இடுகைகள்

தேர்தல் 2023 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயலில் நேர்மையாக இருந்து வெற்றிகண்ட பெருநிறுவன வழக்குரைஞர்! - நயனா மொட்டம்மா

படம்
  நயனா மொட்டம்மா நயனா மொட்டம்மா - கர்நாடக சட்டமன்றத்தொகுதி எம்எல்ஏ நயனா மொட்டம்மா கார்ப்பரேட் வழக்குரைஞராக இருந்து எம்எல்ஏ வாக மாறியவர் கர்நாடக மாநிலத்தின் முடிகெரே தொகுதியில் மொட்டம்மா வெல்லுவார் என யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மால்நாடு, சிக்மகளூர் என இரு புகழ்பெற்ற பகுதிகளின் செல்வாக்கும் இங்கு உண்டு. இந்த பகுதியில் 1978ஆம்ஆண்டு இந்திராகாந்தி போட்டியிட்டு வென்று பிறகு தேசிய அரசியலில் வெற்றி பெற்றார். மொட்டம்மா 2015ஆம் ஆண்டு தொடங்கி அரசியலில் இருக்கிறார். இந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவரை வீழ்த்த தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதைப்பற்றியெல்லாம் மொட்டம்மா கவலையே படவில்லை.  அதே படங்ளை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து பெண்களை உடைகளை கொண்டு தீர்மானிக்க கூடாது என முகத்தில் அறைந்தது போல பதிவுகளை இட்டார். கர்நாடகாவின் 224 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பெண்களில் மொட்டம்மாவும் ஒருவர். 1957ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அங்கு போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கை 224 என்ற அளவுக்கு கூட உயரவில்லை. மொட்டம

பொருளாதார முன்னேற்றத்தில் சாதித்த கர்நாடகா - முதலீடு கொழிக்கும் பெங்களூரு

படம்
  கர்நாடகம் கர்நாடகா மாநிலத்தின் வரைபடம் பொருளாதார வளர்ச்சியில் சாதித்த கர்நாடகா தேர்தல் பணிக்காக இருபத்தைந்து ஆண்டுகளில் முப்பது முறை கர்நாடகாவிற்கு சென்றிருக்கிறேன். பல்வேறு எழுத்தாளர்களோடு சென்ற பயணத்தில் நிறைய ஆச்சரியங்கள் கிடைத்துள்ளன. கடந்த மாதம் கர்நாடகத்திற்கு அரசியல் பயணமாக சென்றேன். அங்கு நிறைய ஆச்சரியங்கள் எனக்காக காத்திருந்தன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்திற்கு சென்றபோது நிறைய வளர்ச்சி பணிகள் நிலுவையில் இருந்தன. அதாவது நடந்துகொண்டு இருந்தன. இம்முறை அவை முழுமை பெற்றிருந்தன. மாறாத காட்சியாக உள்ள இடங்கள் அப்படியேதான் இருந்தன என்றாலும் வளர்ச்சி என்ற பார்வையில் பார்த்தால் பரவாயில்லை என்ற மனதை தேற்றிக்கொள்ளலாம். பிற இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் கர்நாடகம் ஏழையான மாநிலம் கிடையாது. பெங்களூரு நகரத்தில் குவிந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் காரணமாக விவசாய முறைகள் நவீன தொழில்நுட்பத்துடன் கைகோத்தது. இதனால் அங்கு பொருளாதார முன்னேற்றம் உருவானது. ஆண்டிற்கு 8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு முன்னேற்றம் கிடைத்தது. நாம் கருத்தில் கொள்ளவேண்டி