ஸ்டார்ட்அப் மந்திரம் அத்தியாயம் 1,4,5,9



ஸ்டார்ட்அப் மந்திரம்-கா.சி.வின்சென்ட்
1


Image result for india startup category


இன்றைய ஜென் இசட் இளசுகளின் சுயதொழில் மந்திரம் என்ன
? சிம்பிள் ஸ்டார்ட் தொழில் முயற்சிகள்தான். முதலில் சிறுதொழிலாக கைக்காசை போட்டு தொழில் தொடங்கியவர்களை பார்த்திருப்போம். இன்று ஸ்டார்ட்அப்களுக்கு அரசு மானியம் அளித்து உதவிவருகிறது. இப்பகுதியில் தொழில் முயற்சிகள், அதன் பிளஸ்,மைனஸ், தோல்விகள், கற்றுக்கொண்ட பாடங்கள் என அனைத்தையும் பார்க்கப் போகிறோம்.

2016 ஆம்ஆண்டு ஜனவரி 16 அன்று விஞ்ஞான் பவனில், பிரதமர் மோடி தொடங்கி வைத்த தொழில்முனைவு திட்டம் ஸ்டார்ட்அப் இந்தியா. இன்றுவரை ஸ்டார்ட்அப் பயிற்சிக்கு பதிவு செய்துள்ளவர்களின் அளவு 1 லட்சத்து 97 ஆயிரத்து 469. இன்றுவரை(மார்ச் 5,2018) தொடங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப்கள் 7ஆயிரத்து 775. அதில் அரசின் நிதியுதவி பெற்ற ஸ்டார்ட்அப்கள் 97.
2015 ஆம் ஆண்டு பிரதமர் செங்கோட்டையில் அறிவித்த திட்டம் இது. தொடங்கியது அடுத்த ஆண்டு. எதற்கு இந்த புதிய திட்டம்? இளைஞர்களின் தொழில் கனவுக்கு சிறகு கொடுக்கத்தான். லைசென்ஸ் தாமதம், சூழல் அனுமதி, அந்நிய முதலீடு, நில குத்தகை ஆகிய பிரச்னைகளிலிருந்து விடுவிக்க அரசின் DIPP(The Department of Industrial Policy and Promotion) துறை உதவுகிறது.

என்ன விதிமுறை?

25 கோடிக்கும் குறைவான லாபம் இருக்கவேண்டும். ஸ்டார்ட் ப்புகள் தொடங்க தொழிலில் ஏழு ஆண்டுகள் அனுபவம் தேவை. குறைந்த வட்டியில் கடன் தர முதலீடாக 200 பில்லியன் டாலர்கள் அரசு கொண்டுள்ளது. மேலும் அரசின் ஐமேட் நிகழ்வும், முத்ரா வங்கியின் நிதியுதவியும் திட்டத்தின் ஸ்பெஷல்.
ஸ்டார்ட்அப் என்றால் என்ன? புதிய பொருளை சேவையை வழங்கும் நிறுவனத்தின் தொடக்க நிலை. கூட்டாகவோ, தனியாகவோ தொடங்கிய நிறுவனம் தன் பொருளை சேவையை மேம்படுத்தும் ஸ்டேஜில் இருக்கும். இதில் முதலீடும் உடனே வந்து குவிந்துவிடாது. ஐடியாவை பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களை அசத்தும்படி அமைத்தால் ஸ்டார்ட்அப் மார்க்கெட்டில் பிழைக்க ஆக்சிஜனாக நிதி கிடைக்கும்.
                                      
 3


ஸ்டார்ட்அப் மந்திரம்!- கா.சி.வின்சென்ட்
ஆன்மிகத்திலும் அசத்தலாம்!

இணைய விளையாட்டுத்துறையில் ராஜ்தீப் குப்தா தன் ரூட் மொபைல் நிறுவனத்தின் மூலம் செய்தது அதைத்தான். இணைய விளையாட்டின் இந்திய உள்நாட்டுச் சந்தை மதிப்பு 80 கோடி.

முறைப்படுத்தப்படாத இ-ஸ்போர்ட்ஸ் துறை மதிப்பு 818 மில்லியன் டாலர்கள்(81.8 கோடி) என கிசுகிசுக்கிறார்கள். உலகளவில் இத்துறையில் இந்தியாவின் இடம் பதினேழு. "இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சி 40 சதவிகிதம்.இவ்வாண்டில் கேமிங் போட்டிகளை விரைவில் தொடங்கவிருக்கிறோம். முதலீட்டுக்கு சிறந்து துறை இது. முக்கிய நகரங்களில் 4ஜி சேவைகள் வந்துவிட்டதால் கேமிங் வீரர்களும் நிறையப்பேர் உருவாகிவருகிறார்கள்" என்கிறார் ராஜ்தீப் குப்தா.
               
ஆன்மிக வாய்ப்பு!

இனிவரும் காலங்களில் ஏஐ உதவியுடன் ஒருவரின் சமூக கணக்குகளை ஹேக் செய்து ஒருவரின் சிந்தனையை டிசைன் செய்து ஐடியாவையும் திருட முடியும். எதற்கு ஒரு ஸ்டார்ட்அப் ஐடியாவில் உலகையே மாற்றலாமே! அக்கவுண்ட் கொள்ளாத அளவு காசு சேர்க்கவும் முடியும். இதற்கான அடிப்படை விதிகளை மிதுல் தமனியின் ஐடியாவுக்குப் பிறகு பார்ப்போம்.

மொபைல்கள் மூலம் மக்கள் நிதிச்சேவைகளை எளிதாக செய்ய பேவேர்ல்டு ஸ்டார்ட்அப்பை தொடங்கினார் மிதுல். ரீசார்ஜ் கடைகளில் ஒவ்வொரு பயனருக்கும் வெவ்வேறு போன்களை பயன்படுத்தி டாப் அப் செய்துகொண்டிருந்த கடைக்காரரைப் பார்த்ததும்" ஏன் அனைத்தையும் ஒன்றிலேயே செய்யக்கூடாது? என்று தோன்றியது" என்று பேசும் மிதுல் தன் பேவேர்ல்டு ஸ்டார்ட்அப்பில் 630 நகரங்களைச்சேர்ந்த பத்தாயிரம் விற்பனையாளர்களை இணைத்துள்ளார். 2006 இல் தொடங்கிய ஸ்டார்ட்அப்பை நவீனத்திற்கேற்ப அப்டேட் செய்யும் கட்டாயம் மிதுலுக்கு உள்ளது.

ஆன்மிகத்தில் ஏதாவது தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என நினைத்திருக்கிறீர்களா? பலருக்கும் நம்பிக்கை இருக்காது. ஆனால் கிரி ட்ரேடிங் கம்பெனி எப்படி சாதித்தது? இந்துமத புத்தகங்கள், பூஜை பொருட்கள் என விற்பனை செய்து இன்று ஆன்லைனிலும் கடைவிரித்துள்ளனர். அபித் அலிகானின் ப்ரவ்டு உம்மா(2012), சௌம்யா வர்தனின் சுப்பூஜா(2013), சிவா மற்றும் சேட்டனின் இபூஜா ஆகிய நிறுவனங்களும் இத்துறையில் ஸ்டார்ட்அப்களாக தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள ஆன்மிக சந்தை மதிப்பு 40 பில்லியன் டாலர்கள். இவ்வாரம் வாசிக்கவேண்டிய நூல் Influence: The Psychology of Persuasion – Robert Cialdini  Entrepreneurial Skill: How to Sell


4
ஸ்டார்ட்அப் மந்திரம்!- கா.சி.வின்சென்ட்

முதலீடுகளை ஈர்க்கும் விதிகள்!

1.ஆர்வமுள்ளவர்களை துணை நிறுவனர்களாக சேர்ப்பது மிக அவசியம். ஸ்டார்ட்அப்பை முடிவு செய்தால் ஆழமான மார்க்கெட் ஆய்வுக்கு பிறகு களத்தில் இறங்குங்கள்.

2.மக்களின் தினசரி பிரச்னைகளை தீர்க்க உதவாத  ஸ்டார்ட்அப் ஐடியா பிக்அப் ஆகாது.
 
3. ஐடியா ஸ்டார்ட்அப்பில் இருக்கும் அதே நிலையில் இருக்கவேண்டிய அவசியமில்லை. நமக்கு பரிணாம வளர்ச்சி உள்ளது போலவே, ஐடியாவையும் தொடர்ச்சியாக மேம்படுத்துங்கள். .கா:பேபால்

4. ஸ்டார்ட்அப் ஐடியாவை பிடித்திருக்கிறது என்று கூறி உற்சாகப்படுத்துபவர்கள் அதனை பயன்படுத்த எந்த கேரண்டியும் இல்லை. வாடிக்கையாளர்களிடம் நீங்களே ஸ்டார்ட்அப் பற்றி பேசலாம். முதலீட்டாளர்களும் பயனர்களும் ஏறத்தாழ ஒன்றுதான். எனவே நேரில் சந்தித்து அல்லது போனில் பேசுங்கள்.

5.செலவழிப்பது முதலீட்டாளர்கள் பணம் என்பதால் கவனமாக செலவழியுங்கள். உங்கள் வளர்ச்சி வேறு, ஸ்டார்ட்அப் நிறுவன வளர்ச்சி வேறு புரிந்துகொள்வது நல்லது.   
6. ஸ்டார்ட்அப் உருவாகும் நிலையில் பத்திரிகை செய்தி, விளம்பரங்கள், நிதி முதலீடு உங்கள் கவனத்தை சிதைக்க வாய்ப்புள்ளது. முழுகவனமும் தொழில் முயற்சியில் இருந்தால் மட்டுமே ஸ்டார்ட்அப்பை வின்னிங் இன்னிங்க்ஸாக்க முடியும்.

குஜராத்தைச் சேர்ந்த Saathi eco எனும் ஸ்டார்ட்அப், குளோபல் க்ளீன்டெக் விருதை(2018) வென்றிருக்கிறது. எப்படி சாதித்தது? சானிடரி பேடுகளை தயாரிக்கிற நிறுவனம்தான். இதில் புதுமை வாழை நாரில் அதனை தயாரித்ததுதான். பாகிஸ்தான், மொராக்கோ, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை வென்று சாதி இகோ சாதித்திருக்கிறது. காரணம், சூழலுக்குகந்தபடி ஐடியாவை நுட்பமாக மாற்றியதுதான்.

இந்த ஸ்டார்ட்அப் முயற்சியோடு, Navalt &boats(கொச்சின்), aspartika(பெங்களூரு) ஆகியவை இப்போட்டியில் வென்றுள்ளன. லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த க்ளீன்டெக் நிறுவனத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் தொழில்மேம்பாட்டு சங்கம்(UNIDO) இப்போட்டியை நடத்தியது. என்ன பயன்கள் கிடைக்கும்? ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீட்டாளர்கள் சந்திப்பு, பயிற்சி ஆகியவை வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு பம்பர் பரிசு! வாசிப்பதற்கான நூல்: The Everything Store – Brad Stone   இந்நூலில் ஜெஃப் பெஸோஸ் தன் வேலையை கைவிட்டு நூல்களை ஆன்லைனில் விற்று இன்று அமேஸானை மாபெரும் நிறுவனமாக வளர்தெடுததை ஆசிரியர் விளக்கியுள்ளார்.


Image result for india startup category


5


ஸ்டார்ட்அப் மந்திரம் 5 - கா.சி.வின்சென்ட்


மொபைலில் பேசுவது தாண்டி யாரும் யோசிக்காத நேரத்தில் பேடிஎம், மொபிவிக் எப்படி முளைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தன? தொழில்நுட்பத்தின் விளைவாக அனைவரின் கைகளிலும் வந்துவிட்ட ஸ்மார்ட்போன்கள்தான் முக்கிய காரணம். அங்குமிங்கும் அலையாமல் அனைத்தையும் சில தொடுதிரை ஸ்வைப்புகள் மூலமே செய்துவிட்டால் சூப்பர்தானே! சின்ன கனவுதான். ஆனால் இன்று சாத்தியமாகியுள்ளது. பணமதிப்புநீக்க நடவடிக்கையின்போது பொருட்களை வாங்க, பிறருக்கு பணம் அனுப்ப பேடிஎம், மொபிவிக் போன்ற அப்ளிகேஷன்கள்தான் உதவின.

செமிகண்டக்டர் துறையில் வேலை செய்து சலித்துப்போன ஒரு நொடியில்தான் வேலையை விட பிபின் ப்ரீத் சிங் முடிவு செய்தார். வேறெதாவது சவாலான வேலையைச் செய்யலாமே என தீர்மானித்திருந்தபோது பேபால் நிறுவன ஊழியரான உபாசனா தாகுவை ஒரு நிகழ்வில் சந்தித்தார். இருவரின் சிந்தனைகளும் ஒரே பாதையில் இணைய தம்பதிகளானார்கள். ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ்தான் முதல் இலக்கு. பிறகு மார்க்கெட்டை ஆராய்ந்தபிறகு வளமான எதிர்காலம் இருப்பதை பிபின் உணர்ந்தார்.

இன்று மொபிவிக் பல்வேறு முதலீடுகளைப் பெற்றாலும் முதல் மூன்று ஆண்டுகள் உழைத்ததற்கு பிபினும், உபாசனாவும் சம்பளமே பெறவில்லை. "மொபிவிக்கை மற்றுமொரு பேமண்ட் பேங்காக உருவாக்க விரும்பவில்லை. முதலீடுகளைப் பெறவும் நாங்கள் அவசரம் காட்டவில்லை. மார்க்கெட்டில் நிலைத்திருக்கும்படியான முடிவுகளை எடுத்து காலத்திற்கேற்ப பயணிக்க விரும்புகிறோம்" என பக்குவமாக பேசுகிறார் பிபின்பிரீத் சிங். அமேஸான் பெஸோஸ், அலிபாபா ஜாக் மா, பேடிஎம் விஜய்சேகர் சர்மா, மேக்ஸ்டர் கிரிஷ் ராம்தாஸ் சர்மா என யாராக இருந்தாலும் அவர்களுக்கான வணிக ஐடியா என்பது தனித்துவமாக இருந்ததாலும், மக்களின் தேவைக்கு அது உதவியது என்பதாலும் வென்றது என்பதை எப்போதும் மறக்க கூடாது. இவ்வாரம் வாசிக்கவேண்டிய நூல் 12 Rules For Life: An Antitode to Chaos – Jordan Peterson  நவீன வெற்றியாளர்களின் சிந்தனைகளோடு வெற்றிபெறுவதற்கான வழிகளையும் கூறுகிறார் ஆசிரியர் ஜோர்டன் பீட்டர்சன்.




Image result for swiggy

9

  

ch 9

2016 ஆம் ஆண்டில் StayZilla, Dazo ஆகிய நிறுவனங்கள் தோற்று வீழ்ந்ததோடு, 200 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்புகள் மூடப்பட்டுவிட்டன. கிராப்ட்ஸ்வில்லா, சாஃப்ட்பேங்கின் முதலீட்டில் வாழும் ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களும் பெருமளவு ஆட்குறைப்பை செய்துவருகின்றன. எங்கு தவறு? என்ன பிரச்னை?

Zomato, Swiggy ஆகிய நிறுவனங்கள் உணவுத்துறையில் தாக்குப்பிடிக்கின்றன என்றால் அதைப் பின்பற்றிய பிற நிறுவனங்கள் என்னவாயின? குறிப்பிட்ட ஸ்டார்ட்அப் ஐடியாவை முதலில் தேர்ந்தெடுப்பவருக்கான ஆதாயங்கள் பின்வருபவர்களுக்கு கிடைக்காது. ஃபிளிப்கார்ட்டின் ஐடியாவை காப்பியடித்து எக்கச்சக்க கம்பெனிகளை தொடங்கி, பணத்தை இறைக்கலாம். மக்களின் மனதில் பதிய தெளிவான பிளான்களும் விநியோக முறைகளும் முக்கியம். இந்த அம்சங்கள் இல்லையெனில் தொடங்கும் கம்பெனியில் செய்யும் முதலீடு, கடலில் கரைத்த பெருங்காயம்தான்.

ஒவ்வொரு துறையிலும் முன்னணி கம்பெனிகள் நிச்சயம் இருப்பார்கள். -வணிகத்தில் ஃபிளிப்கார்ட், அமேசான்; ஹோட்டலா? ஓயோ ரூம்ஸ், வாடகைக்காரா? உபர், ஓலா என இவர்களை உங்கள் ஸ்டார்ட்அப் முந்தி கின்னஸ் படைக்கும் என வறட்டு பிடிவாதம் செய்யாமல் தனித்துவமாக யோசியுங்கள். இத்துறையில் வேர்பிடித்தவர்களோடு மோதாமல் புதிய வாய்ப்புகளை விழுதாக நினைத்து ஏறி ஜெயிக்க பார்ப்போமே?உங்கள் ஸ்டார்ட்அப்பை சந்தையில் வஜ்ரமாக்க இதோ ஸ்டார்ட்அப் புத்தகங்கள்
 
 Creativity Inc. by Ed Catmull with Amy Wallace
அனிமேஷனில் அதிரடியாக சாதிக்கும் பிக்ஸாரின் சாதனைக்கதை. பிக்ஸார் படிப்படியாக தடைகளை உடைத்து திரைப்படத்தில் தன்னை எப்படி நிரூபித்தது என்பதை படித்தால் ஸ்டார்ட்அப் உற்சாகம் குபீரென உங்களுக்குள்ளும் பொங்கும்.

 Zero to One - Peter Thiel with Blake Masters
மார்க் ஸூக்கர்பெர்க், எலன் மஸ்க் ஆகியோர் பரிந்துரைத்த ஸ்டார்ட்அப் நூல் இது. 2012 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் படித்த பீட்டர் தியல் எழுதிய நூல் இது.

The Checklist Manifesto - Atul Gawande 
எழுதியது அறுவைசிகிச்சை வல்லுநர் என்றாலும் ஒரு வேலையை செக்லிஸ்ட் போட்டு எப்படி கவனமுடன் செய்து ஜெயிக்கலாம் என்று சொல்லும் டிப்ஸ்கள் ஈர்க்கின்றன. இதோடு மார்க்கெட்டிங் குறித்த Sell: The Art, the Science, the Witchcraft-Subroto Bagchi நூலையும் வாசிக்கலாம்.

தொகுப்பு: வின்சென்ட் காபோ
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா