ட்விட்டரை பணிய வைக்க படாதபாடு படும் மத்திய அரசு!

 

 

 

 

 

Twitter Removed Blue Tick Of Vice President Venkaiah Naidu ...

 

 

Dom's Take: GoI vs Twitter - Rediff.com India News 

 சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவின் குடியரசுத் தலைவர் முகமது புகாரி, தனது கருத்தை வெளியிட மறுத்து நீக்கிய ட்விட்டருக்கு தடை விதித்தார். அரசின் தணிக்கை முறைக்கு ஆதரவான கூ செயலிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு புதிய தகவல்பாதுகாப்புக்கொள்கையை உருவாக்கி அதற்கு ஏற்பட சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டுப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.

ட்விட்டர் மட்டும் முரண்டு பண்ண அதனை பின்விளைவுகளை எ

ண்ணிப் பாருங்கள் என மத்திய அரசு மிரட்டி வருகிறது. பாஜக வைச் சேர்ந்த சம்பித் பத்ரா காங்கிரஸ் கட்சி கோவிட்டைப் பயன்படுத்தி டூல்கிட் பிரசாரங்களை, திட்டங்களை வகுக்கிறது என குற்றம் சாட்டினார். ட்விட்டரையும் கூட போகிற போக்கில் செய்திகளை மாற்றி வெளியிடுகிற ஊடகம் என்று திட்டினார். இதற்கு தகவல் தொடர்புத்துறை அமைச்சகமும் முட்டுக்கொடுத்தது. குருகிராமில் இருந்த ட்விட்டர் நிறுவனமும் மிரட்டப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரியாக ட்விட்டர் நியமிக்கவேண்டும் என்பதுதான் அரசின் சட்டம் சொல்லும் நியதி.

மே 27இல் , அரசின் சட்டங்களைப் படித்த ட்விட்டர், அரசு, ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறது. இது திறந்த வெளிப்படையான தன்மையாக இல்லை என்று கூறியது. பிறகு நிறுவனத்தை மிரட்டும் அரசின் வேலைகளை தொடங்கின. ட்விட்டர் நிறுவனம் இதற்கு ஒருவாரம் காலக்கெடு கேட்டது.

இணையம் மற்று்ம் டிஜிட்டல் தளங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இயங்கி வந்திருக்கின்றன. இதன் வழியேதான் இ வணிகமும், தகவல்தொடர்பும் சிறப்பாக வளர்ந்தன. சமூக வலைத்தளங்கள் இதில் புழங்கத்தொடங்கிய பிறகு, புதுமைத்திறனை பலரும் வெளிப்படுத்தும் விதமாக இயங்கத் தொடங்கினர். இதில் பேசப்படாத கருத்துகள், விமர்சனங்கள், இயக்கங்கள், வணிகம் கிடையாது என்ற அளவில் வளர்ச்சி இருந்தது. அச்சு மற்றும் ஊடக நிறுவனங்கள் ஏராளமான விதிகளால் கட்டப்பட்டவை. இதில் வெளியிடப்படும் செய்திகளை அரசு கட்டுப்படுத் த முடியும். ஆனால் சமூக வலைத்தளங்கள் எளியவர்களின் குரல்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் தளமாக இருந்தன.  அச்சு, ஊடக நிறுவனங்களில் செய்திகளை வெளியிடுவது அதிக செலவு பிடிப்பதாக இருந்தது. ஆனால் சமூக வலைத்தள நிறுவனங்கள் இதற்கு மாற்றாக இருந்தன.

செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை 1867, டிவி ஒழுங்குமுறை சட்டம் 1995 ஆகிய சட்டங்கள் மூலம் அச்சு, ஊடக நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் டிஜிட்டல் முறையில் செய்தி வெளியிடுவதை கட்டுப்படுத்த எந்த சட்டங்களும் இல்லை. எல்லைகளும் இல்லை. குறிப்பிட்ட இடத்தில் இயங்கும் நிர்பந்தம் கூட இல்லை.

2011ஆம் ஆண்டில் வாஜ் பாய் தலைமையிலான அரசு தொழில்நுட்ப சட்டம் ஒன்றை உருவாக்கியது. இது கூட இணையக் குற்றங்களுக்கானதுதான். சமூக வலைத்தளங்கள் அதிகளவு சட்டங்களால் கட்டுப்படாமல் இருந்ததற்கு காரணம் , அவை வலதுசாரிகளின் கையாள்களாக மாறி தேர்தலில் வெல்ல உதவியதுதான். இதுதொடர்பான உண்மைகளை  ஸ்வாதி சதுர்வேதி ஆம் ஐ ட்ரோல் இன்சைட் தி சீக்ரெட் வேர்ல்ட் ஆப்  தி பிஜேபி நூலில் எழுதியுள்ளார்.



தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
குர்பீர் சிங்


கருத்துகள்