ஓடிடி தளங்களும் சினிமாவைப் போல டிரெண்டை செட் செய்யும் காலம் தூரத்தில் இல்லை! ஜிதேந்திரகுமார், நடிகர்

 

 

 

 

 

 

Jitendra Kumar's Journey Has Been Very Simialr To Abhishek ...

 

 

 

ஜிதேந்திரகுமார்


நடிகர்


நீங்கள் ஐஐடி காரக்பூரில் படித்துவிட்டு மும்பைக்கு வந்தவர். ஆழ்வார் நகரிலிருந்து வந்த உங்களுக்கு எப்படி நடிகராகும் ஆர்வம் வந்தது?


நீங்கள் நகருக்கு வருகிறீர்கள். அங்கு உங்களுக்கு யாரையும் தெரியவில்லை என்பது கடினமான ஒன்றுதான். ஆனால் நான் யூட்யூப் பிரபலமாக இருக்கும்போது நகருக்கு வந்தேன். அப்போது தி வைரல் பீவர் குழுவினருக்காக நான் வீடியோக்களை இணைந்து பணிபுரிந்து வழங்கியுள்ளேன். டிவிஎப் பிட்சர்ஸ் எனும் தலைப்பில் நாங்கள் வீடியோக்களை உருவாக்கி புகழ்பெற்றிருந்தோம். சில போராட்டங்கள் இருந்தாலும் எப்போதும் வேலை இருந்தது. நாங்கள் டிஜிட்டல் ஊடகத்தில் தொடர்களை தயாரிக்க நினைத்தோம். இதற்காக தயாரிப்பாளர்களை சந்தித்தபோது, இப்படி தொடர்களை தயாரிப்பது முக்கியமானது. எதிர்காலத்தில் திரைப்படங்களும் கூட இப்படி வெளியாகும் என்பதை கூறினோம். இந்த வகையில் இப்படியொரு ஊடகம் உருவானது புதியவர்களுக்கு நிறைய வாய்ப்புகளைத் தரும்.


அப்படியென்றால் நீங்கள் டிஜிட்டல் ஊடகத்தை அறிமுகப்படுத்தியவர் என்று கூறலாம் அல்லவா?


ஆம் நீங்கள் அப்படியும் கூறலாம்தான். நாங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் வரத்தொடங்கியபோது டிவிஎப் நிறுவனத்திற்கான தயாரிப்பில் இருந்தோம். இதன் காரணமாக டிஜிட்டல் ஊடகம் மெல்ல வளரத்தொடங்கியபோது நாங்களும் வளர்ந்தோம். இது எப்போதும் நடப்பதுதான். சினிமாவிலிருந்து டிவி, இப்போது டிவியிலிருந்து இணையம் என்று மாறியிருக்கிறது.


புதிய படைப்புகள் வருவதற்கு ஓடிடி தளங்கள் தூண்டுதலாக உள்ளன என்று கூறலாமா?


திரைப்படங்கள் அதிக பொருட்செலவு கொண்டவை. இதன் காரணமாக அதில் பரிசோதனை முயற்சிகள் குறைவாக உள்ளன. யாராவது ஒருவர் புதுமையாக யோசித்தால் அதனையே நான்கு ஆண்டுகளுக்கு துறையினர் பின்பற்றுவார்கள். ஓடிடி தளம் என்பது பரிசோதனைக்கான களம். இன்னும் சில ஆண்டுகளில் ஓடிடி தளங்களும் கூட சினிமாவைப் போலவே டிரெண்டை பின்பற்றத் தொடங்கிவிடும் ஆபத்து உள்ளது.


சினிமாவி்ல் சூப்பர்ஸ்டார்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இப்போது முன்னிலையில் உள்ளவர்கள் பலரும் புதுமுகங்களாக உள்ளனரே?


மக்கள்தான் சூப்பர்ஸ்டார்களை உருவாக்குகிறார்கள். இன்று அவர்கள் வேறுபட்டு சிந்திக்கிறார்கள். புதிய நடிகர்களும் கூட சில ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திரங்கள் ஆக வாய்ப்புள்ளது. இப்போது இல்லையென்றாலும் கூட பின்னால் நடக்கலாம். இத்துறையில் புதிய இயக்குநர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.


இத்துறையில் நீங்கள் எதுமாதிரியான வாய்ப்புகளை எதிர்பார்க்கிறீர்கள்?


டிவிஎப்பிற்கு பிறகு நான் எப்போதும் போல இயங்கிக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் மக்கள் எனக்கான ரசிகர்களாக மாறியது சுப் மங்கள் ஸியாதா சாவ்தான் படத்திற்கு பிறகுதான். இது குடும்ப பட பார்வையாளர்களுக்கானது. இதற்குப் பிறகு வெப் தொடராக பஞ்சாயத்து உருவானது. பொதுமுடக்க காலத்தில் வெளியான இத்தொடர் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. புதிய இயக்குநர்களும் என்னை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். இப்போதும் நான் சிறப்பான நடிப்பை அளிக்கவில்லையென்றே நினைக்கிறேன். அதற்கான பணிகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.


திரைப்பட கல்லூரியில் படிக்கவில்லை. திரையுலக தொடர்புகளும் கூட இல்லை எப்படி நடிகராக மாறினீர்கள்??


ஒவ்வொரு கதைக்கும் விதவிதமான வெளிப்பாட்டு முறைகள் உள்ளன. எட்டு ஆண்டுகளாக பல்வேறு ஒத்திகைகள், திரைக்கதைகளை படிப்பது, பிறரின் நடிப்பை கவனிப்பது என இயக்குநர்களுடன் நேரத்தைக் கழித்தேன். குறிப்பிட்ட பாத்திரம் ஒரு சூழலில் கோபத்தையும் மறு சூழலில் உங்களுக்கு சிரிப்பையும் தரலாம். இதுபற்றி இயக்குநர்களுடன் பேசுவேன். அனைவரின் மனதிற்குள்ளும் இந்த உணர்ச்சிகளுக்கு இடமுண்டு. நடிகர் என்பவர் உணர்ச்சியை கேமரா முன்னே திரும்ப உருவாக்கவேண்டும். நான் இதை தொடக்கத்தில் புரிந்துகொள்ளவில்லை. நடிப்பில் பல்வேறு தடைகள் இருந்தன. அவற்றை மெல்ல பயிற்சி மூலம் கடந்து வந்தேன்.


டிஜிட்டல் ஊடகங்களில் நடிகராக, கதைகளை உருவாக்குபவராக இருப்பது எளிதாக உள்ளதா?


இந்த டிஜிட்டல் காலத்தில் உங்களின் திறமையைக் காட்ட யூட்யூப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு தளங்கள் உள்ளன. குறிப்பிட்ட ஆட்களையோ, ஆதாரத்தையோ நம்பியிருக்கவேண்டியதில்லை. மைக்கும் கேமராவும் குறைந்த கட்டணத்தில் கிடைப்பதால் வேறுவழியில் பணம் சம்பாதிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களின் படைப்பு மக்களுக்கு பிடித்திருந்தால், கவனிக்கப்பட்டால் போதும், மெல்ல உங்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.


பினான்சியல் எக்ஸ்பிரஸ்


ரேயா மெஹ்ரோத்ரா



கருத்துகள்