வெடிமருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி வெடிமருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? ஐரோப்பாவில் ரோஜர் பாகோன் என்பவர் வெடிமருந்துக்காக சூத்திரத்தை எழுதினார். ஜெர்மனைச் சேர்ந்த துறவி பெர்த்தோல்ட் ஸ்வார்ட்ஸ் என்பவர், வெடிமருந்தை உருவாக்கினார். போரில்லாத காலங்களில் வெடிமருந்தை சுரங்கம் கட்டுமான பொறியியலுக்கும் பயன்படுத்தினர். பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், கரி ஆகியவை வெடிமருந்தை தயாரிக்க உதவுகின்றன. இந்த சூத்திரத்தில் வெடிமருந்தை சீனர்கள் தயாரித்தனர். வெடிமருந்தை மூங்கிலில் நிரப்பி, மூங்கில் தோட்டா என்ற பெயரில் போரில் பயன்படுத்தி புத்திசாலிகள் சீனர்கள். டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்? ஆய்வாளர் ஆல்பிரட் நோபல். இவரது பெயரில்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நைட்ரோ கிளிசரினை இத்தாலி நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் அஸ்கனியோ சோபிரிரோ கண்டுபிடித்தார். ஆனால், இதை பராமரிப்பது கடினமாக இருந்தது. நைட்ரோகிளிசரினை போரசுடன் சேர்த்தால், அதை கட்டுப்படுத்தலாம் என ஆல்பிரட் நோபல் கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் கட்டுப்படுத்தும் இயல்பு கொண்ட டைனமைட்டை தயாரித்தார். டைனமைட் காரணமாக ஏராளமான மக்கள் இறந்த...