இடுகைகள்

மயிலாப்பூர் டைம்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கதை கேட்கிறதுக்கென ஒரு மனுசன்!

படம்
கதை சொல்லப்போறோம்! வேலைக்கு எடுக்கும்போது கூட கேட்டார்கள். கதை, கவிதை எல்லாம் எழுதுவீர்களா? உடனே நேர்மையின் எவரெஸ்டாய், கட்டுரைகளை நேர்த்தியாக எழுத முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார் என்று சொல்லி விட்டேன். ஆனால் அதற்கப்புறம் கேட்டதெல்லாம் என்னுடைய வருங்கால உயரதிகாரியின் வாழ்க்கைக் கதை, அதோடு நான் எப்படி தங்கப்பதக்கம் சிவாஜியாய் நேர்மையாக எப்படி இருக்கவேண்டும் என்கிற கதைகள்தான். என் பச்சை மூஞ்சிதான் காரணமா என தெரியவில்லை. பேசிய பத்தாவது நிமிடம் தன் கதைகளை சொல்லி ஆறுதலை கேட்கிறார்கள். மே ஐ ஹெல்ப் யூ என ஒரு அப்பாவி பதவி வங்கியில் இருக்கும். அதே விஷயத்திற்கு முழு மனிதன் பிறந்திருக்கிறான் என்றால் அதற்கு பக்கத்தில் சமம் போட்டு என் பெயரைத்தான் எழுதவேண்டும். வின்சென்டின் மணி என்னப்பா கதைக்கு பிறகு, காலையில் பேப்பர் வாங்க போகும்போது முதல் ஆளாக ஆயா ஒருவர் மணி என்னப்பா என கேட்டுவிடுகிறார். சாபம் அப்படியே தொடருகிறதா என நினைத்தேன். நேற்றிரவு நிகழ்ச்சி அதனை உறுதி செய்தது. நேற்று இரவில் வண்டி ஏற நின்று கொண்டிருந்தேன். நான்கு பேர் டாஸ்மாக் போதையில் தள்ளாடி வந்தார்கள். ஒதுங்கினேன்.  தி

சோறு முக்கியம் பாஸ்! -

படம்
சோறு தேடும் காக்கைகள்! வேலை அமைவதும். அதன் கூடவே நண்பர்களின் ஜாகை அமைவதும் சாதாரண விஷயமல்ல. வேலை காரணமாக பெருங்குடிக்கு கிளம்பியபோது வயிற்றில் மெட்ரோ ரெயில்கள் டஜன் பெட்டிகளோடு மேலேறி சறுக்கின.பின்னே சோறு முக்கியமில்லையா?  நினைத்ததற்கு மாறாக இருந்த அத்தனை கடைகளும் எலைட். கம்பெனியில் சம்பளம் போடவே மேலேயும் கீழேயும் பார்ப்பார்கள். என்ன செய்வது? எலைட் கடைகளை புரட்டிப்போடுட  சாப்பிட நானென்றும் சீப் எடிட்டர் சக்தி இல்லையே? உணவு தேடி ருசிக்கு சாப்பிடுவதில் அவர் கைதேர்ந்தவர். இப்படி நாங்கள் புகுந்து அலாசியதில் எங்களுக்கு நேரெதிரான போட்டி ஐடி ஆட்கள்தான். உள்ளேயே புட்கோர்ட் இருந்தாலும் ஒரு பயலும் உள்ளே உட்கார்ந்து கார்டு தேய்த்து சாப்பிடுவதில்லை. அத்தனை பேரும் நேராக கேரளா கடை, அல்லது ஆந்திரா மெஸ்ஸூக்கு வந்து பனிரெண்டு பேர் உட்காருகிற டேபிளை குத்தகைக்கு எடுத்து விடுகிறார்கள். ஆம்லெட், சிக்கன் என தின்று கொழுப்பதால் நாங்கள் சென்றால் ஜனதா சாப்பாடு டிக்கெட் வந்தது போல பாந்தமான கவனிப்பு. என்ன செய்வது? பாபு பப்பு வரலை என்று கூவித்தொலைத்து தின்றுவிட்டு கல்லாவிலுள்ள பழத்தை முறித்து தின்ற

மணி என்னப்பா? - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
மணி என்னப்பா? எல்லாநேரத்திலும் ஒருவர் எப்படி விழிப்பாக இருக்க முடியும். ஆனால் கேள்விகள் வின்சென்டைப் பொறுத்தவரை  பொறுத்தவரை குறைவதில்லை. நண்பருடன் ஜாலியாக டீ சாப்பிடச்சென்றார். டீ டைம் முடிந்தும் பதட்டம் குறையாமல் இருந்தார். ஏன் பாஸ்? எடிட்டர்  ஆறுமணிக்குள் கட்டுரை கேட்டாரா என்ன? என்று கேட்டால் என்னை எரிப்பது போல பார்த்தார்.  கதையின் ஒன்லைன் சிம்பிள், வின்சென்ட் எங்கு சென்றாலும் அவரை மனநலம் பாதித்தவர்கள் மணிகேட்கிறார்களாம்.  என்ன ஒரு வீக்எண்ட் காமெடி என நினைத்தேன். பிளானிங்காக அல்ல; எதார்த்தமாக அவரின் நண்பர் மனோவை கேட்டபோதுதான் விபரீதம் புரிந்தது. அவரும் புதியதாக வாட்ச் வாங்கியிருந்த சமயத்திலும் வின்சென்டிடம் போகும்போது ஒருமுறை வரும்போது ஒருமுறை என மணி கேட்டு மிரட்டியுள்ளனர் பித்தர்கள்.  ஆகா, முன்னோர்கள் சாபம் விட்டுட்டாங்க, தேவனே என்னை திகைக்க வைக்காதீரும் என பைபிள் வாசகங்களை வானத்தை நோக்கி பேச ஆரம்பித்தார் வின்சென்ட். என்ன செய்வது, அவரவர் கர்மம் என விட்டுவிடமுடியுமா? என கட்டிப்பிடித்து தேற்றி ஆல் இஸ் வெல் சொன்னேன். உண்மையில் இது சற்று வித்தியாசமான பிரச்னைதான்.  வாட

மயக்கமா, கலக்கமா?

படம்
மயக்கமா, கலக்கமா? மயிலாப்பூரில் தங்கியிருக்கிறேன் என்று கூறும்போதெல்லாம் நண்பர் மணிக்கு காது விடைகும். எங்களுக்கும் ஆசைதான் ஆனால் எங்கே? என்பார்கள். அலுவலகம் மாறியதிலிருந்து அனைத்தும் தலைகீழாகிவிட்டது. எல்லாருக்குமா ஆம், இல்லை என்ற வார்த்தைகளை சொல்ல முடிகிறது?  சரி என்ற ஒரே பட்டன் இருக்கும்போது அதைத்தானே அழுத்தவேண்டியிருக்கிறது.  திருவல்லிக்கேணியில் இரவெல்லாம் பிரியாணி கிளறும் ஒலிகளும், கரண்டி அண்டாவின் ஆழம் தொட்டு சோற்றுப்பருக்கைகளை இறைச்சியுடன் தட்டுக்கு கொண்டுவரும் முயற்சிக்கான இரைச்சல்களும் இடையறாது கேட்கும். அதுவும் தெலுங்கு நண்பர்களின் ரூமில் தங்கினால் நரகம் நடுராத்தியிரியில் ஓபன் ஆகும். சினிமா வெறியர்கள் என்பதால், மிட்நைட் படத்தை பார்த்துவிட்டு வந்து கதவைத்தட்டி கனவில் பெண்தோழிகளுடன் தொடங்கிய விளையாட்டுகளை டிஸ்டர்ப் செய்வார்கள். மயிலாப்பூரில் இதெல்லாம் கிடையாது என்றாலும் ஒளி மாசு அதிகம்.  லேப்டாப், கேமிரா, போன் என ஜேம்ஸ் எப்போது உறங்குகிறான் என்றே என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. தினசரி வித்தியாசமான கலாசார நிகழ்ச்சி வீடியோக்களை, ஆங்கில படங

இப்பயணம் இப்படியே தொடரக்கூடாதா?

படம்
மயிலாப்பூர் டைம்ஸ் 3! இந்த அத்தியாயம் பயணம் பற்றியது. ஹெட்போன் மாட்டாத, கையில் புக் எடுக்காதபோது, பேச நண்பர்கள் இல்லாதபோது உங்கள் மனம் எங்கு செல்கிறது? இறந்த காலத்திற்குத்தானே? அதுதான் இந்த அத்தியாய கான்செஃப்ட் கூட. மயிலாப்பூரில் இரு ஆண்டுகளாக படிக்கும்போதும் அதனை முழுமையாக அறியவில்லை. காரணம், நெருக்கடியான படிப்பு அதற்கடுத்து என்னாலேயே புரிந்துகொள்ள முடியாத என்னுடைய மனநிலை முக்கியக்காரணம். அறையில் இருந்தவர்கள் அனைவரும் என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்பதோடு அனைவரும் எங்களை விட சாதியில் உயர்ந்தவர்கள். இதனால் அறையில் தங்கியிருக்கும் ஒவ்வொரு கணமும் சீண்டல்கள் அதிகம் இருந்தது. குறிப்பாக ஜீவா, சக்திவேல் என்ற இருவரின் வருகையை தீவிரமாக நான் வெறுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் விலகி ஓடியது எந்தளவிலும் என்னை துணிச்சல்காரனாக மாற்றவில்லை என்பதை இன்று உணர்கிறேன். விலங்கின் வேட்டை குணம் இன்று காலத்திற்கேற்ப வீஆர் வடிவில் மாறியுள்ளது. ரெடி பிளேயர் ஒன் படம் இதனை காட்சிபடுத்துகிறது. அதனை வடிவமைப்பவர் மனிதர்களிடம் பழக அஞ்சி உருவாக்கும் உலகம் அவரின் காலத்திற்கு பின்னர் அத்தனை மக்களுக்கும் பிடித