இடுகைகள்

ரேச்சல் கார்சன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மௌன வசந்தம் நூலின் பங்களிப்பு!

படம்
       பல்லுயிர்தன்மை என்றால் என்ன? குறிப்பிட்ட இனத்தில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட உயிரினங்கள் இருக்கும். அதாவது அவற்றின் மரபணுக்கள் வேறுபட்டவையாக இருக்கும். உலகம் முழுக்க 15 அல்லது 100 மில்லியன் உயிரினங்கள் இருக்கும் என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் ஏக்கர் சதுப்புநிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால் பல்லுயிர்த்தன்மை அழிந்து வருகிறது. அமெரிக்கா காடுகள் அனைத்தும் அரசுக்கு சொந்தமா? இல்லை அரசுக்கு சொந்தமான காடுகள் இருபது சதவீதம் மட்டுமே. பெருநிறுவனங்களுக்கு பதினைந்து சதவீதங்கள் சொந்தமாக உள்ளன. ஐம்பத்தேழு சதவீத காடுகள் தனியார் சொத்துக்களாகவே உள்ளன. பருவ மழைக்காடுகளின் முக்கியத்துவம் என்ன? பருவமழைக்காடுகளில் இருந்துதான் புற்றுநோய்க்கான மருந்துகளின் மூலம் பெறப்படுகிறது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்கு தேவையான மருந்துகளின் அடிப்படை மூலிகைகள் பருவ மழைக்காடுகளில் உள்ளன. அவற்றைப் பெறாமல் மருத்துவதுறை உயிரோடு இருக்க முடியாது. ஏகபோகமாக லாபம் ஈட்டவும் முடியாது. காடுகள் அழிவதற்கு என்ன காரணம்? வேளாண்மை, நகரங்களைக் கட்ட காடுகளை அழித்தல், காட்டுத்தீ, மழை வெள்ள...

சூழல் போராட்டங்களின் முன்னோடி ரேச்சல் கார்சன்!

படம்
       இயற்கை செயல்பாட்டாளர் ரேச்சல் கார்சன் இன்று காடுகள் வணிகத்திற்காக திட்டமிட்டு விபத்துபோல நெருப்பிட்டு எரிக்கப்படுகின்றன. பாமாயில் உற்பத்திக்காக இயற்கை வளங்களை அழித்து பன்மைத்துவ சூழலை புறக்கணித்து அரசு ஏகபோக சர்வாதிகாரமாக நடந்துகொண்டிருக்கிறது. காடுகளின் பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இன்று கிரேட்டா துன்பெர்க், பியஷ் மனுஷ், முகிலன், நித்தியானந்த் ஜெயராமன், பூவுலகின் நண்பர்கள் என போராடி வருகிறார்கள். இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர் ரேச்சல் கார்சன். அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள ஸ்பிரிங்டேலில் கார்சன் பிறந்தார். எழுத்தாளர். கடல்சார் உயிரிய ஆராய்ச்சியாளர், இயற்கை செயல்பாட்டாளர் என பல்வேறு வகைகளில் வேலை செய்து வந்தார்.  1962ஆம் ஆண்டு தி சைலண்ட் ஸ்பிரிங் என்ற நூலை எழுதினார். இந்த நூலை நீங்கள் தமிழில் மௌன வசந்தம் என்ற பெயரில் வாசிக்கமுடியும். இயற்கை சூழலை டிடிடீ என்ற வேதிப்பொருள் எப்படி பாதிக்கிறது என்பதை ஆவணப்பூர்வமாக நூலில் சொல்லிருந்தார். இதுவே அமெரிக்காவின் நிலங்களில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறத...