இடுகைகள்

ஸ்டார்ட்அப் மந்திரம் தொடர்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்மார்ட்போனில் பிஸினஸ்! - அத்.24

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம் 24! –  கா.சி.வின்சென்ட்     இணையம் உள்ளங்கையளவு ஸ்மார்ட்போனில் சுருங்கிவிட எதற்கு தயக்கம்? இந்த டெக்னாலஜியை நன்கு புரிந்துகொண்டதால்தான் தாரிகா ஃபேஸ்புக்கிலேயே தன் கேக்குகளை விற்பனை செய் து சாதிக்கிறார்.   ஸ்விட்சர்லாந்தில் வசித்தபோது எக்லெஸ் கேக்குகளை செய்து விற்றுவந்த தாரிகா , கணவரின் வேலைமாற்றம் காரணமாக பெங்களூருவுக்கு வந் தார். அப்போது வீட்டிலேயே கேக்குகளை தயாரித்து விற்கலாமே என முடிவு செய்தார் . ஃபேஸ்புக் உதவியது; தயாரித்த கேக்குகளின் புகைப்படத்தை ஷேர் செய்ய , ஆர்டர்கள் குவிந்தன.   ஃபேஸ்புக் இதற்கென மார்க்கெட் பிளேஸ் என்ற வசதியை வழங்குகிறது . ஆர்டர்களுக்கான தொகையை மொபைல் வாலட் மூலம் பெறமுடியும் . ஃபேஸ்புக் , வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்தி கேக் , சோப்பு , கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை வீட்டிலேயே செய்து பலரும் விற்று வருகின்றனர் . " நான் ஃபேஸ்புக்கில் 2012 ஆம் ஆண்டு என் பிஸினஸைத் தொடங்கினேன் . இன்று இ தன்வழியாக மட்டுமே 60% வாடிக்கையாளர்கள் எனக்கு உண்டு " என்கிறார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பேஷன் டிசைனரான கீர்த்திச

ஸ்டார்ட்அப் தகவல்கொள்ளை? - அத்.23

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம் 23 -    கா.சி.வின்சென்ட் தகவல்கொள்ளையை சமாளிப்பது எப்படி?   பெரும்பாலான இணையத்தாக்குதல் நிதிசார்ந்து நடைபெறுவதால் , பேங்க்பஜார் , கிளியர்டாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு அடுக்குகளாக பாதுகாப்பை பராமரித்து வருகின்றன . 2016 ஆம் ஆண்டு அமெரிக்க கார்சேவை நிறுவனமான Uber இன் 57 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு பின் தகவல் கொள்ளையர்களுக்கு 1 மில்லியன் டாலர்கள் பணம் கொடுத்து விஷயத்தை அமுக்கியது .   சில மாதங்களுக்கு முன்பு உணவுசேவை நிறுவனமான ஸோமாடோவில் 17 மில்லியன் பயனர்களின் தகவல்கள் கொள்ளையடிக்கப்பட்டன . இவ்வாண்டில் நடைபெறும் ஆறாவது மிகப்பெரும் தகவல் கொள்ளை என வல்லுநர்கள் கூறியுள்ளனர் . " உணவகம் குறித்த தகவல்கள் கொள்ளை குறித்து ஸோமாடோ நிறுவனத்திடம் நாங்கள் முன்கூட்டியே எச்சரித்தோம் . ஆனால் அவர்கள் இதனை அலட்சியமாக நினைத்தனர் " என்கிறார் சென்னையைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனமான இன்ஃபிசெக்கின் கார்த்திக் விக்னேஷ்வர் .   ஸ்டார்ட்அப் நிலைமையில் முதலீடாக பணம் கிடைக்காத நிலையில் யாரும் பாதுகாப்புக்காக பெருமளவு முயற்சி செய்ய மாட்டார

ஸ்டார்ட்அப்களுக்கு அமேஸான் உதவி! அத்.22

படம்
  22 ஸ்டார்ட்அப் மந்திரம் - கா . சி . வின்சென்ட்   ஸ்டார்ட்அப்புகளுக்கு உதவி!   குறிப்பிட்ட இடத் தை மையமாக கொண்டு பிஸினஸ் தொடங்கும் முன்பு ஸ்காலேரியன் சைக்கிள் நிறுவனத்தைப் போல ஆராய்ச்சி செய்வது முக்கியம் . சென்னை , கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை வசதிகள் , வரி உட்பட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து கோவையை டிக் அடித்திருக்கிறது சச்சின் கிஷோர் மற்றும் சோமி தாஸ் ஆகியோரின் குழு . 2014 ஆம் ஆண்டு தொடங்கிய சைக்கிள் நிறுவனமான ஸ்காலேரியன் கியர் சைக்கிள்களை தயாரிப்பது தொடங்கி அதனை பெயிண்ட் செய்யும் பணி வரையில் கோவை உதவுகிறது என தலையசைக்கிறார் சச்சின் . முதலீடு சம்பந்தமான சந்தேகங்கள் , தடுமாற்றங்கள் இருந்தால் forentrepreneurs.com என்ற முதலீட்டாளர் டேவிட் ஷோக்கின் தளம் உதவும் .                                            அமேஸான் இ - வணிகத்தோடு ஸ்டார்ட்அப் முயற்சிகளுக்கு நம்பிக்கை தரும் விதமாக அமேஸான் லாஞ்ச்பேடு என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது . இந்தியாவில் தற்போது 250 ஸ்டார்ட்அப் முயற்சிகளை நிதியளித்து ஆதரிக்கிறது அமேஸான் . எதற்கு ? " பொருட்களை வாடிக்கையாளர

ஸ்டார்ட்அப் மந்திரம் அத்தியாயம் 1,4,5,9

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம் -கா.சி.வின்சென்ட் 1 இன்றைய ஜென் இசட் இளசுகளின் சுயதொழில் மந்திரம் என்ன ? சிம்பிள் ஸ்டார்ட் தொழில் முயற்சிகள்தான் . முதலில் சிறுதொழிலாக கைக்காசை போட்டு தொழில் தொடங்கியவர்களை பார்த்திருப்போம் . இன்று ஸ்டார்ட்அப்களுக்கு அரசு மானியம் அளித்து உதவிவருகிறது . இப்பகுதியில் தொழில் முயற்சிகள் , அதன் பிளஸ் , மைனஸ் , தோல்விகள் , கற்றுக்கொண்ட பாடங்கள் என அனைத்தையும் பார்க்கப் போகிறோம் . 2016 ஆம்ஆண்டு ஜனவரி 16 அன்று விஞ்ஞான் பவனில் , பிரதமர் மோடி தொடங்கி வைத்த தொழில்முனைவு திட்டம் ஸ்டார்ட்அப் இந்தியா . இன்றுவரை ஸ்டார்ட்அப் பயிற்சிக்கு பதிவு செய்துள்ளவர்களின் அளவு 1 லட்சத்து 97 ஆயிரத்து 469. இன்றுவரை ( மார்ச் 5,2018) தொடங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப்கள் 7 ஆயிரத்து 775. அதில் அரசின் நிதியுதவி பெற்ற ஸ்டார்ட்அப்கள் 97. 2015 ஆம் ஆண்டு பிரதமர் செங்கோட்டையில் அறிவித்த திட்டம் இது . தொடங்கியது அடுத்த ஆண்டு . எதற்கு இந்த புதிய திட்டம் ? இளைஞர்களின் தொழில் கனவுக்கு சிறகு கொடுக்கத்தான் . லைசென்ஸ் தாமதம் , சூழல் அனுமதி , அந்நிய முதலீடு , நில கு