இடுகைகள்

வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்கா சிவப்பு, நீலமாக பிரிந்தது எப்படி?

படம்
**புரட்சியின் நிறமான 'சிவப்பு', அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் நிறமாக மாறியது எப்படி?**   *ஆண்ட்ரூ லாதாம் | "சிவப்பை விடச் சாவைத் தழுவிக் கொள்வது மேல்" (Better dead than red).  பனிப்போர் காலத்தில் அமெரிக்கப் பாதுகாப்புவாதிகள் இந்த முழக்கத்தை முன்வைத்தனர். இதன் மூலம் அவர்கள் குறிப்பிட்டது சோவியத் கம்யூனிஸ்டுகளையும், அமெரிக்காவில் இடதுசாரிகளுடன் அனுதாபம் கொண்டிருந்தவர்களையுமே தவிர வேறெவரையும் அல்ல.  ஆனால், காலச்சக்கரம் சுழன்று இன்று அமெரிக்காவின் பழமைவாதக் குடியரசுக் கட்சியே (Republican Party) 'சிவப்பு' நிறத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த நிற மாற்றத்திற்குப் பின்னால் எந்தக் கொள்கையும் இல்லை; எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக இந்த நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும் இல்லை. 'சிவப்பு மாநிலங்கள்', 'நீல மாநிலங்கள்' என்ற சொல்லாடல் நாம் நினைப்பதை விட மிகவும் புதியது. இது தோன்றியது சரியாக 2000-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது தான். பல நேரங்களில், இந்த நிறப் பிரிவினை அமெரிக்க அரசியலின் உண்மையான தளத்தைப் பிரதிபலிக்கத் தவறிவிடுகிறது. *(அமெரிக்க ...

மறந்துபோன சீனப்பயணி

சீனாவின் மிகப் பெரும் நாடுகாண் பயணியின் மறக்கப்பட்ட மரபு 15ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், சீனாவின் அரசவையைச் சேர்ந்த ஒரு அரண்மனை அதிகாரி, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் முழுவதும் ஏழு மகத்தான கடற்பயணங்களை மேற்கொண்டார், மேற்கில் செங்கடல் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கக் கரைகள் வரை சென்றடைந்தார். இந்தப் பயணங்கள் பொறியியல் மற்றும் கப்பற்பயணத்தின் அற்புதமான சாதனைகளாகும். கிறிஸ்டோபர் கொலம்பஸ் அல்லது வாஸ்கோ ட காமாவைவிட பல தசாப்தங்களுக்கு முன்னரே பயணத்தைத் தொடங்கிய ஜெங், 200 கப்பல்கள் கொண்ட பிரம்மாண்டக் கடற்படையின் தலைமையில் பல ஆண்டுகள் கடல்களைக் கடந்து பயணம் செய்தார். அந்தக் கப்பல்களில் சில 70 மீட்டர் நீளம் வரை இருந்தன — அது கொலம்பஸின் கப்பல்களைவிட மூன்று மடங்கு பெரியது. பலருக்கு, ஜெங் வரலாற்றின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகளில் ஒருவராக தகுதி பெறுகிறார். ஆயினும், அந்தப் பயணங்களைப் பற்றியும், ஜெங்கைப் பற்றியும் அதிகம் மர்மமாகவே உள்ளது. சீனாவின் மிங் வம்ச (1368–1644) அதிகாரப்பூர்வப் பதிவுகளில் அவர் அரிதாகவே இடம்பெறுகிறார்; அரசவை வரலாற்றாசிரியர்கள் அவரது பயணங்களை ஈர்க்கக்கூடியவை எ...

பல்லடுக்கு கொண்ட இந்தியாவை பதிவு செய்தவர் -சுமித் சர்க்கார் -அஞ்சலிக் கட்டுரை

## அறிஞரின் விடைபெறல்: வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார் (1939–2026) இந்திய வரலாற்று ஆய்வின் களத்தில் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த மார்க்சிய வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், 2026 ஆகஸ்ட் 13 அன்று டெல்லியில் காலமானார். அவரது வயது 87. மாத்திரமல்ல, அவர் ஒரு தலைமுறை வரலாற்று மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், இந்திய தேசிய இயக்கத்தைப் புரிந்துகொள்ளும் முறையிலேயே ஒரு புரட்சியை ஏற்படுத்தியவருமாவார். ### வாழ்க்கைக் குறிப்பு 1939ஆம் ஆண்டில் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் சுஷோபன் சர்க்காருக்கு மகனாகப் பிறந்த சுமித் சர்க்கார், கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றார். ஆக்ஸ்போர்டின் வுல்ஃப்சன் கல்லூரியில் பிந்தைய முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டார். கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும், பர்த்வான் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், 1974 முதல் 2004 வரை டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்; பின்னர் மதிப்புறு பேராசிரியராக (Professor Emeritus) உயர்வு பெற்றார். அவரது ...

பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்!

படம்
  பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்! ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தால், அதற்கு முன்னே ஆட்சியில் இருந்தவர்கள் செய்த கட்டுமானப்பணிகளை சிதைப்பது, பெயரை மாற்றுவது, செயல்பாட்டில் உள்ளவற்றை அழிப்பது என நிறைய குதர்க்கங்களை காழ்ப்புணர்ச்சியால் செய்வார்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற கட்டிடம் அப்படித்தான் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. அதன் பின்னே உள்ளது தனிமனிதர் ஒருவரின் அற்பமான ஆணவமும், காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே.   அந்த வகையில் அமெரிக்காவில் அரசு பயன்படுத்தும் எழுத்துரு மாற்றப்படுவதாக அரசு செயலர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் பைடன் ஆட்சியில், 2023ஆம் ஆண்டு 'சன்ஸ் ஷெரிஃப் காலிப்ரி' என்ற எழுத்துரு அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த எழுத்துரு, பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கும் உதவுவதாக இருந்தது. இப்போது, தொழிலதிபர் ட்ரம்ப் அதிபராகி, குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் வெள்ளையர்களுக்கு ஆதரவான இனவெறிப்போக்கு அதிகரித்துள்ளது. கருப்பினத்தவர்களின் வரலாற்றை மாற்றி பெர...

இந்தியவரலாறு - காந்திக்கு பிறகான காலகட்டம்

இந்த நூலை காங்.கின் வீழ்ச்சி பற்றிய வரலாறு அல்லது பார்ப்பன பாசிச கட்சியின் வரலாறு என்றும் கூறலாம். இனப்படுகொலை என தில்லி சீக்கியர்கள் படுகொலை -ராஜிவ் காந்தி மற்றும் முஸ்லீம் படுகொலை - நடப்பு பாசிச இயக்க இந்திய ஆட்சித்தலைவர் என துணிச்சலாக எழுதி உள்ளார். அடிப்படையில் இந்திராகாந்தி பற்றிய சம்பவங்களே அதிகம். வட இந்தியாவையே முழுக்க மையப்படுத்தி உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பாளர் சாரதி சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

ஒருவரின் மூளையைக் கழுவி மதவாத திசையில் கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல உதவும் நூல்கள்!

படம்
  ஒருவரின் மூளையைக் கழுவி மதவாத திசையில் கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல உதவும் நூல்கள்! நீங்கள் வரலாற்றை வலதுசாரி,மதவாதப் பார்வையில் பார்க்க வேண்டுமா அதற்கு கீழேயுள்ள நூல்கள் பல்வேறு தகவல்களை வழங்கும். இந்துத்துவா பார்வையில் உலகைப் பார்க்க தொன்மை வரலாற்று நூல்கள் உதவும். இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொன்மை இந்தியா அதாவது பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தில் இருந்த வேதகாலம் எப்படி பொற்காலமாக இருந்தது என்பதை நூல்களாக எழுத மாணவர்களை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாக இப்படியான எழுத்தாளர்கள்தான் நேஷனல் புக் டிரஸ்டில் வரலாற்று நூல்களை எழுதி வருகிறார்கள்.  என்பிடி ஒரு அரசு நிறுவனம், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனத்தை ஆர்எஸ்எஸ் ஆட்களை வைத்து வளைத்து வரலாற்றை திருத்தி எழுதி வருகிறார்கள். அந்த வகையில் இந்த நூல்களையும் வலதுசாரிகள் வாசித்தால் குறைந்தபட்சம், டிவி விவாதங்களிலாவது உருப்படியாக ஏதாவது பேசித்தொலைய வாய்ப்புண்டு. இந்த நூல்பட்டியலை பரிந்துரைத்தவர் புகழ்பெற்ற நாளிதழ் ஆசிரியர் ஒருவர்.  நாம் குறிப்பிட்ட பார்வையை கோணத்தை உறுதி செய்துகொண்டு எந்த ந...

நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு திரும்பி வந்து சுற்றுலாவை வளர்க்கும் இளைஞர்கள்!

படம்
            கிராமங்களில் வளரும் சுற்றுலா சீனாவில் ஆறு லட்சத்திற்கும் அதிகமாக தனித்துவ கலாசார, உணவு, பண்பாட்டு தன்மை கொண்ட கிராமங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்க உலகமெங்கும் உள்ள பயணிகள் ஆர்வமாக வந்து குவிகின்றனர். இதை சீனாவில் வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோரும், இளைஞர்களும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். சுற்றுலாவை மேம்படுத்த சீன அரசும், உள்ளூர் நிர்வாகமும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் உள்ள எட்டு கிராமங்களை சிறந்த சுற்றுலா கிராமங்கள் என சர்வதேச சுற்றுலா அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அமைப்பு, ஐ.நாவுடையது. எடுத்துக்காட்டாக ஷிதி கிராமத்தைப் பார்ப்போம். இந்த கிராமத்தில் பட்டுப்புழு வளர்ப்பு, தேயிலைப் பயிர் ஆகியவை முக்கியமான தொழில்கள். 1986ஆம் ஆண்டு, சுற்றுலா துறை மேம்பட்டது. கிராமத்தில் உள்ள வரலாற்று கட்டுமானங்கள், ஹூய்சூ கலாசாரம் ஆகியவை பிரசாரம் செய்யப்பட, உலக நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு வருகை தரத் தொடங்கினர். தொடக்கத்தில் உள்ளூர் மக்கள் சுற்றுலா வணிகத்தை கையாண்டாலும் பின்னாளில் 2013க்குப் பிறகு சுற்றுலாவுக்கென தனி ந...

எழுதிய வரலாற்றுக் கதையில் குரூர இளவரசனுக்கு மனைவியாக மாறும் எழுத்தாளர்!

படம்
            different princes சீன டிராமா 33 எபிசோடுகள் வரலாற்றுக்கதை எழுதும் இளம்பெண், தொடர்கதையாக இணையத்தில் எழுதி வெளியிட்டுவருகிறார். ஒருநாள் தனது கதையின் இறுதியில், பழிவாங்கும் எண்ணம் கொண்ட இளவரசன், நல்ல இளவரசனையும், அவனது மனைவியையும் அம்பு எய்து கொன்று ஆட்சியைப் பிடிப்பதாக எழுதி கதையை நிறைவு செய்கிறாள். ஆனால், அதை கதையை வாசித்த வாசகர்கள் ஏற்கவில்லை. நல்லவன் இறக்க கூடாது. வில்லன் வெல்வது போல உள்ளது என அறம் சார்ந்த கேள்வியை எழுப்புகிறார்கள். ஆனால், எழுத்தாளரான நாயகி முடியாது. நான் எழுதியபடி வில்லன்தான் வெல்கிறான் என உறுதியாக கூறுகிறாள். கணினி அவளை தொன்மைக் காலத்திற்கு கூட்டிச் செல்கிறது. அங்கு, அவளை தீயசக்தி இளவரசன் மணந்துகொண்டு முதலிரவு அன்றே கொல்ல திட்டமிட்டிருக்கிறான். அதிலிருந்து எழுத்தாளர் நாயகி மீண்டு எப்படி தன்னைக் காத்துக்கொண்டு தீயசக்தி இளவரசனை திருத்துகிறாள் என்பதே கதை. இக்கதையை சுருக்கமாக சொன்னால், கதை எழுதும் எழுத்தாளரே அவரது கதையில் ஒரு முக்கிய பாத்திரமாக மாறினால்.. என வைத்துக்கொள்ளலாம். எழுத்தாளருக்கு நல்லவன் கெட்டவன் என பேதம் இல்லை. இரண்டு...

பசுமைக் கட்சியின் தொடக்கம், தேவை என்ன?

படம்
அரசியலில் சூழல் கொள்கைகளை பெரும்பாலான கட்சிகள் பேசுவதில்லை. இதற்கு காரணம், அப்படியெல்லாம் பேசினால் கட்சிக்கு நிதி, நன்கொடை கிடைக்காது. குறிப்பாக அந்நிய முதலீடு சுத்தமாக வராது. ஆனாலும் கூட உலகளவில் க்ரீன்ஸ் என்ற பசுமைக் கட்சி தனது சூழல் கருத்துகளை சொல்லி அரசில் பங்கு வகித்து தனது அதிகாரத்தை செல்வாக்க வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் முழுக்க பசுமைக்கட்சி இயங்கி வருகிறது. இந்தியாவில் கூட பசுமைக்கட்சி உள்ளது. ஆனால், அதிகளவு பிரபலம் ஆகவில்லை. எனவே, வட இந்தியாவில் அந்த கட்சியை இப்படியொரு கட்சி உள்ளதா என்ற அளவில் மட்டும் பார்த்து வருகிறார்கள். சாதி, மதம் பார்த்து வாக்களிக்கும் பின்தங்கிய இந்தியா போன்ற நாட்டில் சூழல் கொள்கைகளை கருத்தில் கொண்டு அதற்கு வாக்களிக்க அதிக காலம் தேவை. கட்சியாக தன்னை பிரபலப்படுத்தவே பசுமைக்கட்சி இன்னும் மெனக்கெட வேண்டும். சூழல் என்று சொன்னால், பெருநிறுவனங்கள் அருகில் வரமாட்டார்கள். தேர்தல் நிதி கொடுக்கமாட்டார்கள். பொதுவாக வணிக நிறுவனத்திற்கு எப்படி பணம் கிடைக்கும்? ஏனெனில் எந்த அளவுக்கு இயற்கை வளத்தை சுரண்ட முடியுமோ அப்படி செய்தால்தான் ஜிண்டால், டாடா, ரிலையன்ஸ் ஆக...

25 ஆண்டுகளாக மறக்கமுடியாத இனவெறி கொலை - கல்லறையை சேதப்படுத்தி வரும் வெள்ளையின இனவெறியர்கள்

படம்
  ஜேம்ஸ் பைர்ட் ஜேம்ஸ் பைர்டின் கல்லறை டெக்ஸாஸில் பெருகும் இனவெறி- மறக்க முடியாத இனவெறி கொலை 1998ஆம் ஆண்டு. ஜேம்ஸ் பைர்ட் என்பவர் தனது நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று விட்டு ஜாஸ்பர் கவுன்டிக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மூன்று வெள்ளையினத்தவர்கள் அவருக்கு லிஃப்ட் கொடுப்பதாக கூறினார்கள். அதை நம்பி ஏறியவரை அடித்து உதைத்து இரும்புச்சங்கிலியில் கைகளைக் கட்டி, பிக் அப் டிரக்கோடு பிணைத்து சாலையில் இழுத்து சென்றனர். மூன்று கி..மீ. தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட ஜேம்ஸ் பைர்டின் எலும்புகளை அடுத்தநாள் காவல்துறை வந்து பொறுக்க வேண்டியிருந்தது. உயிர் போனதோடு, அவமானகரமான இறப்பு. அவரை அடித்துக்கொன்ற வெள்ளையர்கள் வெள்ளை இனவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள். விவகாரம் தேசிய அளவில் பேசப்பட வேறுவழி இல்லாமல் ஜேம்ஸ் பைர்ட்டைக் கொன்ற குற்றவாளிகளில் இருவருக்கு மரணதண்டனை, ஒருவருக்கு ஆயுள் சிறை கிடைத்தது. அவரது பெயரில் இனவெறுப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. ஆனாலும் கூட ஜேம்ஸ் பைர்ட் இன்று வரையில் நிம்மதியாக இல்லை. அவரது கல்லறை இருமுறை வெள்ளை இனவெறியர்க...

அறியப்படாத விடுதலை வீரர்களுக்கு புதிய கௌரவம்! - விடுதலைப் பெருநாள் சிறப்பு திட்டம்

படம்
  இந்திய அஞ்சல்தலை சுதந்திர இந்தியாவின் முதல் ஸ்டாம்ப் அறியப்படாத உள்ளூர் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சல் தலைகளை வெளியிடும் இந்திய அரசு! எழுபத்தைந்தாவது விடுதலை பெருநாள் விழா தொடர்பான நிறைய திட்டங்களை இந்திய அரசு தொடங்கியது. அதில் முக்கியமானது, வரலாற்றில் இடம்பெறாத உள்ளூர் விடுதலை வீரர்களை ஆவணப்படுத்துவது இந்த வகையில் இந்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 25 வரலாற்று ஆய்வாளர்களோடு இணைந்து விடுதலை போராட்ட வீரர்களை   கண்டறிய முயன்றது. இந்திய அரசின் முயற்சியைத் தொடர்ந்து நாட்டிலுள்ள மாநில அரசுகளின் உதவியோடு தொடக்க கட்டமாக 10 ஆயிரம் விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களின் உருவங்களை இந்திய அரசு அஞ்சல் தலையாக மாற்றி அவர்களை பெருமைப்படுத்தவிருக்கிறது. தனிநபர்கள், குறிப்பிட்ட தொகையை அஞ்சல் அலுவலகத்தில் கட்டி அவர்களின் புகைப்படங்களைக் கொடுத்தால் அதையே அஞ்சல் தலையாக மாற்றித் தரும் செயல்பாடு உள்ளது. அதிலிருந்து விடுதலை வீர ர்களின் அங்கீகாரம் எப்படி மாறுபடுகிறது என தெரியவில்லை. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் மகேந்திர பிரதாப் சிங். இவர் உள...

மதவாதம் சார்ந்து உருவாகும் அரசதிகாரம் அச்சமூட்டும் ஒன்று! - வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர்

படம்
  ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர் இந்துத்துவா அரசியலை விமர்சனம் செய்பவர்களில் முக்கியமானவர், வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர். இந்தியாவின் பன்மைத்துவ தன்மைக்காக குரல் கொடுத்து இந்துத்துவ சிந்தனைகளுக்கு எதிரான குரலாக ஒலித்து வருகிறார். தற்போது, ‘தி ஃப்யூச்சர் இன் தி பாஸ்ட்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். வரலாற்று ஆய்வாளராக அவரை மாற்றிய விவகாரங்கள், பல்வேறு பிரச்னைகள் பற்றிய தனது கருத்துகளை கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்புதான் மேற்சொன்ன நூலாக வெளிவந்திருக்கிறது. வரலாற்றை இந்துத்துவா எப்படி அணுகுவதாக நினைக்கிறீர்கள்? வரலாற்றை அணுகுவது என்பது பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுப்பதுதான். ஆதாரங்களை சேகரித்து, அதை ஆய்வு செய்து, கடந்த கால நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான விளக்கங்களை கொடுப்பது என புரிந்துகொள்ளலாம். இந்துத்துவா கருத்தியலுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய சிறு குறிப்பை வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு கருத்தியலை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வருகிறார்கள். ஆதாரங்கள் நம்பகத் தன்மை கொண்டவையா, வாதங்கள் ஏற்புடையவையா என்றெல்லாம...