இடுகைகள்

இந்திரா சௌந்தர்ராஜன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிவன் கோவிலை புனரமைக்கும் இரட்டைத் தலை நாகம் - நந்தி ரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
நந்தி ரகசியம்  இந்திரா சௌந்தர்ராஜன் மின்னூல்  இறைவனை நம்பினால் இன்னல் நீங்கும். அதற்கு மனித முயற்சியும் சிறிது தேவை என்பதை நூலாசிரியர் கூறுகிறார். கதையும், அதற்கான சம்பவங்களும் வலுவாக இல்லை என்பதே நாவலின் பெரும் பலவீனம்.  நாவலை படிப்பதை விட நூலில் உள்ள கோவில் அமைவிடம், ஏன் கோவில் குறிப்பிட்ட கன்னி மூலையில் அமைக்கப்படுகிறது என்ற தகவல்கள் துணுக்குகளாக வாசிக்க நன்றாக இருக்கின்றன.  ஊர் பெரிய மனிதர் உடையார். அவர் சிந்தாமணி என்ற பெண்ணை உடலுறவுக்கென காதலியாக சேர்த்துக்கொள்கிறார். இதனால் அவரை திருமணம் செய்த மனைவி திரௌபதி கணவனை விட்டு விலகுகிறாள். அதே ஊரில் தனது மனநிலை சரியில்லாத மகனுடன் தங்கியிருக்கிறாள். ஒருநாள் உடையார் இறந்துவிட, காதலி அழுதுக்கொண்டிருக்க ஊர் பெரியவர்களில் ஒருவர் உடையாருக்கு உரிய மனைவி என்பவள் திரௌபதிதான்.அவளைக் கூப்பிட்டால்தானே உடலுக்கான காரியங்களை செய்ய முடியும் என சொல்லுகிறார். இந்த நேரத்தில் சொத்து தொடர்பான வாக்குவாதம் தொடங்குகிறது. உடையாரின் வழக்குரைஞர் வாதிராஜ், அனைத்து சொத்துகளும் காதலியான சிந்தாமணிக்கு சொந்தம் என்று எழுதிய உயிலைக் காட்டுகிறார். கூடவே கட்டாந்தரையாக கிட

தூக்குத்தண்ட்னைக் கைதியின் பழிவாங்கும் படலத்திற்கு உதவும் காக்கை சித்தர்! சிவரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
                சிவரகசியம்   இந்திரா சௌந்தர்ராஜன் பூமிக்காத்தான் பட்டியில் கோவிலுக்குள் அமைந்திருக்கிறது ஊர் . இங்கு பௌர்ணமி தோறும் சித்தர்கள் பூஜை செய்து வருகிறார்கள் ரசமணீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பால் ஊரில் மழை வளம் குறைவதில்லை . தினமும் மழை பெய்கிறது . அங்குள்ள சிவ வனத்தில் சித்தர்கள் வாழ்கின்றனர் . இந்தசெய்தி காண்டீபன் என்ற பத்திரிகையாளர் வெளிநாட்டு ஆராய்ச்சியாளருக்கு கூற , வில்சன் எனும் ஆராய்ச்சியாளர் அங்கு வருகிறார் . இதனால் நேரும் விளைவுகள்தான் கதை . இதன் உப கதைகளாக தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி ராமண்ணா , பூமிக்காத்தான் பட்டியில் தொழிற்சாலை தொடங்கும் அர்ஜூன் ஆகியோர் கதை வருகிறது . தூக்குதண்டனை கைதி கதை மட்டுமே சுவாரசியமாக உள்ளது . மற்ற இரு கதைகளும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை . நாவலின் இன்னொரு பலவீனம் . கதையில் தொடக்கத்தில் கூறும் தகவல்கள் . சித்தர்கள் பற்றிய தகவல்களை ஆசிரியர் கூற நினைத்திருக்கிறார் . அதற்காக இன்னொரு புத்தகம் எழுவதும் அளவுக்கு தகவல்களை குவிப்பார் என்பதை வாசகரும் எதிர்பார்த்திருக்கமுடியாது . ஒருகட்டத்தில் இந்த தகவல்களைப் படித்தவிட்ட

மூன்று பேரின் இறப்பிற்கு காரணமாக குடும்பத்திற்கு கருப்பசாமி வழங்கும் நீதி! விட்டுவிடு கருப்பா - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
                விட்டுவிடு கருப்பா இந்திரா சௌந்தர்ராஜன் ரத்னா நகரில் வேலை பார்த்து வருகிறாள். அவள் மருத்துவராக பணிபுரியும் அதே இடத்தில் அரவிந்தும் மருத்துவர். கூடவே அவளைக் காதலித்தும் வருகிறான். காதல் புரிந்தாலும் ரத்னா கண்டும் காணாததுமாகவே இருக்கிறாள். என்ன காரணம் அவளது புத்திசாலி பகுத்தறிவுவாதியான தோழி ரீனா கேட்கிறாள். அதற்கு அவளது ஊரைச்சேர்ந்த கருப்பசாமி யாரை கைகாட்டுகிறதோ அவரைத்தான் கல்யாணம் செய்துகொள்ளமுடியும்.இல்லையென்று மறுத்தால் உயிர் காலி என்கிறாள். அதற்கேற்ப ரத்னாவின் குடும்பத்தில் பல்வேறு துர்மரணங்கள், விபத்துகள் ஏற்படுகின்றன. உண்மையில் இதெல்லாம் அமானுஷ்யமாக இருக்கிறது என ரீனா துப்பறிய கிளம்புகிறாள். அதில் அவள் கண்டுபிடிக்கும் சமாசாரங்கள்தான் கதையில் முக்கிய திருப்புமுனை. நாயக்கர் பங்களாவில் வரும் கடைசி பகுதி ட்விஸ்ட் இதிலும் உண்டு. ஆனால் அது பொருத்தமாக இல்லை என்பதுதான் நெருடல். ஊர் பஞ்சாயத்து தலைவரான தேவர், பக்தியை விட பணத்தை அதிகம் நம்புபவர். அவரின் மனைவிக்கு குடும்பம் நன்றாக வாழவேண்டுமென்ற  ஆசை. அவளது மாமியார் வட்டிக்கு பணம் கொடுத்து ஊர் சாபத்தை வாங்கிக்கொண்டாலும் எதையும்

ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட நாயக்கர் பங்களாவில் பேய்! - நாயக்கர் பங்களா - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
  நாய்க்கர் பங்களா இந்திரா சௌந்தர்ராஜன் விக்கிரம நாயக்கர் ஊரிலேயே பெரும் செலவு செய்து மாளிகை ஒன்றை எழுப்புகிறார் . இதனால் உள்ளூரில் ஜம்புலிங்கம் என்ற பணக்காரர் கொதித்தெழுகிறார் . விக்கிரம நாயக்கரை செங்கமலம் என்ற தாசி மூலம் சாய்க்கிறார் . இதனாகல் அவரின் முழு குடும்பமும் தற்கொலை செய்து அம்மாளிகையில் சாகிறது . இதனால் ஊரே மிரண்டு நிற்கிறது . யாரும் அந்த மாளிகையை வாங்க முன்வருவதில்லை . முப்பது ஆண்டுகளாக பாழ்பட்டு கிடக்கும் மாளிகையை யாருமே வாங்குவதில்லை . உண்மையில் அங்கு இருப்பது ஆவியா என கண்டறிய முற்படுகிறார் பரம நாயக்கர் . அவருக்கு என்ன ஆனது என்பதுதான் கதை . அமானுஷ்யமாக தொடங்கி அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று முடித்து இறுதியில் ஆவிதாம்ப்பா என ஆச்சரியப்பட வைக்கும் கதை . இறுதியில் வரும் ட்விஸ்ட் பெரிதாக ஈர்க்கவில்லை என்பதுதான் வேதனை . மற்றபடி கதை மாளிகை உருவாவது , நாயக்கர் வாழ்க்கை வீழ்ச்சி வரை நன்றாக செல்கிறது . கோமாளிமேடை டீம் நூல் விமர்சனம், இந்திரா சௌந்தர்ராஜன்