் அமைப்பாக திரண்டு கேள்வி கேட்க வேண்டும் - பாயும் பொருளாதாரம்

படம்
      4 பாயும் பொருளாதாரம் கனிம வளங்களைப் பொறுத்தவரை அவற்றை ஒருமுறை விற்றுவிட்டால் பிறகு அதை பெற முடியாது. அவை தீர்ந்துவிடக்கூடிய வளங்கள். மேய்ச்சல் நிலம் உள்ளது என்றால் அங்கு செம்மறி ஆடுகளை ஓட்டிச்சென்று மேய்ப்பார்கள். பலரும் ஒருவரை பின்பற்றி ஒருவர் என மேய்ச்சல் தொழிலை செய்வார்கள். இதெல்லாமே லாபம் வருவதைப் பொறுத்துத்தான். லாபம் வந்தால் அந்த தொழில் இல்லையா வேறு தொழில். குறிப்பிட்ட கிராமத்தினரே மேய்ச்சல் நிலத்தை அடிப்படையாக கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்றால் நிலைமை என்னாகும்? மேய்ச்சல் வெளி ஆதாரம் புல். அது விரைவில் தீர்ந்துபோகும். அப்போது ஆடுகளுக்கு உணவிற்கு என்ன செய்வது? மக்கள் குறிப்பிட்ட மரங்களை, வைப்பு நிதி திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு அவர் செய்கிறார் இவர் செய்கிறார் என இறங்கி செய்தால் மோசம் போவது உறுதி. அனைவருமே ஒரே திசை நோக்கி சென்றால் இயற்கை வளங்களை பகிர்ந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு மங்கும். புதிய யோசனைகளில் தொழில்களை செய்யவேண்டும். பாருங்கள் இளம் ஸ்டார்ட்அப் மாணிக்கங்கள், தோசைகளில் புதுமை செய்கிறார்கள். வாசனைப் பொருட்களில் சமோசா போன்ற வாசனைகளை கொண்டு வருகிறா...

பாயும் பொருளாதாரம் - பொருளாதாரத்தை அறிந்தால், பொருளாதார வல்லுநர்கள் நம்மை ஏமாற்றுவதைத் தடுக்கலாம்!

படம்
              பாயும் பொருளாதாரம் பொருளாதாரம் இந்தியாவில் ரூபாய் மதிப்பு தடுமாறிக்கொண்டிருக்கிறது. வேலையிழப்பு பரவலாகி வருகிறது. விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் உண்ணாவிரதம் கூட இருக்கிறார்கள். எதேச்சதிகார ஆட்சியில் அகிம்சை எப்படி எடுபடும் என்று தெரியவில்லை. சுயதொழில் செய்பவர்கள் நிலைமை எப்படியோ, ஆனால், மாதச்சம்பளக்காரர்களிடம் பறிக்கும் வரிக்கொள்கை புதிதாக அமலாகிவிட்டது. மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு சேவை வரி பதினெட்டு சதவீதம் என்றால், பணக்காரர்களுக்கு அத்தியாவசியமான வைரத்திற்கு ஐந்து சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவ்வளவு வரி தீவிரவாதம் அதிகரித்தாலும் கல்வி, மருத்துவம், தங்குமிடம், உணவு என பலவற்றுக்கும் அரசு எந்த பொறுப்பும் ஏற்காது. இதையெல்லாம் தனியார் நிறுவனங்களிடம் தள்ளிவிட்டுவிடுகிறார்கள். பொருளாதாரம் பற்றி அறிந்துகொண்டால் அதைப்பற்றிய விழிப்புணர்வைப் பெற்று நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும். அதைப்பற்றிய அறிமுகத் தொடர் இது. பொருளாதாரம் என்றால் வங்கிகள், பங்குச்சந்தை, அப்புறம் வினோதமான வரைபடங்கள் என ட...

எர்டோகனுக்கு ஆதரவில்லாத நிலைமை - உள்ளூர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி

படம்
  துருக்கியில் அதிபருக்கு எதிரான நிலை - உள்ளூர் நிர்வாகத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி துருக்கியில் அதிபராக உள்ளவர் ரிசெப் எர்டோகன். இவரது கட்சி, நீதி மேம்பாட்டு கட்சி. அண்மையில் அங்கு நடந்த உள்ளூர் தேர்தலில் அவரது கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இருபது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிகாரத்தை சுவைத்து வரும் எர்டோகனுக்கு இது பெரிய சறுக்கல்.  துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி, குடியரசு மக்கள் கட்சி. இந்த கட்சியினர், உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டு 36 முனிசிபாலிட்டிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர், புர்சா, அன்டால்யா ஆகிய முக்கிய நகரங்கள் உள்ளடங்கும்.  தேசிய அளவிலான தேர்தலில் எர்டோகன் வென்று ஓராண்டு கூட நிறைவடையவில்லை. அதற்குள் அதிபருக்கும், அவரது கட்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  தேர்தலில் எதிர்க்கட்சிகள் 37 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. 2019ஆம் ஆண்டு 44 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அதிபரின் நீதி மேம்பாட்டுக் கட்சி, 36 சதவீத வாக்குகளை உள்ளூர் தேர்தலில் பெற்றது. அதிபரின் கட்சி, இஸ்தான்புல் நகரை இழந்து...

ஜிடிபி பற்றி தெளிவாக புரிந்துகொள்வோம் வாங்க! - எது உண்மை, எது பொய்?

படம்
  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்றால் என்ன? ஒரு நாட்டின் எல்லைக்குள், குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருள், வழங்கப்படும் சேவைகளின் பண மதிப்பு அல்லது சந்தை மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி எனலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, நாட்டின் பொருளாதார நலத்தைப் புரிந்துகொள்ள உதவும் மதிப்பெண் அட்டை போல…. பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆண்டுதோறும் அல்லது காலாண்டு அடிப்படையிலும் கணக்கிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில், காலாண்டு அடிப்படையில் ஆண்டு முழுக்கவுமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுகிறார்கள். இப்படி பெறும் தகவல்களில் பணவீக்கத்திற்கு ஏற்ப பொருட்களின் விலைகளில் சற்று மாறுதல்கள் செய்யப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் புரிந்துகொள்வது எப்படி? அரசு செய்யும் செலவுகள், முதலீடுகள், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், செலுத்தப்பட்டுவிட்ட கட்டுமானச் செலவுகள், தனியார் நிறுவனங்களின் சரக்குகள், மக்களின் நுகர்வு, ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு ஆகியவை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படும். இறக்குமதி  செய்த பொருட்களின் மதிப்...

ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்?

படம்
  முதலீட்டின் தேவை 1 ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்? நாம் இந்த கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பாக, ஒருவர் முதலீடு செய்யவில்லை என்றால் அவரின் நிலை என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். தோராயமாக நீங்கள் மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் ரூ.30 ஆயிரத்தை வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து, பொருட்கள் வாங்குவது, மருத்துவ சிகிச்சை   மேலும் பல செலவுகள் என்ற வழியில் செலவழிக்கிறீர்கள். சம்பளத் தொகையில் மீதமிருப்பது ரூ. 20 ஆயிரம் ஆகும். இதுதான் உங்களின் மாதச் சம்பளத்தில் மீதமாகும் உபரித்தொகை.   எளிமையாக விளக்குவதற்காக, தற்போதைக்கு உங்களின் வருமான வரியை விட்டுவிடுவோம். 1.        இப்போது நாம் சில அம்சங்களை யூகித்துப் பார்ப்போம். 2.        உங்கள் நிறுவனத் தலைவர் கருணையோடு ஆண்டுக்கு பத்து சதவீத அளவுக்கு சம்பளத்தை உயர்த்துகிறார். 3.        விலைவாசி ஆண்டுக்கு எட்டு சதவீதம் அளவுக்கு உயர்ந்து வருகிறது. 4.     ...