இடுகைகள்

கல்லூரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகளின் காதலனின் மேல் தந்தைக்கு உருவாகும் அதீத வன்மம்! தனா 51

படம்
  தனா 51 சுமந்த், சலோனி அஸ்வானி, முகேஷ் கண்ணா இயக்குநர் சூரிய கிரண் இசை சக்ரி  தனா போலீஸ் ஆகவேண்டும் என துடிக்கும் இளைஞர். தினத்தந்தி ஸ்டைலில், வாலிபர். அந்த முயற்சியில் இருக்கும்போது கமிஷனர் அந்த ஊரிலுள்ள ரௌடிகளை பிடிக்க தனாவை ரௌடி போலீஸ் ஆக வற்புறுத்துகிறார். தனாவும் அதன் உள்ளர்த்தம் அறியாமல் ஒப்புக்கொள்கிறார். ஆனால் இறுதியில் அவரது வாழ்வை அழிக்கும் சூழ்ச்சி புரிந்துகொள்ளும்போது காலம் கடந்திருக்கிறது. காதலும் அவரது கையை விட்டு போய்விட்டது. இந்த சூழலில் அவர் என்ன செய்கிறார், கமிஷனரை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.  படத்தின் சுமந்தின் எனர்ஜிக்கு எதுவுமே ஈடு கொடுத்து நிற்பதில்லை. செய்யும் விஷயங்களை யோசிக்காமல் செய்வது போல தெரிந்தாலும் அதன் பின்னணி ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதுதான் தனாவின் பலம். இப்படி இருப்பவனை யாருக்குத்தான் பிடிக்காது. கல்லூரியின் முன்னாள் மாணவன் என்றாலும் அங்கு நடக்கும் ராக்கிங், சீர்கேடுகளை தட்டி கேட்டு உதைத்து திருத்துவது தனாவின் வாடிக்கை.  இப்படி இருக்கையில் அந்த கல்லூரியில் புதிதாக படிக்க வருகிறாள் லட்சுமி. தனா செய்யும் நல்ல விஷயங்களைப் பார்த்து அவளுக்கு அவனைப்

விழுப்புரம் இளைஞர்களை முன்னேற்ற முயலும் விக்ளக் அமைப்பு!

படம்
  இடதுபுறத்தில் முதல் நபர் திரு.கணியம் சீனிவாசன் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் விக்கிமீடியா பவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, அண்மையில் ஹேக்கத்தான் உதவித்தொகைக்கு இந்தியாவில் இரு அமைப்புகளை தேர்ந்தெடுத்துள்ளது. இதில் ஒரு அமைப்பு விழுப்புரத்தில் செயல்பட்டு வருகிறது. ஹேக்கத்தானில் விக்கிப்பீடியா . ஆர்க் தளத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்கிறார்கள்.  பொதுவாக ஐடி நிறுவனங்கள் என்றால் ஹைதராபாத் அல்லது பெங்களூருவைச் சொல்லுவார்கள். ஆனால், விழுப்புரம் அங்கே எப்படி வந்தது என பலரும் நினைப்பார்கள்.  விழுப்புரம் ஜிஎன்யூ லினக்ஸ் பயனர்கள் குழுவின் பெயர், விகிளக். இவர்களைத்தான் விக்கி மீடியா தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள் கணினி, ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் இலவச மென்பொருட்களை பயன்படுத்த கிராம மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர். இதில் கோடிங்குகளை எழுதவும் பயிற்றுவிக்கின்றனர்.  இந்த பயிற்சிக்கு வருபவர்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள்தான். பயிற்சி மாணவர் ஒருவரின் தாய், வீட்டு வேலை செய்து வருகிறார்.  இன்னொருவர் தினக்கூலி செய்பவர்களின் பிள்ளை என இதுபோல மாணவர்களுக்கு

கல்லூரியில் தொழில் தொடங்கிய நம்பிக்கை தரும் இளைஞர்களின் கதைகள்! - ரஷ்மி பன்சல்- எழுந்திரு விழித்திரு

படம்
  எழுந்திரு விழித்திரு ரஷ்மி பன்சல் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் இது தொழில்முனைவோர்கள் பற்றிய நூல். நூலில் பிராக்டோ  நிறுவனம் முதல், புக்கட் எனும் உணவு நிறுவனம் வரையில் நிறைய இளைஞர்களின் கனவு தொழில்களை விளக்கியுள்ளார் ஆசிரியர்.  ரஷ்மி பன்சலின் எழுத்துமுறை, கனெக்டிங் டாட்ஸ் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ஒத்துள்ளது. தொழிலதிபர்கள் பற்றிய சுவாரசிய ஒருபக்க அறிமுகத்தை தொடர்ந்து அவர்களின் கனவுத்தொழிலைப் பற்றிப் பேசுகிறார்.  இந்த முறை படிக்க சுவாரசியமாக இருக்கிறது.  தொடக்க தொழில்கதையான பிராக்டோ உண்மையில் இன்றைய வேலை, சுயதொழில் ஆகியவற்றுக்கு இடையில் அல்லாடும் இளைஞர்களை சிறப்பாக பிரதிபலிக்கிறது. இப்போதே கிடைக்கும் வேலைக்கு செல்வதா அல்லது காத்திருந்து சுயதொழிலுக்கான வாய்ப்புகளை தேடுவதா என அலைபாயும் இடம் முக்கியமானது. இன்று பிராக்டோ நிறுவனம் சிறப்பாக வளர்ச்சி அடைந்துவருகிறது. இதுவே அவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, வளர்ச்சிக்கு சான்று.  இதில் நடைமுறையாக இல்லாத விஷயங்களை செய்து பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிக்கும் இளைஞர்களின் கதைகள் நிறைந்துள்ளன.  தோசாமேட்டிக் நிறுவனம் அப்படிப்பட்ட ஒன்று. இதன் அமைப்புப்படி தோச

இஸ்லாமிய நாடுகளில் முகத்திரை அணியும் சட்டங்கள்!

படம்
  சௌதி அரேபியா  பொதுவாக இங்கு ஹிஜாப், நிகாப், பர்கா என்ற உடைகள் சாதாரணமானவை. இங்கு பெண்கள் இந்த  உடைகளில் எது தங்களுக்கு பிடித்ததோ அதை அணிகிறார்கள். 2018ஆம் ஆண்டு, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், நாகரிகமாக பொறுப்புடன் உடை அணிந்தால் போதுமானது என கூறிவிட்டார்.  ஈரான் 1979ஆம் ஆண்டு நாட்டில் ஈரான் புரட்சி நடைபெற்றபிறகு, ஹிஜாப்பை பெண்கள் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. 1995ஆம் ஆண்டு ஒரு சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பொதுஇடத்தில் முகத்திற்கு மறைப்பின்றி ஒரு பெண் வந்தால், அவர்களை அறுபது நாட்கள் சிறையில் அடைக்க முடியும்.  பாகிஸ்தான்  2019ஆம் ஆண்டு  பெஷாவர், ஹமீர்புர் ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு சுற்றறிக்கை  வந்தது. அதில், அனைத்து பெண் மாணவிகளும் அபயா எனும் உடையை அணிய வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் இதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் சட்டம் திரும்ப பெறப்பட்டது.  இந்தோனேஷியா 2021ஆம் ஆண்டு பள்ளிகளில் மத ரீதியான உடைக்கட்டுப்பாடு இருக்காது என கூறப்பட்டு, முந்தைய சட்டங்கள் மாற்றப்பட்டன.  இந்தியா டுடே  பின்டிரெஸ்ட் 

2022இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் புதிய நூல்கள்!

படம்
  டிரேஸி ஃபிளிக் கேனாட் வின் டாம் பெரட்டா டிரேஸி ஃபிளிக்  என்ற பாத்திரம் எப்படி பாலின வேறுபாடுகளைத் தாண்டி தனது துறையில் வெல்கிறார் என்பதே கதை. எலக்சன் என்ற நூலை எழுதியபிறகு 25 ஆண்டுகள் கழித்து டிரேஸி ஃபிளிக் என்ற பாத்திரத்துடன் வாசகர்களை எழுத்தாளர் டாம் பெரட்டா சந்திக்க வந்துள்ளார். உயர்நிலைப்பள்ளி துணை முதல்வராக உள்ள டிரேசி பல்வேறு சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.  தி கிரேன் வைஃப் சிஜே ஹாசர் ஆய்வுக்காக செல்லும் பயணத்தில் காதல், அன்பு, திருமணம் ஆகியவற்றை புரிந்துகொள்கிறார் எழுத்தாளர் ஹாசர். இதன் விளைவாக நடக்கவிருந்த தனது திருமணத்தைக் கூட நிறுத்திவிடுகிறார். இப்படி செய்ய என்ன காரணம் என்பதை நூலில் ஹாசர் வாசகர்களுக்கு கூறுகிறார்.  ரெயின்போ ரெயின்போ லிடியா கான்கிளின் நூல் முழுக்க மாற்றுப்பாலினத்தவர்களின் கதைகள் நிரம்பி வழிகின்றன. ஓரினச்சேர்கைத் தம்பதிகள், சமூகத்தோடு இணைந்து வாழ விரும்பும் மாற்றுப்பாலினத்தவர்கள் சந்திக்கும் அனுபவங்கள், இதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என பல்வேறு உணர்வுகளை சொல்லும் கதைகளாக உள்ளன. விரும்புபவர்கள் இதனை வாங்கி வாசிக்கலாம்.  எய்தர் ஆர்

டிஜிட்டல் கல்வியும், வளாக கல்வியும் மாற்றங்களை தரும்!

படம்
  கலப்புக் கல்வி தற்போது பல்கலைக்கழகங்கள்  இயங்கத் தொடங்கியுள்ளன. ஆன்லைன் கல்வியுடன் இனி வளாக கல்வியும் தொடர அதிக வாய்ப்புகள் உள்ளன.  சிறப்பான இணைய இணைப்பு உள்ள இடங்களில் ஆன்லைன் வகுப்புகள்  நல்ல பயனைக் கொடுத்துள்ளன. இதனை குறைவான கட்டணத்தில் உலகில் உள்ள யாருமே அணுக முடியும் என்பது முக்கியமானது.  சுயமாக கற்றல் ஆன்லைனில் பாடங்கள் நடைபெற்றாலும் அதனை புரிந்துகொள்ளவும் மேற்கொண்டு பாடங்களிலுள்ள விஷயங்களை அறியவும் இணையம் உதவுகிறது. பாடங்களைப் பற்றி எளிதாக கருத்துக்களை கூறமுடிவது முக்கியமான சாதக அம்சம்.  வெளிநாட்டிலும் கல்வி ஆன்லைன் கல்வி முறையில் நாட்டின் எல்லைகள் தலையிடமுடியாது. இம்முறையில் வெளிநாட்டு மாணவர்களும் கூட விரும்பினால் கட்டணம் கட்டி பாடங்களை படிக்க முடியும்.  ஆன்லைன் கல்விமுறையை இந்திய கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தினால் எதிர்காலத்தில் ஏராளமான வெளிநாட்டு மாணவர்களைப் பெற முடியும்.  வயது வந்தவர்களுக்கான கல்வி முதலில் கல்வி கற்பது என்பது வயது வரம்பைத் தாண்டி வளரவில்லை. ஆன்லைன் முறை அதனையும் மாற்றியுள்ளது. கொரோனா காலத்தில் திறனில் பின்தங்கியுள்ளவர்கள் கூட புதிய ஆன்லைன் படிப்புகளை படிக்க

ஏழை இளைஞனின் வாழ்க்கையை தகர்க்கும் சாதிய வன்மம்! கலர் போட்டோ 2020! ச சந்தீப் ராஜ்

படம்
              கலர் போட்டோ Director: Sandeep Raj Writers: Sandeep Raj , Sai Rajesh Neelam Stars: Suhas , Chandini Chowdary , Sunee     சாதி , நிறம் காரணமாக புறக்கணிக்கப்பட்டு உயிரை விடும் இளைஞனின் வாழ்க்கைதான் கதை . விஜயவாடா , மச்சிலிப்பட்டினத்தில் எடுக்கப்பட்ட ஆணவக்கொலை பற்றிய படம் . ஜெயகிருஷ்ணா , தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் . காலையில் பால் கறந்து ஊற்றும் வேலைகளை செய்துவிட்டு கல்லூரிக்கு வருகிறான் . பொறியியல் படித்து நல்ல வேலைக்கு போகவேண்டும் என்பதுதான் அவன் கனவு . பல்வேறு இடங்களிலும் அவன் திறமை தாண்டி அவன் சாதி , நிறம் பலருக்கும் குறையாக தெரிகிறது . இதனை எந்த சமரசமின்றி எதிர்க்கிறான் . இதற்கான பல்வேறு இடங்களில் எதிர்ப்புகளை சந்திக்கிறான் .   கல்லூரியில் மேல் சாதியைச்சேர்ந தீப்தி என்ற பெண்ணை கடவுளின் வேஷத்தி ல் பார்க்கிறான் . நண்பன் சொன்னது போல உடல் புல்லரிக்க அப்போதே காதலில் விழுகிறான் . ஆனால் அதனை அந்த பெண்ணுக்கு சொல்ல முடியவில்லை . காரணம் . தான் இருக்கும் நிறம் , சாதி என பல தடைகள் முன்னே

வாழ்க்கையை கணக்கு சூத்திரங்களாக அணுகும் பேராசிரியர் வாழ்க்கையில் உணர்ச்சிகளை முக்கியமாக கருதும் மனைவி வந்தால்... பர்பெக்ட் அண்ட் கேஸூவல் 2020

படம்
            பர்பெக்ட் அண்ட் கேஸூவல் சீன டிவி தொடர் 24 எபிசோடுகள் Title: Perfect and Casual Chinese Title: 完美先生和差不多小姐 / Wan Mei Xian Sheng He Cha Bu Duo Xiao Jie Broadcast Website: MGTV Broadcast Date: September 28, 2020 Air Time: Monday, Tuesday 20:00 (2 eps) on first week, Sunday-Monday subsequent weeks, 4 eps released early for VIP (See Viewing Calendar ) Genre: Romance Language: Mandarin Episodes: 24 Director: Li Shuang Origin: China உலகில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் கணித சூத்திரங்களாக பார்க்கும் புள்ளியியல் பேராசிரியர் ஒருவரும் , மனிதர்கள் மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களை நம்பும் கல்லூரி மாணவியும் ஒன்றாக இணைகிறார்கள் . அதற்கு பேராசிரியரின் தாத்தாவுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முக்கியமான காரணம் , புள்ளியல் துறையில் படிக்கும் யுன் ஷூ என்ற மாணவியை , பேராசிரியர் ஸாங் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்துகொள்கிறார் . அந்த உறவு ஒப்பந்தம் என்ற எல்லையைக் கடந்து காதல் சாலையில் பயணித்ததா , இல்லையா என்பதுதான் டிவி தொடரின் மையப்புள்ளி பேரா

கல்வி உதவித்தொகை தாமதம் ஆவதால் வேலைகளுக்கு மாறும் மாணவர்கள்!

படம்
              கல்வி உதவித்தொகை தாமதம் ஆவதால் வேலைகளுக்கு மாறும் மாணவர்கள் ! அஹ்மத்நகரைச் சேர்ந்த கமலாகர் சேட்டே , எம் . காம் பட்டதாரி . சமூக நலத்துறை மூலம் டாக்டர் அம்பேத்கர் ஸ்வாதர் யோஜனா திட்டத்தின் கீழ் இவருக்கு 51 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உறுதி செய்யப்பட்டது . இவர் ஏற்கெனவே இறுதியாண்டுத் தேர்வை எழுதிவிட்டார் . சமூக நலத்துறை எனக்கு வரவேண்டிய கல்வி உதவித்தொகையை கொரோனா காரணமாக இல்லை என்று கூறிவிட்டது . ஆண்டுகள் கடந்தாலும் உதவித்தொகை வரும் என காத்திருந்து சலித்துவிட்டார் கமலாகர் . ஆனால் இன்றுவரை உதவித்தொகை கிடைப்பதாக தெரியவில்லை . ஆண்டு வருமானமே 50 ஆயிரம் ரூபாய் வரும் கமலாகரின் பெற்றோர் எப்படி இவரின் கல்விச்செல்வுக்கு பணம் அனுப்ப முடியும் ? அரசு கல்வி உதவித்தொகையை தருவதாக சொல்லி கை கழுவியதால் பெற்றோரிடம் காசுக்கு கை ஏ்ந்தி நிற்கும் நிலை . மத்திய மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை தாமதாவது தொடர்கதையாகிவிட்ட நிகழ்வு . அண்மையில் லேடி ஶ்ரீராம் பெண்கள் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா ரெட்டி கல்விக்கட்டணத்தை கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட நிக்ழச்சிநாளிதழில் வெளியானது . இவர் இ

லவ் இன்ஃபினிட்டி நூலை தரவிறக்க வலைத்தள முகவரி!

படம்
லவ் இன்ஃபினிட்டி மின்னூலை பீடிஎஃப்பாக தரவிறக்க  http://www.mediafire.com/file/6tdmhfmriy2c3s3/luv_infinitity1.pdf/file லவ் இன்ஃபினிட்டி நூலை இபப் கோப்பாக தரவிறக்க... http://www.mediafire.com/file/avg5czmz4s5k8u9/luv_infinitity.epub/file

பாமா படிக்கலாமா - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! பாமா.... படிக்கலாமா? நம் ஊரைப் பொறுத்தவரையில் பாவம் என்று சொல்வது எல்லாம் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான். சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொண்டால் அதற்குப்பிறகு பாவம், புண்ணியங்களை எளிதாக கைவிட்டுவிடுவீர்கள். அல்பன்லீபே சாக்லெட்டை சப்பி சாப்பிட்டு, தமன்னா சாப்பிடச்சொன்ன குச்சி மிட்டாய்க்கு நகர்ந்து இப்போது கோபிகோக்கு நகர்ந்து வருகிறார்களே அப்படித்தான். சினிமா பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள். கேன்சர் வந்தால் எப்பாடு பட்டாலும் ரத்தம் கக்கித்தான் சாகவேண்டும். ஏன்? பின்னே புற்றுநோயை எப்படித்தான் பார்வையாளர்களுக்கு கடத்துவது? இப்படித்தான் ராமராஜன் படத்தில் ஒரு காட்சி. அனேகமாக மேதை எனும் படம் என்று நினைக்கிறேன். நாயகனின் திருமண முதலிரவு. ஆனால் அவர் கடமையே நான் கல்யாணம் செய்த பொண்டாட்டி என கர்ம சிரத்தையாக வேலைகளை செய்கிறார். முதலிரவில் வைத்திருக்கும் பால் தயிராக மாறியிருக்கிறது என காட்சி வைத்து மிரட்டியிருப்பார் இயக்குநர். அப்படிப்பட்ட சினிமாவிலும்  அனைவரும் பார்த்து வியந்தது என்னாச்சு என்று கேட்ட சமாச்சாரம் ஒன்று உண்டு. அதுதான்

லவ் இன்ஃபினிட்டி: காதலை இப்படியும் சொல்லலாம்!

படம்
vicky m\pinterest 24 லவ் இன்ஃபினிட்டி  குமார் சண்முகம் தொகுப்பு: ககன்சிங், சசாங் கௌர் உண்மையில் பிருந்தாவிடம் இரண்டு மாதங்களாக பேசவில்லை. திடீரென அவளிடம் பேசவேண்டுமென தோன்றியபோது, காக்கைகள் அமைப்பில் அதிகாரப் போட்டி தொடங்கியிருந்தது. ஓர் அமைப்பு, புகழ்பெறாதவரை காசு கிடைக்காதவரை யாரும் அதனைத் தலையில் தூக்கி திரியமாட்டார்கள். ஆனால் புகழடைந்து விட்டால் ஏற்றிய கிரீடத்தை கீழிறக்குவது கடினம். நான், என்னால் என்ற வார்த்தைகளை மெல்ல பல நாக்குகளிலிருந்து வரத்தொடங்கியவுடன் அங்கு இடத்தை காலிசெய்துவிட்டேன். அங்கிருந்தபோது போனில் டவர் கிடைப்பது கடினம். எனது சாம்சங் குரு, எப்போது முடங்கும் என்றே தெரியாத நிலையில் இருந்தது. இதனால் அங்குள்ள போஸ்ட் ஆபீசில் அஞ்சல் அட்டைகளை வாங்கி வீட்டுக்கு அம்மாவுக்கு மட்டும் கடிதம் எழுதி வந்தேன். அப்போது நான் தங்கியிருந்த இடத்தின் முகவரியை எழுதி அனுப்பினேன். ஏன் அப்படிச் செய்தேன். அப்பன் நம்ப வேண்டுமே? அதற்காகத்தான். அதை பிருந்தா வாங்கியிருப்பாள் என்று எனக்கு எப்படித் தெரியும்? சாரங்கியோடு சமாளித்து நாட்களை ஓட்டுவதே சிரமமாகிக்கொண்டிருக்க, இந்

லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லப் போறேன்!

படம்
behance 19 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ராஜா தேசிங்கு, மியான் வாட்ஸ் நாம எல்லாத்தையும் படிச்சிருப்போம் தெரியும்னு நினைப்போம். ஆனா, உண்மை என்னன்னா, தேவைப்படும்போது அதனை மறந்திருவோம். நம் அனுபவத்துல பதிஞ்ச விஷயங்கள் மட்டும்தான் நம்மை எப்போதுமே காப்பாத்தும். மத்த விஷயங்கள் எல்லாம் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நம்மை கைவிட்டுவிடும். இங்க அறிவுங்கறதும், அனுபவம்கிறதும் வேறுவேறு. நீங்க ஓஷோ, வேதாத்திரின்னு பல பண்டல் புத்தகங்கள ஷெட்யூல் போட்டு படிக்கலாம். இப்போ பாருங்க, காதலோ, காமமோ, ஒரு உறவு குறித்தோ நெருக்கடி வருது. அதில் எடுக்கிற முடிவு உங்க வாழ்க்கையை மாத்தப்போவுது. இதில நீங்க என்ன செய்ய முடியும்? உங்க அறிவு உதவும்னு நினைக்கிறீங்களா? நிச்சயம் இல்லை. நான் சந்திச்ச எல்லா பெண்களிடம் நான் இந்த விஷயத்தைப் பார்த்தேன். அதாவது, நாம சாதிக்க முடியாததை இவன் சாதிக்கணும்னு ஒரு எண்ணம். தூண்டுதல் இருக்கு. ஆனால் அது ஏன்? அப்படி இருக்கணும்னு என்ன இருக்கு? நான் அவங்களுக்கு  எழுதின letter லேயும் அன்னைக்கு அப்படித்தான் எழுதியிருக்கேன். ஆகா வைரஸ் எப்படி பரவுது பாத்தீங்

லவ் இன்ஃபினிட்டி: அன்பைத் தவிர வேறெதுவுமில்லை

படம்
18 லவ் இன்ஃபினிட்டி  குமார் சண்முகம் தொகுப்பு: ஹர்வீன் கௌர், ரிதேஷ் -மாதேஷ் டயரியில் இருந்து... உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம் எனக்கு... நிறைய எழுதணும்போல இருக்கும். எழுதுவேன். ஆனாலும் எதிலும் நேர்த்தி கைகூட மாட்டேன்கிறதே. . இப்படி கிழித்து போட்ட காகிதங்களைப் பார்த்து எங்க அம்மா கூட திட்டினாள். நோட்டு வாங்கறதுக்கே சொத்த  அழிச்சிருவே போல ன்னு. இதை ஸ்லோமோஷன்லே பாத்தேன். அம்மா கூட அம்புட்டு அழகு. எல்லாமே உன்னால்தான். என்னை எப்படி இப்படி மாற்றினாய்? 26.2.2002 அன்று எழுதி உன்னிடம் கொடுக்காத கடிதம். உன் இல்லத்தில் உள்ளவர்களும், இதயத்தில் உள்ளவர்களும் நலமாக இருக்க வேண்டும் என்பதே இறைவனை நான் வேண்டிக் கேட்கும் வரம். இந்தக் கடிதம் நான் உனக்கு கொடுத்த கவிதை புக் உடன் சேர்ந்திருக்க வேண்டியது. காலம் தாழ்த்தி கிடைத்தாலும் பரவாயில்லை. நான் உனக்கு கொடுத்த Note இல் எழுதியிருந்ததைப் படித்து பதில் எழுது. வழக்கம்போல் இல்லாமல் விரிவாக! ரைட்.. வெரி வெல், நன்றாகச் சாப்பிடு. உடம்ப பத்திரமா பாத்துக்க. அதிகநேரம் படிச்சு தூங்காம இருக்காத. பாரு, உன்கிட்ட பேசும்போது உன்னோடு அம்மாவ

லவ் இன்ஃபினிட்டி: காலம் வழிவிடுமா?

படம்
http://t.co/YIlRU8s0mw லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ரித்திக் சிங் டயரியில்... புதிரா புனிதா என்று நீங்கள் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் எனக்குப்பிடித்தத்தைத்தான் செய்து வந்தேன். அப்பா சொன்னார், சுப்பா சொன்னார் என்பதெல்லாம் நான் விரும்பவில்லை. எனக்கு பெண்களை விதிவிலக்கின்றி பிடிக்கும் என்பதை முன்னாடியே சொல்லிவிட்டேன். ஆனால் எந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும் என்பதையும் லேசாக சொல்லிவிட்டேன். கடிதம் எழுதுவது, கடிதம் எழுதிய நோட்டைக் கொடுப்பது என நட்பு ஆண், பெண் இருவரிடமும் வளர்ந்து வந்தது. 25.2.2002 இந்த புள்ளியளவு எனக்கு உன் மனதில் இடமிருந்தால், போதும். Pongal சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருப்பாய். நீ Kavi யை  மட்டும் பொங்கலுக்கு கூப்பிட்டாய். ஆனா என்னை கூப்பிடலை. அதனாலென்ன, பரவாயில்லை விடு. நேரில் உன்னோடு பேசணும். என்னிக்கு அப்படிப் பேச சந்தர்ப்பம் அமையும்? பக்கத்தில் உன்னோடு அமர்ந்துகொண்டு நிறைய சண்டை போடணும்.  கவிதை, கதை, பூக்கள், பூமி, இந்த வாழ்க்கை, உன் வாழ்க்கை, உன் வீட்டு பருத்திச்செடி, உன் bus, பயணங்கள், உன் சந்

லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லிப் பழகு!

படம்
weddingchicks.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: இனியன், கவிதவன் பிரகாஷ் கவிதைகள் பற்றி பேசினேன் அல்லவா? அதுதான் என்னை உயிரோடு வைத்திருப்பதாக வெகுநாள் நினைத்திருந்தேன். ஆனால் அப்படி அல்ல; அம்மா போட்ட சோறுதான் என்னை அப்படி நினைக்க வைத்திருந்தது என பின்னால் தெரிந்துகொண்டேன். கவிதை எழுதுகிறவர்கள் கண்டிப்பாக காதலிக்கவேண்டும் என்பது என்ன விதியோ? நான் என் மாமன் பொண்ணு பிரியா முதற்கொண்டு காதலிக்க முயன்று தோற்றுக்கொண்டே இருந்தேன். ஒருத்தரை பிடித்திருக்கிறதென சொன்னால், அவர் என்ன சாதி என்பது முதல் கேள்வி. அடுத்து, அவர் சொந்த சாதி என்றால் பொருளாதாரம் குறுக்கே நந்தியாய் நின்றால் என்ன செய்வது? அப்போது காலேஜில் ஒரே ஆறுதல், ஏடாகூட மூர்த்திதான். காலையில்  பேப்பர் போட்டுவிட்டு வேலைக்கு அசால்டாக வருபவன், படிப்பில் சாதிப்பான். ஆனால் எதுவுமே தெரியாது. சுறுசுறுவென ஓடுவான். நினைத்த நேரத்தில் மோட்டரோலா போனில் ஸ்டோர்மி டேனியல்ஸின் படத்தை மின்னலாக முடுக்கி பார்த்துக்கொண்டிருப்பான். எப்படிடா? அதெல்லாம் அப்படித்தான். என்பான். அவனுக்கு முரடன் செந்தில் பழக்கமானதிலிருந்திலிருந்து ந