இடுகைகள்

இம்பேக்ட் 50 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிக நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்ற ஊடக நிறுவன இயக்குநர்! வாலேரி பின்டோ

    இம்பேக்ட் 50, சாதனைப் பெண்கள் வாலேரி பின்டோ இவர் வெபர் சாண்ட்விக் இந்தியா நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனம் தகவல் தொடர்பு, கருத்து, கிரியேட்டிவிட்டி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம். பின்டோவின் தலைமையின் கீழ் வெபர் சாண்ட்விக் நிறுவனம், ஏராளமான விருதுகளை வென்றுள்ளது. பிண்டோ வெபர் இந்தியாவில் சேர்ந்து கடுமையாக உழைத்து இன்று அதனை முக்கியமான மக்கள்தொடர்பு நிறுவனமாக வளர்த்துள்ளார். ஹீரோ குழுமம்,ஓபராய் போன்ற நிறுவனங்கள் வெபர் நிறுவனத்தின் வா்டிக்கையாளர்களாக வெகு காலமாக இருக்கிறார்கள். தேசிய அளவிலான விளையாட்டு வீரர், சமையல் கலைஞர் என்ற தனித்துவமும் வாலேரி பின்டோவுக்கு உண்டு. இவர் தனது நிறுவனத்தின் வளர்ச்சியை 35 சதவீதம் எனுமளவுக்கு உயர்த்தியுள்ளார்.  

டாடா பொருட்களின் விற்பனையை ஏறுமுகமாக்கி சாதனை செய்த பெண்மணி! - ரிச்சா அரோரா, டாடா

படம்
    ரிச்சா அரோரா, டாடா ரிச்சா அரோரா டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ்(பேக்கேஜ் புட்ஸ்), இயக்குநர். 2014ஆம் ஆண்டு டாடா நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்தார் ரிச்சார். இவருக்கு விற்பனைத்துறையில் 30 ஆண்டு அனுபவம் உண்டு. இதற்கு முன்னர் பிரிட்டானியா, விப்ரோ, மெக்பான் புட்ஸ், பல்சாரா, எப்சிபி உல்கா ஆகிய நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றியவர். பேக்கேஜில் வரும் பல்வேறு பொருட்களை உருவாக்குவது, விற்பனை உத்திகள், விற்பனை என அனைத்துமே ரிச்சாவின் திட்டமிடலில்தான் உள்ளது. இதன்காரணமாகவே டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ்கள் சிறப்பாக விற்பனையாகின்றன. லண்டன் பொருளாதார பள்ளியில் படித்திருக்கிறார். அகமதாபாத்திலுள்ள ஐஐஎம்மில் எம்பிஏ முடித்தவர். பொருளாதார பட்டதாரி. இவற்றையெல்லம் விட சிறந்த புகைப்படக்காரர். இந்திய கலைக்கண்காட்சியில் ரிச்சா தான் எடுத்த புகைப்படங்களை தனியாகவே காட்சிக்கு வைத்திருந்தார்.   இம்பேக்ட் 50, சாதனைப் பெண்கள், பிரிட்டானியா, விப்ரோ, பல்சாரா, எப்சிபி உல்கா

இம்பேக்ட் 50 - சாதனைப் பெண்கள்! பெண்களுக்கு சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்! - சுக்லீன் அனேஜா

படம்
      சுக்லீன் அனேஜா      சுக்லீன் அனேஜா ஆர்பி ஹைஜீன் ஹோம் தெற்கு ஆசியா, விநியோக இயக்குநர் அனேஜா இதுவரை  யுனிலீவரின் பல்வேறு பிராண்டுகளுக்கு விற்பனை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இத்துறையில் அவருக்கு 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.  தற்போது சுகாதாரம் தொடர்பான ரெக்கிட் பென்கிஸர் நிறுவனத்தின் பல்வேறு பொருட்களை சந்தையில் விற்று வருகிறார். இவரின் ஹார்பிக், டியூரெக்ஸ் விளம்பரங்கள் பரவலாக பேசப்பட்டவை என்பதோடு இவருக்கும் துறையில் புகழையும் பெற்றுத்தந்தவை. பெண்களின் சுகாதாரம் பற்றி இவர் உருவாக்கிய ஹார்பிக் விளம்பரம் கேன்ஸ் விழாவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. வணிகரீதியாக ஹார்பிக், கார்னியர், லோரியல், டெட்டால், டியூரக்ஸ் ஆகிய நிறுவனங்களை சிறப்பாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.  எகனாமிக் டைம்ஸின் 2018ஆம் ஆண்டு விருது, இம்பேக்ட் இதழின் விருதை 2019 ஆம் ஆண்டும் பெற்றவர்  சுக்லீன் அனேஜா.          

இதயத்தால் பணிபுரிந்தால் வெற்றி நிச்சயம் - கைனாஸ் கர்மாகர்

படம்
               இம்பேக்ட் 50, சாதனைப் பெண்கள் கைனாஸ் கர்மாகர் ஆகில்வி விளம்பர நிறுவனம், இயக்குநர் கைனால்ஸ் கர்மாகருக்கு கிடைத்த வேலைவாய்ப்பு அனைத்துமே பலரும் ஆசைப்படும் நிறுவனங்கள்தான் ஆனால் அதனை அவர் அதிர்ஷ்டவசமாக அடையவில்லை. அவர் அதற்கான வழிகளில் கடினமான உழைத்திருக்கிறார். அப்படி உழைத்து களைத்து தூங்கும்போதுதான் அவருக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் கதவை தட்டியிருக்கின்றன. கைனாஸ் தனது தூக்கத்தை எப்போதும் இழக்க விரும்பாதவர்தான். ஆனால்  இரண்டாம் முறை அலைபேசி ஒலித்தபோது அவர் தூக்கம் கலைந்து அதனை எடுத்து பேசினார். அதனால்தான் நாம் அவரைப் பற்றி இங்கு எழுதிக்கொண்டிருக்கிறோம். 2010ஆம் ஆண்டு ஆகில்வி விளம்பர நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். 2017ஆம் ஆண்டு நிறுவனத்தின் முக்கியமான இயக்குநராக அறியப்பட்டார். 2020ஆம் ஆண்டு நிறுவனத்தின் மூன்று முக்கியமான கிரியேட்டிவ் இயக்குநர்களில் அவரும் ஒருவர். ப்ரூக் பாண்ட் நிறுவனத்திற்காக அவர் விளம்பர வாசகம் ஒன்றை உருவாக்கினார். ரெட்லேபிள் என்ற டீபிராண்டிற்காக டேஸ்ட் ஆப் டுகெதர்னெஸ் என்று இவரின் மூளை உருவாக்கிய ஐடியா சந்தையில் நிறுவனத்தை புகழ்பெற வைத்துவிட்டது

இம்பேக்ட் 50! சாதனைப் பெண்கள் - மகாராஷ்டிரத்தில் முன்மாதிரி கிராமங்களை உருவாக்கிய பெண்மணி - பிரியா நாயர்

படம்
        பிரியா நாயர், யுனிலீவர்           இம்பேக்ட் 50 சாதனைப் பெண்கள் பிரியா நாயர் யுனிலீவர், அழகுசாதனப் பொருட்கள் துறை இயக்குநர் 47 வயதாகும் பிரியா நாயர், யுனிலீவர் நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்களுக்கான இயக்குநர் ஆவார். 1995ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தியா பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் யுனிலீவர் செய்யும் வணிகத்தில் பிரியா நாயருக்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. இவர் உருவாக்கி வாஷ் என்ற விழிப்புணர்வு திட்டம் பலகோடி மக்களிடையே யுனிலீவரின் பொருட்களை கொண்டுபோய் சேர்த்தது. ஸ்வட்ச் ஆதத் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் மூலம் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவது, தூய்மையான குடிநீரை அருந்துவது, சுத்தமான கழிவறையைப் பயன்படுத்துவது ஆகியவற்றை பிரசாரம் செய்தார் நிதிஆயோக் அமைப்பின் மாற்றங்களை உருவாக்குபவர் என்ற தலைப்பின் கீழ் பேசுவதற்கு அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் பிரியா நாயர். பிஸினஸ் டுடே, பார்ச்சூன் ஆகிய இதழ்களில் இவரைப் பாராட்டி பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தற்போது வகிக்கும் பதவிக்கு முன்னதாக கன்ஸ்யூமர் இன்சைட்ஸ் எனும் குழுவில் பணியாற்றின