இடுகைகள்

நீதிமன்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய ஜனநாயகத்தை காக்கும் ஆயுதமாக மாறிய இணையசேவை தடை!

படம்
  இணைய சேவை தடை ஜனநாயகத்தைக் காக்கும் இணையசேவை தடை!   உலக நாடுகளில் அதிக முறைகள் இணையம் துண்டிக்கப்பட்டு தடை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. 2012ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை 734 முறை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் உச்சபட்சமாக 421 முறை இணையம் துண்டிக்கப்பட்டு தேச ஒற்றுமை காக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்து சட்டத்தை திரும்ப பெற்றதற்கு பிறகு 550 நாட்கள் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 தொடங்கி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 6 வரை 4ஜி இணையசேவை முழுமையாக அரசால் துண்டிக்கப்பட்டு, மக்களின் எதிர்ப்புணர்வை மழுங்கடித்தனர். அரசியல்ரீதியாக சிக்கல் ஏற்படும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவது மெல்ல வாடிக்கையானது. 2017ஆம்ஆண்டு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து கோரிக்கை எழும்பப்பட்டு போராட்டங்கள் உருவாயின. உடனே அரசு   நூறு நாட்களுக்கு இணைய சேவையை நிறுத்தி வைத்தது.   அண்மையில் பஞ்சாபில் காலிஸ்தான் நாட்டுக்கான போராட்டம் தொடங்கியது. இதை தொடங்கி வைத்த அம்ரித்பால் சி
படம்
  வழக்குரைஞர் பத்மலட்சுமி ஜெயாமோகன், கேரளா கேரளத்தில் சாதித்த முதல் பால்புதுமையின வழக்குரைஞர் கேரளத்தில் தினக்கூலி தொழிலாளரான மோகன் என்பவரின் மகள், பத்மலட்சுமி ஜெயாமோகன். இவர், பால்புதுமையின இனக்குழுவைச் சேர்ந்தவர். தான் யார் என்பதை அடையாளம் கண்டு பெற்றோருக்கு முதலிலேயே கூறிவிட்டார். பிள்ளை கூறியதைக் கேட்டு அவர்களும் அடித்து உதைக்காமல் ஆதரவாக இருந்த   காரணத்தால் இப்போது வழக்குரைஞராகி இருக்கிறார். இதில், நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பத்மலட்சுமியின் பெற்றோர், தனது மகளின் இயல்பை புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டதுதான். தங்களது மகளைப் பற்றி அறிய அதுதொடர்பாக இணையத்தில் நிறைய தேடி அறிந்துகொண்டனர். கூடுதலாக மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றிருக்கின்றனர். பெற்றோர் இந்தளவு ஆதரவாக இருந்தாலும் சுற்றமும், நட்பும், கல்விக்கூடமும், சமூகமும் அந்தளவு கரிசனம் காட்டவில்லை. இயல்புக்கு மாறான வினோதம் என்று பல்வேறு விஷ வார்த்தைகளை வசைகளை சொல்லி திட்டினாலும் இணையத்தில் உள்ளவர்கள் எதிர்மறை தன்மையை உருவாக்கினாலும் பத்மலட்சுமி ‘’நான் அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளப்போவதில்லை ஒருவர் வேலையில்லாமல் இண

செய்திகளில் தகவல் துல்லியம், தெளிவு அவசியம்!

படம்
  மாநகரில் ஓரிடத்தில் வன்முறை சம்பவம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களை அணுகி கட்டுரை ஒன்றை எழுதுகிறீர்கள் என வைத்துக்கொளவோம். அப்படி எழுதும்போது ஒருவர் அனுபவித்த துயரத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது. அதேசமயம் தேவையான கேள்விகளைக் கேட்டு தகவல்களைப் பெற்று எழுத வேண்டும். பெறும் தகவல்களில் தெளிவு, துல்லியம் அவசியம். சிலர் பேசும்போது முக்கியமான நபர்கள், சம்பவங்களைத் தவிர்த்துவிட்டு சில விஷயங்களைப் பெரிதுபடுத்தி பேசுவார்கள். இதைக் கவனித்து கட்டுரையில் செம்மை செய்வது முக்கியம். பெறும் செய்திகளை நடுநிலையாக எழுத முயல வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு, அரசு தரப்பு, எதிர்தரப்பு, என தகவல்களைத் தேடி கேட்டு தொகுத்து கட்டுரையாக செய்தியாக எழுத வேண்டும். வன்முறை சம்பவம் வழக்காக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தால், அதைபற்றி முன்முடிவாக எந்த கருத்தையும் கூறக்கூடாது. இப்படி கூறும் கருத்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பத்திரிகையாளருக்கும், வெளியீட்டு நிறுவனத்திற்கும் சட்டச் சிக்கலைக் கொண்டு வரலாம். பாதிக்கப்பட்ட சம்பவத்தில் பத்திரிகையாளரான நீங்கள் மையமாக இருந்தால், அதாவது பாதிக்கப்பட்டவராக இரு

இதயப்பூர்வமாக கேட்கும் மன்னிப்பு, விரோதத்தை கரைக்கும் -சௌதி வெல்லாக்கா - தருண் மூர்த்தி

படம்
  சௌதி வெல்லாக்கா சௌதி வெல்லாக்கா 2022 மலையாளம் இயக்கம் தருண் மூர்த்தி இசை – பாலி ஃபிரான்சிஸ் ஒளிப்பதிவு – சரண் வேலாயுதன் நாயர் தென்னம் மட்டையின் நடுவிலுள்ள தண்டுப்பகுதி. அதுதான் படத்தில் விவரிக்கப்படும் மரண ஆயுதம். நண்பர்களோடு கிரிக் கெட் விளையாடும்போது பந்து எதிர்பாராதவிதமாக வயதான பெண்மணி மீது விழுந்து விடுகிறது. அதைப் பொறுக்காமல் கோபம் கொண்டு சிறுவனை தென்னை மட்டையின் தண்டை எடுத்து அடிக்கிறாள். இதில் சிறுவனுக்கு விழாமல் இருந்த பல் கூட பதற்றத்தில் விழுந்துவிடுகிறது. இந்த விவகாரத்தை அந்த முதிய பெண்மணி மீது துவேஷம் பாராட்டும் வீட்டுக்காரர், வழக்கு போடும் நிலைக்கு கொண்டு போகிறார். அந்த வழக்கும், வழக்கில் தொடர்புடையோர் வாழ்க்கையில் நெருக்கடியில் மாட்டுகிறது.   இறுதியில் வழக்கு என்னவானது என்பதே படம். நீதிமன்றத்தில் பல்லாண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளைப் பற்றிய கவனம் ஏற்படுத்தும் படம் என இறுதியில்   சொல்லுகிறார்கள். ஆனால் படம் நெடுக, ஆணவத்தால் அகங்காரத்தால் வன்மத்தால் காவல்நிலையம், நீதிமன்றம் போன்ற இடங்களில் மனிதர்களின் வாழ்க்கை எப்படி நலிந்து போகிறது என்பதை அதே தன்மையில்

இந்திய சிறைகளுக்குள் நூல்களுக்கு தடை!

படம்
  ஜிஎன் சாய்பாபா, மனித உரிமை செயல்பாட்டாளர் கடந்த மாதம் எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கௌதம் நவ்லகா, பிஜி வுட்ஹவுஸ் என்ற எழுத்தாளரின் நூல்களை வாசிக்க கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.  மும்பையிலுள்ள தலோஜா சிறை நிர்வாகம் இதற்கு அளித்த பதில், பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று.  சிறைத்துறை அதிகாரிகள் நூல்களை, காகிதங்களை, நோட்டுகளை ஏன் அகராதிகளை கூட கைதிகளுக்கு கொடுக்காமல் இருப்பதும், பிறகு வழக்குரைஞர்கள் இதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்கு செல்வதும் புதிதல்ல. இப்படி சமூக செயல்பாட்டாளர் ஜோதி ஜக்தாப் என்பவருக்கு நூல்கள் மறுக்கப்பட்ட, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த உத்தரவு வந்து சேர்ந்தும் கூட இரண்டு மாதங்கள் ஆனபிறகே நூல்கள் ஜோதிக்கு வழங்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளுக்கு நூல்கள் மேல் உள்ள வெறுப்பை  இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.  2020ஆம் ஆண்டு நாக்பூர் சிறையில் ஜிஎன் சாய்பாபா அடைக்கப்பட்டிருந்தார். இவர் தெலுங்கு மொழி நூல்களை வாசிக்க கேட்டிருந்தார். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் அதை காதில் போட்டுக்

திருமண வல்லுறவு பற்றி விவாதித்துத்தான் தீர்வு காண முடியும்! - டாக்டர் உபேந்திர பக்ஷி

படம்
நேர்காணல் உபேந்திர பக்ஷி வார்விக் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் மதுரா வல்லுறவு வழக்கு ஒன்றில் வல்லுறவு தொடர்பான சட்டத்தை உருவாக்க உச்ச நீதிமன்றத்திற்கு  பகிரங்க கடிதம் எழுதியவர்களில் உபேந்திராவும் ஒருவர்.  அண்மையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் திருமண உறவில் கணவர் வற்புறுத்தி உறவு கொண்டால், அது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. வல்லுறவு கிடையாது என கூறியுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? அந்த நீதிபதி அப்படி கூறியுள்ளதற்கு சட்டம் முக்கியமான காரணம். ஏனென்றால் கணவர் மனைவியை உறவுக்கு கட்டாயப்படுத்தினால் அதனை குற்றமாக பார்க்க சட்டப்பிரிவுகள், ஏன் சட்டமே கிடையாது. அவர் அப்படி கூறியதில் தவறு ஏதும் கிடையாது. இதற்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்யவேண்டியதில்லை. மக்களின் குடியுரிமை பற்றியது. திருமணமான பிறகு நடக்கும் வன்முறை, வல்லுறவு பற்றி நம்மிடையே சட்டம் இல்லாத து நீதிபதியின்  குற்றம் அல்ல.  நீதிமன்றங்கள் இதில் மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளது ஏன்? உச்சநீதிமன்ற சட்டப்படி பதினெட்டு வயதிற்கு கீழுள்ள பெண்களோடு உறவு கொள்வது, வல்லுறவு என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. வழக்குரைஞர் செய்ய முடியாததை நீதிமன

திரைப்படங்களின் தணிக்கையை கையில் எடுக்கும் மத்திய அரசு! - புதிய சூப்பர் சென்சார் விதிகள் அறிமுகம்

படம்
                        திரைப்படங்களுக்கான புதிய சட்டம் 2021       கடந்த வாரம் திரைப்படங்களுக்கான புதிய விதிகள் வெளியிடப்பட்டன . இந்த விதிகள் 1952 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன . இதன்படி திரைப்படத் தணிக்கை அமைப்பு படத்தை திரையிடலாம் என குறிப்பிட்ட பிரிவில் படத்தை அனுமதித்தாலும் கூட அதனை திரும்ப சோதிக்க மத்திய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது . இந்த சட்டம் பற்றி பார்ப்போம் . படங்களில் சர்ச்சைக்குரிய வசனங்கள் , காட்சிகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு சென்சார் அமைப்பு சிலசமயங்களில் சான்றிதழ் தரமுடியாது என்று கூறி திரையிட அனுமதி மறுக்கும் . அந்த சமயங்களில் இதற்கான தலைமை அமைப்பான ட்ரிப்யூனலில் முறையிட்டால் பெரும்பாலும் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி கிடைத்துவிடும் . மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் இந்த அமைப்பை கலைத்துவிட்டு , இனிமேல் நீதிமன்றங்களே படத்தை திரையிடலாமா , வேண்டாமா என்று முடிவெடுக்கும் என்று கூறிவிட்டது . இதனை திரைத்துறையினர் பலரும் இது சாத்தியமாக என்று கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தனர் . புதிய விதிகள் உருவாக்கப்பட்டு

எல்லாம் சாத்தான் செயல்! - சாத்தான் காதில் சொன்னதால் கொலை செய்தேன்!

படம்
          devian art       எல்லாம் சாத்தான் செயல் கொலைகளை நிதானமாக செய்துவிட்டு வம்பு , வழக்குகள் என்று வரும்போது எனது காதில் சாத்தானின் குரல் கேட்டது . அதனால்தான் குற்றங்களை செய்தேன் என புதுமையாக வழக்கு வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் பேசுவது மத்திய காலத்தில் தொடங்கியது . இதனை முதலில் தொடங்கியவர் டேவிட் பெர்க்கோவிட்ஸ்தான் . எனக்குள் நான் பிறந்த காலம்தொட்டே சாத்தான் உள்ளது என்று வாக்குமூலம் கொடுத்தார் . அடுத்து ஹெர்பர்ட் என்பவர் , நிலநடுக்கம் ஏற்படுத்துபவர்கள் என்று அச்சப்பட்டு எட்டுபேரை அடுத்தடுத்து கொன்றார் . அவர்களுக்குள் சாத்தான் நுழைந்துவிட்டான் எனவே , அவர்கள் செய்யவிரும்பாத விஷயங்களை கூட செய்தார்கள் என்று கூறினார் . அமெரிக்காவில் இந்த விவகாரம் 1950 களில் தொடங்கியது . எல்லாம் சாத்தான் செயல் என்று சொல்லி வழக்கு உளவியல் பக்கம் திருப்பி பலரும் தப்பிக்க முயல்கின்றனர் . ஆனால் அது எல்லா நேரத்திலும் எடுபடாது . இப்படித்தான் எலிபாசி என்ற கொலைகாரர் , பதினைந்து சிறுவர்களை வேலை தருகிறேன் என்று கூட்டிச்சென்று கோடாரியால் வெட்டிச்சாய்த்தார் . காவல்துறையில் மாட்டியபிற