இடுகைகள்

ரா.கி.ரங்கராஜன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குமுதத்தை விற்பனை சிகரத்தில் ஏற்றிய எடிட்டர் எஸ்ஏபி! கடிதங்கள்- கதிரவன்

படம்
            மொழி எனும் தீராந்தி அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நேற்று அநதிமழை இதழ் படித்தேன் . அதில் உடல் எடை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தனர் . உடல் பருமன் என்பதை நாம் எப்படி பார்க்கவேண்டும் , பிறர் அதை எப்படி பார்க்கிறார்கள் என எழுதியிருந்தனர் . இதழை முழுமையாகப் பார்க்கும்போது சுமார்தான் . கழுதை மருத்துவர் ஒருவரின் பணி சார்ந்த அனுபவங்கள் வாசிக்க நன்றாக இருந்தது . நேற்று தீராநதி இதழைப் படிக்க நினைத்தேன் . அருகிலிருந்த கடைகள் எங்கிலும் இதழ் தீர்ந்துவிட்டது அல்லது இல்லை என்றே சொன்னார்கள் . பிறகு அலுவலக சகாவிடம் சொல்லி வாங்கினேன் . லாக்டௌனில் நின்றுபோன பத்திரிகை இப்போது மீண்டும் வருகிறது . இந்தியாவில் நிலவும் மொழிப்பிரச்னை பற்றி காந்தி பேசிய உரைகளைக் கொண்ட நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன் . இந்து , முஸ்லீம் ஒற்றுமைக்காக தேவநாகரி லிபியில் இந்தி படிக்க வலியுறுத்துகிறார் காந்தி . 30 பக்கங்களை படித்திருக்கிறேன் . வெயில் தாக்கம் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது . உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் . நன்றி ! அன்பரசு 8.6.2022 மயிலாப்பூர் -------------

அமெரிக்காவை திகைக்க வைக்கும் அழகிய இரும்பு பட்டாம்பூச்சி! - லாரா - ரா.கி.ரங்கராஜன் - நாவல்

படம்
  லாரா  ஷிட்னி ஷெல்டன் (தி ஸ்டார்ஸ் ஷைனிங் டவுன்) தமிழில் - ரா.கி. ரங்கராஜன்  அல்லயன்ஸ் வெளியீடு ரூ.400 லாரா கேமரான் என்ற கட்டுமான உலகின் மகத்தான தொழிலதிபர் பற்றிய ஏற்றமும் வீழ்ச்சியும் பற்றிய கதை.  ஸ்காட்லாந்தைப் பாரம்பரியமாக கொண்ட குடும்பம் லாராவினுடையது. ஆனால் அவளது அப்பாவிற்கு வாழ்க்கையில் பெரிய லட்சியம் கிடையாது. அதாவது வயிற்றுப்பாட்டை சமாளிக்க கூட திறனில்லாத தறுதலை. இந்த நேரத்தில் அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறார். அவருக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் பெண் குழந்தை மட்டுமே பிழைக்கிறது. ஆண் குழந்தை பிறந்தவுடனே இறந்துபோகிறது.  இது தான் நாயகியின் அறிமுக காட்சி. ராஜ மௌலி படம் போல நினைக்க ஏதுமில்லை. எல்லாமே அவமானங்கள்தான். லாட்ஜ் ஒன்றை நிர்வாகம் செய்து அதில் கிடைக்கும் வாடகை வருமானத்தை ஓனரிடம் ஒப்படைத்தால் கிடைக்கும் தொகையை வைத்துத்தான் லாராவின் அப்பா, விலைமாது விடுதியில் போதையேற்றிக்கொண்டு கிடக்கிறார்.  இப்படியிருக்க மெல்ல லாரா லாட்ஜில் உள்ள விவகாரங்களை கவனிக்கிறாள். பிறகு அப்பா, விபத்தாகி படுத்துவிட அனைத்து விஷயங்களையும் அவளை கவனிக்கும்படி ஆகிறது. வ

எழுத்து என்பது நம்பிக்கையின் செயல்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  எனது மடிக்கணினி பழுதாகிவிட்டது. அதனை சரி செய்ய லினக்ஸ் தெரிந்த ஆட்களிடம் கொடுத்திருக்கிறேன். கணினியில் 60 பக்கம் எழுதிய நூல் இருந்தது. அதுவும் மெல்ல அழிந்துபோய்விட்டது. கணினியின் இயக்கமும் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்படி ஒருபோதும் நடந்ததே இல்லை என லினக்ஸ் நண்பர் சீனிவாசன் சத்தியம் செய்தார். என்னவென்று, எனக்கும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டேன். மேன்ஷனில் ஆட்கள் அதிகரித்துவிட்டதால், இப்போது கடையில்தான் சாப்பிடுகிறேன்.   வேலைப்பளுவில் சமைப்பதும் கடினமாகிவருகிறது. தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலை 150 பக்கங்கள் படித்துவிட்டேன். கதை, அமெரிக்காவில் நடைபெறுகிறது. ட்ரேஸி என்ற பெண் எப்படி தன் அம்மா தற்கொலை செய்யக்கார ணமானவர்களை பழிவாங்குகிறார் என்பதே கதை.  படித்தவரை மேற்குலக நகரக் கதை என்றாலும் சிறப்பாகவே எழுதியிருக்கிறார். அலுவலகத்தில் கிறிஸ்மஸிற்கு விடுமுறை கிடையாது என கூறிவிட்டார்கள்.  நன்றி! அன்பரசு 24.12.2021 ---------------------------- எழுத்தாளர் இசபெல் அலண்டே அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலம

12G பஸ்சில் சில ஆண்டுகளுக்குப் பிறகு இனிய பயணம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? ஜனவரி 3 இதழ் வருவதற்கான எழுத்துவேலைகள் தொடங்கிவிட்டன. கிறிஸ்மஸிற்கு கூட அலுவலகத்தில் விடுமுறை விடவில்லை. வேலை செய்யும் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை. 50 இதழ்கள் வெளிவர வாய்ப்புள்ளது. மேன்ஷனில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை  10க்கும் மேல் போய்விட்டது. எனவே, சமையல் செய்வதை நிறுத்திவிட்டேன். கொஞ்சம் வயிற்றுக்கு பொருந்தி வரும் உணவகங்களில் சாப்பிட்டுவருகிறேன்.  தாரகை - ரா.கி.ரங்கராஜன்  எழுதிய நாவலைப் படித்து வருகிறேன். மாஃபியா கும்பலால் பாதிக்கப்படும் பெண் ட்ரேஸி எப்படி திருடி ஆகிறாள், அவளது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததா என்பதுதான் கதை. முழுக்க வெளிநாடுகளில் நடக்கிறது. 361 பக்கங்கள் படித்திருக்கிறேன். ரொமான்டிக் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். படத்தில் பெரிதாக எதிர்பார்த்து பார்க்க ஏதுமில்லை. காதல் காட்சிகளை மட்டும் கவனம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். வேறொன்றும் இல்லை. சிறிய பட்ஜெட் படம்.  நன்றி! அன்பரசு 9.11.2021 --------------------------- அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம். நலமா?  திறக்கக்கூடாத கதவு - ரா.கி.ரங்கராஜன் நாவலைப

தாரகை - சிறையில் தள்ளியவர்களை பழிவாங்கும் இளம்பெண்ணின் துணிச்சல்- ரா.கி.ரங்கராஜன் நாவல்

படம்
தாரகை ரா.கி.ரங்கராஜன் அல்லயன்ஸ் 624 பக்கம் இந்த முறை ஆசிரியர் முழுக்க வெளிநாட்டில் கதையை நடத்திச் செல்கிறார். கதையின் நாயகி, ட்ரேசி. வங்கியில் வேலை செய்து வருகிறாள் ட்ரேசி. அவளது வாழ்க்கையில் அம்மா துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொள்கிறாள். அந்த சம்பவம் நடந்தபிறகுதான் ட்ரேசியின் வாழ்க்கை மாறுகிறது. அவளது பணக்கார காதலன், மெல்ல விலகிப்போகிறான். வேலையை விட்டு நீக்கப்படுகிறாள்.ரொமானோ என்ற குற்றவாளிதான் அவளது அம்மாவின் தற்கொலைக்கு காரணம். அதற்கு பழிவாங்கும் முயற்சியில், மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறாள். அதிலிருந்து விலகி வரும்போது வாழ்க்கை வெகுதூரம் தள்ளிப்போயிருக்கிறது. தனது வாழ்க்கையை, அவள் எப்படி மீட்கிறாள் என்பதுதான் கதை. மொத்தகதையும், பரபர வேகத்தில் செல்கிறது. ட்ரேசியின் வாழ்க்கையில் துயரமான சூழலில் தனக்கு உதவும் மனிதர்கள் யார், ஆறுதல் சொல்பவர்கள் யார் என தெரிந்துகொள்கிறாள். அப்படித்தான் அவளது வாழ்க்கையில் சிறுமி ஆமி, மார்சன், கந்தர், ஜெஃப் ஆகியோர் வருகின்றனர். சிறையில் நடக்கும் சம்பவங்களை வாசிக்கும் ஒருவரால் எளிதாக கடப்பது கடினம். வல்லுறவு செய்யப்பட்ட