மேற்கு வங்க தேர்தலில் மோடி தோற்றுப்போனது தேசிய அளவில் அவருக்கு பின்னடைவுதான்! - முன்னாள் பிரதமர் தேவேகௌடா
முன்னாள் பிரதமர் தேவகௌடா
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டணி மூலம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு இப்போது 88 வயதாகிறது. மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு இப்போது உழைத்து வருகிறார். அவரிடம் அரசியல் நிலவரங்களைப் பற்றி பேசினோம்.
அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் அரசில் எப்படி மாறியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
அன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிறைய கட்சிகள் விலகின. இன்று மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறார். சிவசேனா கட்சி அவர்களின் கூட்டணியில் இல்லை. காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் பலவீனமாக உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 27 கூட்டணிக் கட்சிகளை ஒன்றாக இணைத்து ஆட்சி நடத்தியது. இனிமேல் அதுபோல இணைப்பு சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. நான் தேசிய அரசியலில் இருந்து விலகிவிட்டேன். இப்போது கர்நாடகாவை மட்டுமே கவனித்து வருகிறேன்.
நீங்கள் பிரதமராக கூட்டணிக்கட்சிகள் மூலம் பதவியேற்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்களது பதவிக்காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
இதுபற்றி முன்னாள் கேபினட் செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் புத்தகம் எழுதியுள்ளார். அதில் எங்களது அரசு கூட்டணிக்கட்சிகளை அரவணைத்து எப்படி தொலைத்தொடர்பு கொள்கை, சீனாவுடன் உறவு, வங்கதேசத்துடன் நீர் பகிர்வு ஒப்பந்தம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, டெல்லி மெட்ரோ திட்டம் , காஷ்மீர் பிரச்னை பற்றி எடுத்த முடிவு ஆகியவற்றை விளக்கியுள்ளது. கூட்டணிக் கட்சி தலைவராக ஒருவரின் நிர்வாகத்திறமை, எப்படி அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு முடிவெடுப்பது, நாட்டை மேம்படுத்துவது, வேற்றுமைகளை களைவது என்பது பற்றிய நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம், ஊழலின்றி ஆட்சி செய்தோம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதா?
தற்போது நடைபெற்ற ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
மேற்கு வங்கத்தில் பெரிய போரே நடைபெற்றது எனலாம். அனைவரும் பாஜகதான் வெல்லும் என்று நினைத்தபோது மக்களின் ஆதரவைப் பெற்று மம்தா வெற்றி பெற்றிருக்கிறார். இது தேசிய அளவில் மோடிக்கு பின்னடைவுதான். அடுத்த ஆண்டுகளில் பாஜக, காங்கிரஸ் எப்படி செயல்படுகிறார்கள் எ்ன்பதை இனிதான் பார்க்க வேண்டும் இரண்டுமே தேசியகட்சிகள் என்பதால் இவற்றின் செயல்பாடு முக்கியம். அடுத்து பிராந்திய கட்சிகளைப் பொறுத்தவரை இதற்கு முன்னரே இடதுசாரிக் கட்சியின் ஜோதிபாசு, தமிழ்நாட்டிலுள்ள கருணாநிதி ஆகியோர் ஒன்றாக இணைந்துள்ளனர். எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என பார்ப்போம்.
எதிர்கட்சி தலைவர்கள் ஒன்றாக இணைந்து.. நீங்கள் உட்பட கோவிட்டுக்கு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினீர்கள் அல்லவா?
மக்களவை, மாநிலங்கள் அவை நடக்காதபோதும் மக்கள் பிரச்னைக்காக நான் பிரதமருக்கு கடிதங்கள் எழுதுவதுண்டு. இப்படி மக்கள் பிரச்னைக்காக கடிதம் எழுதுவதில் அரசியல் நோக்கங்கள் ஏதுமில்லை.
எதிர்காலத்தில் கூட்டணிகட்சிகள் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புகள் உள்ளதா?
பாஜக இப்போது பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளது. அவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம். இன்றே எதிர்காலத்தைப் பற்றிய முடிவுக்கு வரமுடியாது. மத்திய அரசு தடுப்பூசி மற்றும் பிற பிரச்னைகளில் சிக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எப்படி மதச்சார்ப்பற்ற கட்சிகளுடன் இணைகிறார்கள் என்பதைக் கொண்டுதான் தேர்தலையும் முடிவையும் தீர்மானிக்க முடியும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வலுவான இடத்தில் உள்ளது.
நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. 2023இல் பதவிக்கு வர காங்கிரசும், பாஜகவும் கடுமையாக உழைத்து வருகின்றன. அதேசமயம் பிராந்தியக் கட்சியான நாங்களும் உழைத்து வருகிறோம். குமாரசாமி தலைமையில் கட்சியை வலுப்படுத்தி வேற்றுமைகளை களைந்து ஒன்றாக உழைத்து வருகிறோம். குமாரசாமிக்கு மக்களிடையே நல்ல மதிப்பு உள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
ராமு பாட்டீல்
கருத்துகள்
கருத்துரையிடுக