நளபாக ருசியில் எழுதப்பட்ட கட்டுரைகள்! - பாட்டையாவின் பழங்கதைகள் - பாரதி மணி
பாட்டையாவின் பழங்கதை
பாரதி மணி
வாசகசாலை
உயிர்மையில் பாரதிமணி தொடராக எழுதிய கட்டுரைகளை வாசித்தவர்கள் யாரும் சுவாரசியமான கட்டுரைகளை தவறவிட மாட்டார்கள். இந்த நூலில் மொத்தம் பதினான்கு கட்டுரைகள் உள்ளன. இவைதவிர பேஸ்புக்கில் எழுதிய சிறு பத்திகளும் உள்ளன.
பாரதிமணி எழுதிய கட்டுரைகள் பேஸ்புக் பதிவுகளை சிறப்பானவையாக வந்துள்ளன என்பதை வாசகர்கள் உணர முடியும்.
க.நா.சுவின் மகளான ஜமுனாவை திருமணம் செய்த சம்பவங்களை விளக்கும் கட்டுரை பிரமாதமாக உள்ளது. ஒருவர் எந்த சூழ்நிலையிலு்ம் தனது நேர்மையையும் நாணயத்தையும் கைவிடாமல் இருந்தால் அவருக்கு எந்த ஆபத்தான நிலையிலும் துணைநிற்கும் நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதற்கு வழக்குரைஞர் அகுஜாவே சான்று.
தி.ஜானகிராமன் பற்றிய கருத்துகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எது அவருடைய சிறந்த நாவல் என்ற சர்ச்சை இன்றைய வரைக்கும் உள்ளது. விமர்சனங்களையும் அதை எப்படி அவர் எடுத்துக்கொண்டார் என்பதையும் வாசிப்பின் சுவாரசியம் குறையாதபடி பாட்டையா எழுதியுள்ளார்.
பிரண்டையை வயிற்றில் கட்டுவது, கடுகு தாளிப்பது என்ற கட்டுரைகள் பார்க்க முதலில் சாதாரணமாக இருந்தாலும் படிக்கும் யாருக்கும் இதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா என்றே தோன்றும்.
நரேந்திர மோடி கட்டுரை என்பது படிக்க வினோதமாக இருந்தாலும் அந்த சம்பவம் நடக்கும்போது பலருக்கும் பிரதமர் மீது கடுமையான கோபம்தான் ஏற்பட்டிருக்கும். பணமதிப்பு நீ்க்கம் என்பது மருத்துவர்களை மட்டுமல்ல அடித்தட்டு மக்களையும் பெரிதும் பாதித்த ஒன்று. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
கலைஞரைப் பற்றிய கட்டுரை அவரைப் பற்றி அறிந்த செய்திகளை வைத்து தொகுத்தே சிறந்த கட்டுரையாக வந்திருக்கிறது. பேஸ்புக் பதிவில் வந்த ரேடியோவுக்கான இடம் ஒதுக்கல் செய்தி உண்மையில் வேறுபாடுகள் இருந்தாலும் கூட பொதுவான பயன் என்று வரும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு சாட்சி.
சுவையான அவியல்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக