இடுகைகள்

ஹேங்அவுட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூகுளில் மூடப்பட்ட பல்வேறு சேவைகள்!

படம்
    கூகுளில் மூடப்பட்ட பல்வேறு சேவைகள் கூகுள் புதுமையாக பல்வேறு சேவைகளை தொடங்கினாலும் பின்னாளில் அவற்றின் செயல்பாடு எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாதபோது யோசிக்காமல் அதனை நிறுத்திவிடும். அதுபோல நின்றுபோன பல்வேறு சேவைகளை இப்போது பார்ப்போம். கூகுள் ஹேங்அவுட் 2013-2020 கூகுள் ஒரே மாதிரியான பல்வேறு சேவைகளை தொடங்குவதும் பின்னர் என்ன செய்வதென தெரியாமல் அதனை நிறுத்துவதும் புதிய வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் ஆலோ என்ற செய்தி சேவையை முதலில் நிறுத்தியது. பின்னர் ஹேங்அவுட் கிளாசிக் சேவையை தேவையில்லை என நிறுத்தியது. இத்தனைக்கும் இந்த ஆப்பை பல கோடிப்பேர் தங்களின் போன்களில் பயன்படுத்தி வந்தனர. இதற்கு பதிலாக கூகுள் மீட், அல்லது சாட் வசதியை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் இதுவும் வசதிகள் போதவில்லை என தோன்றினால் வாட்ஸ்அப் பக்கம் சென்றுவிடலாம். கூகுள் பிளே மியூசிக் 2011-2020 அனைத்து ஆண்ட்ராய்டுகளிலும் வேலை செய்கிறதோ இல்லையோ அப்டேட் கேட்கும் ஆப் இதுதான். ஆனால் இப்போது இந்த ஆப் யூடியூப் மியூசிக் ஆப் வந்துவிட்டலாம் மூடப்பட்டு விட்டது. இதனை பயன்படுத்தும் உறுப்பினர்களுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.