இயற்கை பேரிடர்களிலிருந்து இந்திய அரசு எந்த பாடங்களையும் கற்கவில்லை! - அமிதவ் கோஷ்
அமிதவ் கோஷ், எழுத்தாளர் காலநிலை மாற்றம் பற்றிய அக்கறைக்காக எராஸ்மஸ் பரிசை நடப்பு ஆண்டில் பெற்றிருக்கிறார். வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் நாம் கற்கவேண்டியது என்ன? வயநாடு மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதுபோல பேரிடர் சம்பவங்கள் நடக்கலாம். சாலைகள் அமைப்பது, காடுகளை அழிப்பது, மணல் குவாரி, கல் குவாரி, முறையற்ற கட்டுமானங்கள் என இதில் நிறைய ஆதாரப் பிரச்னைகள் உள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு, மேக உடைப்பு பிரச்னைகள் அதிகம் நேரும். டெல்லியில் ஏற்பட்ட அதீத வெள்ளத்தால் மூன்று மாணவர்கள் இறந்துபோனதை நாம் மறந்துவிடக்கூடாது.அந்த மாணவர்கள் பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளநீரில் சிக்கி இறந்துபோனார்கள். புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்திலும் வெள்ளம் புகுந்துவிட்டது. இதற்கு காரணம், நாம் சூழலைப் பற்றி கவலைப்படாமல் கட்டிடங்களை வடிவமைத்து வருவதுதான். இதெல்லாம் நாட்டில் என்னென்ன எப்படிப்பட்ட வி்ஷயங்கள் நடந்து வருகின்றன என்பதைக் குறியீடாக காட்டும் சமாச்சாரங்கள்தான். கோவாவைப் போலவே பிற மாநிலங்களுக்கும் அச்சுறுத்தல் உருவாகி வருகிறதா? 2011ஆம் ஆண்...