இன்ஸ்டாகிராமை ஆளும் பெருசுகள்!
இன்ஸ்டாகிராம் பெருசுகள்!
இன்ஸ்டாகிராமில் சமந்தா, கிம்
காதர்ஷியன், ரெஜினா என சினிமா, டிவி பிரபலங்கள்தான் ஆட்சி செய்யமுடியுமா? யூத்களின்
மீடியாவில் அவர்களுக்கு இணையாக சீனியர் சிட்டிசன்களும் போட்டோக்களை பதிவிட்டு பிரபலமாகி
வருகின்றனர்.
வங்கியில் பணியாற்றி ரிடையரான
சாந்திக்கு இன்ஸ்டாகிராமுக்கு இன்ட்ரோ கொடுத்தது அவரின் மகள்தான்.”ரெசிபி, தோட்டம்,
குழந்தை வளர்ப்புனு எழுத தொடங்கினேன். ஏர்போர்ட், பஸ் ஸ்டாப் என எங்குபார்த்தாலும்
அடுத்து என்ன எழுதுவீங்கன்னு இப்ப விசாரிக்கிறாங்க” என நெகிழ்ச்சியாகும் சாந்தியை இன்ஸ்டாமில்
33 ஆயிரம் பேர் பின்பற்றுகின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டரை விட சுளுவாக ஃபோட்டோ, வீடியோக்களை
பதிவேற்றும் இன்ஸ்டாமில் உலகெங்கிலும் இணைந்துள்ள 50 வயதிற்கு மேற்பட்டவர்களின் சதவிகிதம்
8% மட்டுமே.
டவுட்டே வேண்டாம், இன்ஸ்டாகிராம் இளைஞர்களுக்கானதுதான். இன்றுவரை இன்ஸ்டாகிராமை 7.6 கோடிப்
பேர் பின்பற்றி தங்களை மூலை முடுக்கெங்கும் செலிபிரிட்டியாகி வருகின்றனர். இந்தியாவில்
இன்ஸ்டாமின் பங்கு 19 லட்சம் மக்கள்(பெண்கள் 6 லட்சம், ஆண்கள் 13 லட்சம் மில்லியன்).
படிப்பதை விட படங்களையும் வீடியோக்களையும் பார்க்கும் எளிமையால்தான் இன்ஸ்டாகிராம்
யூத்களின் மனதை வென்றது. அதனை தாத்தா பாட்டிகளும் பயன்படுத்தி உணவு, சேலைகள், வீட்டுமுறை
உணவு என போட்டோ ட்யூஷன் எடுத்து இளைஞர்களை வசீகரித்து வருகின்றனர். “டெக்னாலஜியை நினைத்துதான்
முதியவர்கள் இன்ஸ்டாகிராமில் இயங்க தயங்குகிறார்கள். இதில் பதிவிட செலவு அதிகமில்லை
என்பதோடு எனக்கு பிடித்த விஷயங்களை பகிரும் திருப்தியும் போனஸ்” என துடிப்புடன் பேசும்
செங்குட்டுவன் சுப்புரத்தினம்(@sengut2006) பட்டாம்பூச்சிகள், கானுயிர்களின் அழகான
புகைப்படங்களை சிறுகுறிப்புகளுடன் பதிவிட்டு இயற்கை நேசர்களை கவர்ந்துள்ளார்.
இளைஞர்கள் பழுத்த பெருசுகளை பின்தொடர
என்ன காரணம்? ஆலோசனைதான். சமையலோ, உடையோ, பொருட்களோ நண்பர்கள், சொந்தங்கள், உறவுகள்
என அக்கம் பக்கம் ஆலோசனை கேட்டு பார்த்து யோசித்துத்தானே வாங்குகிறோம். இன்ஸ்டாகிராமில்
கூடும் யூத்களின் படையும் சீனியர் சிட்டிசன்களை பின்பற்றுவது இதே முறையில்தான். சின்னச்சின்ன
நுணுக்கங்களையும் இப்படி ஃபாலோ செய்து அட்வைஸ் கேட்டு ஏ டூ இசட் கற்கிறார்கள்; ரசிக்கிறார்கள்.
தன் பேரக்குழந்தைகளுக்கு கலாசாரம்
கற்றுத்தரும் கொரிய தாத்தா சான், அறுபதிலும் ரெயின்போ கலர்களில் டிரெஸ்களில் மலர்ச்சியாக
சிரிக்கும் யூயோசெகி, டாமி செமி தம்பதியின் கணக்குகளையும் லட்சக்கணக்கானவர்கள் பின்பற்றுகின்றனர்.
எப்படி என்கிறீர்களா? இன்ஸ்டா மேஜிக் அப்படித்தான்.