காடுகள் அழிவதை மக்களுக்கு சொல்லவே படம் எடுத்தேன்! - அமித் வி மஸ்துர்கார்
அமித் வி மஸ்துர்கார்
இந்தி திரைப்பட இயக்குநர்
ஒரு இயக்குநராக உங்களை எப்படி வரையறுப்பீர்கள்?
நான் எண்ணிக்கை அடிப்படையில் பெரிய இயக்குநர் கிடையாது. நான் திரைப்படம் உருவாகும் முறையை ரசித்து செய்கிறேன். அதில் அனைத்துமே எனக்கு முக்கியம்தான். எனக்கு படத்தின் கதைக்கரு பற்றி ஆராய்ச்சி செய்வது பிடிக்கும். நிறைய விஷயங்களை தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். படத்தின் ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு ஆகியவற்றை நான் விரும்பியே செய்கிறேன். ஒரு படத்தை உருவாக்க தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டே உருவாக்க நினைக்கிறேன். திரைப்படம் என்பது காதலுடன் செய்யப்பட வேண்டியது அவசியம்.
நியூட்டன் படத்தை உருவாக்கியபிறகு அடுத்து உடனே படம் செய்ய அழுத்தம் இருந்ததா?
ஆமாம். நியூட்டன் படம் உருவாக்கி வெளியிட்டபிறகு ஓராண்டுக்குப் பிறகு அந்த அழுத்தத்தை எடுத்துக்கொண்டேன். நிறைய பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வா்ய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் அவற்றைத் தேர்ந்தெடுக்கவில்லை. நா்ன் அடுத்து எடுக்கப்போகும் படம் ஆழமாக இருக்கவேண்டும் என நினைத்தேன். எனவே, வேலையில் தேவையில்லாத அழுத்தங்களை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டு ஷெர்னி படத்தை எழுதினேன். வித்யாபாலனை அதற்கு தேர்ந்தெடுத்தேன்.
ஷெர்னி படத்தின் கதை உண்மையான சம்பவமா?
படத்தின் கதை எந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் தாக்கத்தைக் கொண்டதல்ல. ஆண்டுதோறும் விலங்குகள் மனிதர்களுக்கு இடையில் முரண்டுபாடுகள், மோதல்கள் நடந்து வருகின்றன.ம வனத்துறை அதிகாரிகளே சிலசமயம் விலங்குகளை வேட்டையாடி அதன் அருகில் மக்கள் புடைசூழ நிற்பார்கள். அவர்கள் பல்வேறு விலங்குகளை உணவுக்காகவும் வேட்டையாடுகின்றனர்.
விலங்குகள் வரும் காட்சிகளை எப்படி படம்பிடித்தீர்கள்?
புலியும் பிற விலங்குகளும் வரும் காட்சிகளை கிராபிக்சில் உருவாக்கினோம். தாய்லாந்து சென்றால் உண்மையான விலங்குகளை படம்பிடித்திருக்கலாம். இங்கு கிராபிக்சில் அதனை குறைந்த செலவில் செய்துவிட்டோம். என்னுடைய செய்தி அதுவல்ல. காட்டில் விலங்குகளை சுதந்திரமாக விட்டுவிடலாம். அதனை படம்பிடித்து அவற்றை தொந்தரவு செய்யவேண்டாம் என்று நினைத்தேன். விலங்குகளை கிராபிக்சில் உருவாக்குபவர்களை தேடிப்பிடித்து வேலை வாங்கினோம். ஒரு பறவை காலை, மாலையில் அதன் குரல் மாறுபட்டு ஒலிக்கும். அதனை யும் நாங்கள் புரிந்துகொண்டு பணியாற்றினோம்.
திரைப்படத்தினை உருவாக்குவதற்கான தொடக்கம் என்ன?
பெண்புலி தன்னுடைய வாழிடத்தை இழப்பதுதான் கதை. தனது வாழிடத்தை இழந்த புலி, உணவுக்காக மனிதர்களை தேடி வருகிறது. அவர்களை தாக்குகிறது. இதுதான் படத்தின் தொடக்கப்புள்ளி. இதில் வித்யாபாலன் வனத்துறை அதிகாரியாக வருகிறார். இவர் தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக வேலையை விட்டுவிட நினைக்கிறார். அப்போதுதான் புலி பிரச்னை வருகிறது. அவர் தான் செய்யும் விஷயங்களை சரியாக செய்யவேண்டுமென நினைக்கும் அதிகாரி. ஆனால் செயல்களின் விளைவுகளை பற்றி முதலில் அவர் பெரிதாக கவலைப்படுவதில்லை. புலி என்பது இயற்கை எப்படி மெதுவாக அழிகிறது என்பதற்கான அடையாளம் என்று புரிந்துகொள்ளலாம்.
புலி மீது எதற்கு கவனம் செலுத்தினீர்கள்?
வனங்களின் பாதுகாப்பு பற்றி மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினேன். சூழல் அமைப்பில் புலிகளின் பாதுகாப்பிற்கு முக்கிய பங்குண்டு. அதனை காப்பாற்ற முனையும்போது பூச்சிக்கள், ஊர்வன, பிற உயிரினங்கள் என அனைத்துமே பாதுகாக்கப்பட வாய்ப்புள்ளது. இயற்கையில் குறிப்பிட்ட விலங்கு அழிவை சந்தித்தால் அதில் மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படாமல் தப்பித்து விட முடியாது. நாம் அனைவருமே இதில் இணைந்துள்ளோம்.
லிவ் மின்ட்
உதிதா ஜூன்ஜூவாலா
கருத்துகள்
கருத்துரையிடுக