திரைப்படங்களின் தணிக்கையை கையில் எடுக்கும் மத்திய அரசு! - புதிய சூப்பர் சென்சார் விதிகள் அறிமுகம்
திரைப்படங்களுக்கான புதிய சட்டம் 2021
கடந்த வாரம் திரைப்படங்களுக்கான புதிய விதிகள் வெளியிடப்பட்டன. இந்த விதிகள் 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி திரைப்படத் தணிக்கை அமைப்பு படத்தை திரையிடலாம் என குறிப்பிட்ட பிரிவில் படத்தை அனுமதித்தாலும் கூட அதனை திரும்ப சோதிக்க மத்திய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. இந்த சட்டம் பற்றி பார்ப்போம்.
படங்களில் சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு சென்சார் அமைப்பு சிலசமயங்களில் சான்றிதழ் தரமுடியாது என்று கூறி திரையிட அனுமதி மறுக்கும். அந்த சமயங்களில் இதற்கான தலைமை அமைப்பான ட்ரிப்யூனலில் முறையிட்டால் பெரும்பாலும் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி கிடைத்துவிடும். மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் இந்த அமைப்பை கலைத்துவிட்டு, இனிமேல் நீதிமன்றங்களே படத்தை திரையிடலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் என்று கூறிவிட்டது. இதனை திரைத்துறையினர் பலரும் இது சாத்தியமாக என்று கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தனர்.
புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதன்படி, சென்சார் அமைப்பு சான்றிதழ் கொடுத்தாலும் கூட அதனை மீண்டும் சோதித்து படங்களின் திரையிடலை மத்திய
அரசு தடுக்க முடியும். இதுதொடர்பாக கர்நாடக மாநிலத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதன்படி, மத்திய அரசு சென்சார் அமைப்புக்கு வழங்கிய அதிகாரத்தை பறிக்க கூடாது. இந்த அமைப்பு அனுமதி வழங்கிய படங்களை மத்திய அரசு திரையிடுவதை தடுக்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது. புதிய விதிகளின்படி மத்திய அரசு, திரையிட அனுமதி வழங்கப்பட்ட படங்களைக் கூட திரும்ப தணிக்கை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் சூப்பர் சென்சார் என விமர்சித்துள்ளார்.
புதிய விதிகளின்படி படத்தை பார்ப்பவர்களுக்கா வயதும் கூட மாற்றப்பட்டுள்ளது. அனைத்து படங்களும் இனி யு/ஏ வகைதான். இதில் வயது மட்டும் 7 பிளஸ், 13 பிளஸ் 16 பிளஸ் என மாற்றப்பட்டுள்ளது. இந்த விதிகள் ஆன்லைன் வெப்சீரிஸ்களுக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கலாம். சென்சார் அமைப்பு தற்போது வழங்கும் திரைப்பட தணிக்கைச் சான்றிதழின் ஆயுள் பத்து ஆண்டுகள் மட்டுமே. புதிய விதிப்படி குறிப்பிட்ட ஆண்டுகள் என்ற கட்டுப்பாடின்றி ஆயுளுக்கும் வழங்கப்பட முடியும். படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை, அபராதமாக மூன்று லட்ச ரூபாயும் அல்லது படத்தின் உருவாக்கச்செலவில் ஐந்து சதவீதத்தைக் கொடுக்கும்படி கோர முடியும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஏக்தா மாலிக்
கருத்துகள்
கருத்துரையிடுக