ஸ்டார்ட்அப் தகவல்கொள்ளை? - அத்.23
ஸ்டார்ட்அப் மந்திரம் 23
- கா.சி.வின்சென்ட்
தகவல்கொள்ளையை சமாளிப்பது எப்படி?
பெரும்பாலான
இணையத்தாக்குதல் நிதிசார்ந்து நடைபெறுவதால், பேங்க்பஜார், கிளியர்டாக்ஸ்
ஆகிய நிறுவனங்கள் பல்வேறு அடுக்குகளாக பாதுகாப்பை பராமரித்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு அமெரிக்க கார்சேவை நிறுவனமான Uber இன் 57
மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு பின் தகவல்
கொள்ளையர்களுக்கு 1 மில்லியன்
டாலர்கள் பணம் கொடுத்து விஷயத்தை அமுக்கியது.
சில மாதங்களுக்கு முன்பு
உணவுசேவை நிறுவனமான ஸோமாடோவில் 17 மில்லியன்
பயனர்களின் தகவல்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வாண்டில் நடைபெறும் ஆறாவது மிகப்பெரும் தகவல் கொள்ளை என வல்லுநர்கள்
கூறியுள்ளனர். "உணவகம் குறித்த தகவல்கள்
கொள்ளை குறித்து ஸோமாடோ நிறுவனத்திடம் நாங்கள் முன்கூட்டியே எச்சரித்தோம். ஆனால் அவர்கள் இதனை அலட்சியமாக நினைத்தனர்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனமான
இன்ஃபிசெக்கின் கார்த்திக் விக்னேஷ்வர்.
ஸ்டார்ட்அப் நிலைமையில்
முதலீடாக பணம் கிடைக்காத நிலையில் யாரும் பாதுகாப்புக்காக பெருமளவு முயற்சி செய்ய
மாட்டார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்
கொள்கின்றனர் தகவல் கொள்ளையர்கள். நிதிசார்ந்த
சேவைகள் என்றால் தொடங்கிய நாள் முதலாக பாதுகாப்பு விஷயத்திற்கு செலவு செய்தே
ஆகவேண்டும். இல்லையெனில் தகவல்கள் திருடு போவதோடு
பிராண்டும் அன்றே சந்தையில் பணால்
ஆகிவிடும்.
இளைஞர்களின் தொழில்முயற்சி!
உலகிலேயே இந்தியா(83%) மெக்சிகோவுக்கு(88%) அடுத்ததாக ஸ்டார்ட்அப் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருவதாக கடந்தாண்டு
வெளியான ராண்ட்ஸ்டாட் ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கிறது. அதேசமயம் செய்யும் தொழில் ஹிட் ஆகுமா? மண்ணைக் கவ்வுமா? என்ற
சந்தேகப்
பட்டியலிலும் இந்தியா(76%) இரண்டாமிடம் பிடித்துள்ளது.
சொந்த தொழில்!
25-34 வயது - 72%
35-44 வயது - 61%
45-54 வயது - 37%
இந்தியாவில் தொழில்
வாய்ப்பு - 86%
அரசு ஆதரவு - 84%
பணிபுரிவதற்கான
தொழிலாளர்கள் - 74%
ஒரு கம்பெனி தன் பொருட்களை விற்க என்ன
வைத்திருக்கவேண்டும்? பணியாளர்கள்,
அலுவலகம்,
இணையதளம்,
டெலிவரி
சேவை என என லிஸ்ட் போடுவீர்கள். ஆனால்
இன்றைய டெக் உலகில் இவை அனைத்தும் கட்டாயமில்லை. தேவையென்றால்
வைத்துக்கொள்ளலாம் என்றளவு மாறிவிட்டது.
(உச்சரிப்போம்)