இடுகைகள்

நூல்வெளி 2 -ப்ராட்லி ஜேம்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேராசைக்கு எதிராக ஒரு குரல்: மயிலம்மா : போராட்டமே வாழ்க்கை

படம்
மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை ஜோதிபாய் பரியாடத்து தமிழில் - சுகுமாரன் எதிர் வெளியீடு விலை ரூ. 55 நாம் தொடர்ந்து இயற்கையின் கொடைகளைக் காப்பாற்றவேண்டிய தேவை இருந்துகொண்டே இருக்கிறது. பெரிய நிறுவனங்கள், அவர்களுக்காக தரகு வேலை செய்யும் இந்திய நிறுவனங்கள், பேராசை கொண்ட தனிப்பட்ட முதலாளிகள், அறியாமை கொண்ட பேராசையின் சார்பில் நிற்கும் மனிதர்கள் என நாம் தொடர்ந்து இயற்கையை சீரழிக்கும் பல தீய எண்ணங்களுக்கு எதிராக போராடிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகிவருகிறது. ஆதிவாசிப் பெண்ணான மயிலம்மாவும் தனது கணவரற்ற சூழலில் ஆறு குழந்தைகளோடு வாழ போராடி அவர்களுக்கான வாழ்க்கைப் பாதையினை உருவாக்கி கொடுத்ததோடு நிற்காமல் தனக்கு ஆதரவளித்த இயற்கை தாயினை, அவளது மடியினை ஈரத்தை பிறரும் உணர வாய்ப்பு தரும் பொருட்டு பிளாச்சிமடை பகுதியில் தொடங்கப்பட்ட கோக கோலா நிறுவனத்தின் நீர் சுரண்டலுக்கு எதிராக நீதி கேட்டு போராடியதன் மூலம் புகழ் பெற்றவர். இந்த நூல் வெறும் போராட்ட வடிவத்தை மட்டும் பேசாமல் மயிலம்மா தன் வாழ்க்கை எப்படி இருந்தது என்று இயல்பான தன் மொழியில் கூறிச்செல்கிறார். அதனால்தான் இந்த எழுத்

இதழாளர்களின் பைபிள் : நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
இதழாளர் கையேடு சிவந்தி ஆதித்தனார் ராணிமுத்து பதிப்பகம் விலை ரூ. 20 நூலின் பெயரிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது எது மாதிரியான நூல் என்று. அதேதான். ஆனால் மிக எளிமையான கையேடாக எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தினத்தந்தி நாளிதழை வாங்கி நீங்கள் வாசித்து பார்க்கலாம். ஆமாம். தினந்தந்தியை நிறுவி அந்நிய மாநிலத்தவர்கள் பலருக்கும் தினமும் ஐந்து ரூபாயில் தமிழ் பழக வாய்ப்பளிக்கும் பத்திரிகையை தொடங்கியவர் ஆதித்தனார்தான் புத்தகத்தின் ஆசிரியர்.  நூலில் கூறப்படும் விதிகளை அனைத்தையும் தன் வாழ்நாளில் அவர் பெற்ற அனுபவங்களின் வழியேதான் கூறுகிறார் என்பதை நூலின் பின்புறம் இருக்கும் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்பை வாசிப்பவர்களுக்கு எளிதாக புரிந்துவிடும்.  இன்றும் தினத்தந்தி பல இணையதளங்கள், தொலைக்காட்சிகள் வந்தாலும் தினமும் ஒருகோடி வாசகர்களை பெற்று  எளிய மக்களின் செய்தி பத்திரிகையாக  முன்னணியில் நிற்க காரணம் ஆதித்தனார் சொன்ன விதிகளை அந்நிறுவனத்தார் தொடர்ந்து பின்பற்றி வருவதுதான் காரணம் என்று நிகழ்கால உதாரணமே காட்டமுடியும்.  கா