அசத்தலான கார் திருடி!


அசத்தல் திருடி!

Image result for car thief



ஜார்க்கண்டைச் சேர்ந்த பெண், டாக்ஸி ஒன்றை தன் நண்பர்கள் குழு உதவியுடன் துப்பாக்கி முனையில் அதிரடியாக கடத்தினார். அப்புறம் என்னாச்சு?


டெல்லியின் லஜ்பத் நகர் போலீசுக்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி காரை இரண்டு பெண்களும், ஒரு ஆணும் கடத்தியதாக புகார் வந்தது. டெல்லியின் பாலம் – டேராடூன் ரூட்டில் பயணிக்கும்போது கார் கடத்தப்பட்டதை அறிந்த போலீசார், அசத்தல் திருடியான கஜாலாவை அரஸ்ட் செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து ஆண்நண்பர் வான்ஸ் சர்மாவுடன் வாழும் சப்னாவுக்கு அதிரடி சாகசங்கள், ஆச்சரியங்கள் அதிகம் பிடிக்கும். “என் குடும்பத்தினர் என்னை பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்பதற்காகவே காரை திருடினேன்” என்று விநோத பதில் சொல்லி போலீசை அயர வைத்துள்ளார்.
கடத்தல் சம்பவ தினத்தன்று கஜாலாவின் சகோதரர் திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள காரில் சென்று இறங்கி ஊராரை ஆச்சரியப்படுத்தவேண்டுமென நினைத்த கஜாலாவின் பேராசை அவரையும் அவரது தோழி காஜல் மற்றும் வான்ஸ் சர்மாவையும் சிறையில் தள்ளியுள்ளது. அபேஸ் செய்யப்பட்ட கார், மற்றும் வான்ஸ் சர்மா பயன்படுத்திய பைக், பிஸ்டல் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.