ஏழு ஆண்டுகளில் நொறுங்கிப்போன குடியரசு நாடும், அதன் அமைப்புகளும்!

 

 

 

 

 

സവര്‍ക്കര്‍ക്കല്ല ഗോഡ്‌സെയ്ക്കാണ് ഭാരതരത്‌ന കൊടുക്കേണ്ടത് ...

 

 


தேசிய ஜனநாயக கூட்டணி ஏழு ஆண்டுகளை ஆட்சியில் கடந்துள்ளது. அதில் நிறைய விஷயங்களை சாதித்துள்ளதாக பெருமையாக பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் பணமதிப்புநீக்க செயல்பாட்டிற்கு பிறகு பொருளாதாரம் தடுமாறி வருகிறது. ஆத்மாநிர்பார் எனும் சுயசார்பு திட்டம் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளின் இறக்குமதியை சார்ந்து நிற்பது தடுக்கப்படும் என அரசு கூறியது. ஆனால் இதில் இந்தியா வெல்லவில்லை. வென்றது கொரோனாதான்.


இந்தியப் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் நிற்கிறது. கடந்த ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி நான்கு சதவீதத்தில் இருக்கிறது. 2013-14 காலகட்டத்தில் பொருளாதாரம் 1.85 டிரில்லியன் டாலர்களாக இருந்தது. சீனாவை ஒப்பிட்டால் அவர்கள் 16.64 டிரில்லியன் டாலர்களாக இருந்தது. சேமிப்பு, செலவு செய்யும் அளவு வேலைவாய்ப்பு என அனைத்துமே பாதிக்கப்பட்டிருந்தது. வேலையின்மை அளவு கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருந்தது. தனிநபர் வருமான அளவும் கூட 5.4 சதவீதமாக குறைந்துவிட்டது. பொதுநிறுவனங்களை விற்கத் தொடங்கியதால் பட்ஜெட்டில் பற்றாக்குறை சதவீதம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆத்மாநிர்பார் என்று கூறுவது எந்தளவு பிரயோஜனம் ஆகும் என்பதை நாமே புரிந்துகொள்ளலாம். இந்தியா தற்போது கென்யாவில் இருந்து உணவுக்கான உதவியைப் பெறு்ம் நிலையில் உள்ளது. 2004ஆம் ஆண்டு இந்தியாவில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வெளிநாடுகளின் உதவிகளை ஏற்க மறுத்தது நினைவு வருகிறதா?



அமைப்புகளின் சுதந்திரம்


அமைப்புகளை உடைத்து அதன் சுதந்திரத்தையும் மதிப்பையும் உருக்குலைப்பதுத தேசிய ஜனநாயக, பாஜக அரசின் பாணி. அந்த வகையில் தேர்தல் ஆணையம், சிபிஐ, நீதிமன்றம், ரிசர்வ் வங்கி எ்ன அனைத்து அமைப்புகளும் மெல்ல தமது நம்பிக்கைத்தன்மையை இழந்து வருகின்றன. இந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்தையும் பிரதமர் மோடி புறக்கணித்து மத்திய அரசு மீதான நம்பிக்கையை சாதாரண மக்களின் மனதிலிருந்தும் நொறுக்கினார்.


நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் பல்வேறு மசோதாக்கள் விவாதம் செய்து சட்டமாக்கப்படும் இயல்பான முறை இப்போது கையாளப்படுவதில்லை. அனைத்துமே அவசர சட்டங்களாக உடனடியாக அமலுக்கு வருகின்றன. பாராளுமன்ற நிலைக்குழு விசாரித்து அதனை அமலாக்கும் முறையும் கூட மெல்ல மற்க்கடிக்கப்பட்டு வருகிறது. அரசைப் பொறுத்தவரை ஒரே நாளில் ஏராளமான மசோதாக்களை சட்டமாக்கவேண்டும் என்று நினைக்கிறது. இப்படி நினைக்கும் அரசில் ஜனநாயகம் எப்படி பிழைத்திருக்கும். மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளில் கூட அரசு எதிர்க்கட்சிகளை பேச விடுவதில்லை.


சமூகம்


எதை சாப்பிடுவது, எப்படி ஆடை அணிவது ஆகியவற்றோடு சிந்திப்பது, எழுதுவது கூட மத்திய அரசால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.


பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியாவின் அடிப்படையான கட்டமைப்புகளை உடைத்து நொறுக்கி வருகிறது. பெரும்பான்மைவாதத்தை

முன்னெடுத்து வருகிறது. குடியுரிமை சட்டத்தை சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி மக்களை கலவரப்படுத்தியது, டெல்லி கலவரம் பற்றி அமைதி காத்தது. விவசாய சட்டங்களை தடாலடியாக அமலாக்கி சிறு, குறு விவசாயிகளை தவிக்க விட்டது என சொல்லிக்கொண்டே போகலாம். இதற்காக நடத்தப்பட்ட அமைதியான போராட்டத்தை உலகமே கவனித்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் கூட்டாட்சி முறையை எந்தளவு உருக்குலைக்க முடியுமோ அத்தனை வழியிலும் மத்திய அரசு முயன்றுள்ளது. தற்போதும் பல்வேறு சட்டங்களின் வழியாக செய்து வருகிறது. ஒன்பது மாநிலங்களை தவறான வழிகளைப் பயன்படுத்தி பாஜக கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கடுமையான அழுத்தங்களும் திட்டங்களை அமல்படுத்துவதில் பாரபட்சமும் காட்டப்படுகிறது. இதற்கு தடுப்பூசி திட்டமே சரியான எடுத்துக்காட்டு. காகித்ததில் கூட்டாட்சி என மோடி அரசு சொன்னாலும் நடைமுறையில் அதற்கான அணுவளவு சான்றும் கிடையாது.


வெளிநாட்டு உறவுகள்


வெளிநாட்டு உறவுகளைப் பொறுத்தவரை அவை மோடியின் விளம்பர பிரசாரங்களாகவே வடிவமைக்கப்பட்டன. இக்கட்டுரை எழுதப்படும்போதும் கூட சீனா வின் ஆக்கிரமிப்பில் உள்ள இடம் மீட்கப்படவில்லை. இந்தியாவின் வெளிநாட்டு்கொள்கை தனிமனிதரின் ஆளுமை சார்ந்து வடிவமைக்கப்பட்டதால் சீனா இந்திய விவகாரத்தில் பெரிய பயனைத் தரவில்லை. பாகிஸ்தானை இந்தியா கையாளும் முறையும் தோல்வியைத் தழுவியுள்ளது பல்வேறு திட்டங்களில் யூ டர்ன் அடித்துள்ளது. சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் நல்லுறவு பேணுதலிலும் கூட மோடி முதலில் இந்தியா கடைசியில் எனும் கொள்கை பின்பற்றப்படுகிறது. இதனால் இந்தியா சுலோகன் அளவில் அச்சே தின், ஆத்மா நிர்பார் என பிரபலப்படுத்தப்பட்டாலும் கூட செயல்பாட்டில் கடைசிப்படியில்தான் உள்ளது.



டெக்கன் கிரானிக்கல்

மனிஷ் திவாரி


காங்கிரஸ் கட்சி



கருத்துகள்