இடுகைகள்

விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல்கொலைகாரரா, கொலைகாரரின் மகனா? -பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் !

படம்
  பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள்  தி லிஸ்டனர் சீன டிவி தொடர்  34 எபிசோடுகள்  சீன தொடர்களில் பிணவறை மருத்துவரைப் பற்றிய தொடர்கள் நிறைய உள்ளன. அவற்றில் அனைத்துமே தரமாக இருப்பதில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து அதை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிப்பதும், பிணத்தை கூராய்வு செய்து கொலை மர்மத்தை உள்ளபடியே கூறுவதும்தான் அவருடைய வேலை. சீன தொடர்களில் அவரே குற்றம், வன்முறை குழுவின் தலைவர் போல செயல்படுவார். விசாரணை செய்வார். குற்றவாளிகளை அடித்து துவைப்பார். இன்னும் என்னென்ன நாயகத்துவங்களை செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்வார். இந்த தொடர் இதே வகையில்தான் வருகிறது.  பிணவறை மருத்துவரான மிங் சுவான், மர்மமான ஆசாமி. அவர் எப்போத ஆய்வகத்தில் இருப்பார். வெளியில் போவார் என அவருடைய உதவியாளருக்கே தெரியாது. ஆனால் வழக்கு சம்பந்தமான விஷயங்களை துல்லியமாக தேடி ஆராய்ந்து வழக்கை வேறு கோணத்தில் அதை விசாரிப்பவர்களுக்கு காட்டி குற்றவாளியின் திசையை ஆருடம் சொல்லிவிடுவார். காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்து ஆறு மணிக்கு வீடு செல்லும் ஆள் கிடையாது. மணமாகாதவர். அவருக்கு வளர்ப்பு தந்தை பே

அடிமையின் காதல் - ஓரியண்டல் ஒடிசி - சீன தொடர்

படம்
  ஓரியண்டல் ஒடிசி சீன டிராமா 60 எபிசோடுகள் டேங்க் பேரரசு காலம். மன்னர் நோயுற்றுவிட ராணிதான் நிர்வாகம் செய்கிறாள். அரசில் நிதி நிர்வாகம் செய்யும் அமைச்சர் வீட்டுப்பெண், அசட்டு துணிச்சல் கொண்டவள். நகரில் நடைபெறும் பல்வேறு மர்ம குற்றங்களை துப்புதுலக்குகிறாள். அதன் வழியாக அடிமை ஒருவனை விலைக்கு வாங்குகிறாள். அவன்தான் மூலே. அளப்பரிய வலிமை கொண்டவனுக்கு தொடக்கத்தில் பேச்சு வருவதில்லை. அனைத்தும் சைகைதான். கூடுதலாக, நகர தலைமைக் காவலன் ஒருவன் உதவிக்கு வருகிறான். இவர்கள் மூவரும் சேர்ந்து குற்றங்களின் பின்னணியை அடையாளம் காண்கிறார்கள். குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார்கள்.  அடிமை மூலேவுக்கு, தனது உரிமையாளரான யே யுன்னான் என்ற நிதிஅமைச்சரின் மகள் மீது காதல். ஆனால் யுன்னானுக்கு நகர தலைமைக்காவலர் மீது அதீத பிரேமம். இவரை அந்நாட்டு இளவரசி மிங்காய் காதலிக்கிறாள். இவளை, அடிமை வீரன் ஜென் ஜிங் காதலிக்கிறான். இவன், விபசார விடுதி ஒன்றைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்துகிறான். ஜென் ஜிங், தன்னை காதலிப்பது தெரிந்தாலும் இளவரசிக்கு அவன் மீது காதல் கிடையாது. அவனை வைத்து சில விஷயங்களை அடையலாம் என முயற்சி செய்கிறாள்.

உடல்பசி, வயிற்றுப்பசி என இரண்டாலும் தவிக்கும் ராமோஜி ராவின் சுயசரிதை! - ராமோஜியம் - இரா முருகன்

படம்
  ராமோஜியம்  இரா முருகன் கிழக்கு பதிப்பகம் பிரிட்டிஷாரின் ஆட்சியில் நடக்கும் கதை. அக்காலகட்டத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கிளர்க்காக வேலை செய்யும் ராவ்ஜி, அவரது மனைவி ரத்னாபாய் ஆகியோரின் வாழ்க்கை கதைதான் நாவல்.  கொரிய டிவி தொடர்களில் பன்றிக்கறி, மாட்டிறைச்சி, நூடுல்ஸ், முட்டை எப்படி நீங்காமல் இடம்பெறுகிறதோ அதுபோல இந்த நாவலெங்கும் உணவு வகைகள் ஏராளம். தாராளம். உணவு கதையில் ஒரு பாத்திரம் போலவே வருகிறது. ராவ்ஜிக்கு அரசு வேலை என்பதால் அவர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. எங்கு சென்றாலும் அவரது உறவினர்கள் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் அத்தனை ருசியாக, வகை வகையாக சமைத்து போடுகிறார்கள். கும்பகோணத்தில் டீ ஆபீசராக சென்று வேலை பார்த்து, அங்கு விடுமுறைக்கு வந்திருந்த இளம்பெண் ரத்னாபாயை காதல் வலையில் வீழ்த்துகிறார். அவருமே வீழ்கிறார். பிறகுதான் அரசு தேர்வு எழுதி கிளர்க்காக சென்னையில் உத்தியோகமாகிறது. அதை வைத்தே மராட்டிய மாமனார், மச்சினன் ஆகியோரை சரிகட்டி ரத்னாவை கல்யாணம் செய்கிறார்.  1975 நாவலைப் போலவே இதிலும் நாயகன் ராவ்ஜி, அரசு விவகாரங்களை விமர்சிக்க விரும்பாத குடும்பஸ்தான். அவருக்க

நல்லிதயம் கொண்ட கூலிக்கொலைக்காரன், சட்டவிரோத உறுப்பு விற்கும் குழுவோடு மோதும் கதை!

படம்
  நல்லிதயம் கொண்ட கூலிக்கொலைக்காரன், சட்டவிரோத உறுப்பு விற்கும் குழுவோடு மோதும் கதை! கில் இட்  கொரிய டிராமா 12 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி  ரஷ்யாவில் இருந்து கொரியா வரும் கூலிக்கொலைகாரன், ஆதரவற்ற குழந்தைகளின் உறுப்புகளை திருடி பணக்காரர்களுக்கு  வழங்கி வரும் குழுவை அறிந்து அதை அழிக்க முயல்வதே கதை. இப்படி செய்வதில் அவனுடைய கடந்த கால வரலாறும், பறிகொடுத்த அன்புக்குரிய உயிர்களும் உள்ளன.  நாயகன் கிம் சோ ஹியூனுக்கு அதிக வசனங்கள் இல்லை. அவனுக்கும் சேர்த்து அவனுடைய தோழி ஹியூன் ஜின் பேசிவிடுகிறாள். அவள் பேசாதபோது கிம்மின் துரோக நண்பன் பிலிப் அதை செய்கிறான். எனவே வசனம் இல்லையே என கவலைப்படவேண்டியதில்லை. பிலிப் தனது நண்பன் கிம்முக்கு செய்யும் துரோகம் சாதாரணமானதில்லை. கிம் காக்க நினைக்கும் அவனது தங்கை போன்ற சிறுமியை காசுக்காக கொல்ல காட்டிக்கொடுக்கிறான். ரஷ்யாவில் இருந்து கொரியாவுக்கு நாயகன் கிம் வருவதற்கு, அவனது வளர்ப்பு அப்பா வாங்கிக்கொண்ட சத்தியமும், அவர் துப்பாக்கிக் காயம் பட்டு இறந்துபோவதுமே முக்கிய காரணம். அதோடு, அவனது கடந்த கால வரலாறுக்கும் கொரியாவிற்கும் சம்பந்தம் உள்ளது.எனவே, அவன் கூலிக்கொ

35 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளிக்காக, குற்றவாளிகளை நெருப்பால் கொல்லும் சீரியல் கொலைகாரன்!

படம்
  chimera k drama  16 episodes Chimera (Korean: 키마이라; RR: Kimaira) is a South Korean television series directed by Kim Do-hoon and written by Lee Jin-mae. Starring Park Hae-soo, Lee Hee-joon and Claudia Kim, the series tells the story of three leading characters who dig through secrets of the past 30 years to find ...   Wikipedia கிமேரா என்றுதான் தொடரில் உச்சரிக்கிறார்கள். எனவே அப்படியே தொடருவோம்.  1984ஆம் ஆண்டு கிமேரா என்ற கிரேக்க புராணக்கதையில் வரும் மிருகத்தின் அடையாளத்தை வைத்துக்கொண்டு கொலைகாரர், மூன்று பேர்களைக் கொல்கிறார். அந்த மூன்று பேருமே ஹான்மியாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஐந்து ஆராய்ச்சியாளர்களில் ஒரு பெண் ஆராய்ச்சியாளர் காணாமல் போகிறார். உயிர்தப்பும் மற்றொருவர் சியோரன் என்ற பெருநிறுவனத்தின் குடும்பத்தில் பெண் எடுத்து மருமகனாகிறார். எளிமையாக முதலாளி ஆகிறார்.  35 ஆண்டுகள் கழித்து ஆராய்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் செய்தியை பத்திரிகையில் எழுதிய  முன்னாள் ஊழல் பத்திரிக்கைகாரர் திடீரென காரில் வைத்து எரிக்கப்படுகிறார். காரில் லைட்டர் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. அதில் கி

அவசரகாலத்தையும், அதில் நடைமுறையான குடும்பக்கட்டுப்பாட்டு விவகாரத்தை அங்கதமாக்க முயலும் நாவல்! - 1975 - இரா முருகன்

படம்
  1975 இரா முருகன் கிழக்குப் பதிப்பகம்  pages 449 விலங்குப்பண்ணை, 1984 ஆகிய நாவல்களை நினைவுபடுத்துகிற படைப்பு. அதாவது, நல்ல அவல நகைச்சுவையை படிக்கலாமே என தூண்டுகிற இயல்பு கொண்டது. காங்கிரஸ் அரசின் சர்வாதிகாரம், கண்காணிப்பு ஆகியவற்றை அவல நகைச்சுவையாக்கி ஆசிரியர் எழுதியுள்ள நாவல்தான் 1975. இரா முருகன், வங்கிப் பின்னணியைக் கொண்டு எமர்ஜென்சி காலகட்டத்தை பகடி செய்திருக்கிறார். இந்நாவலை கிழக்கு பதிப்பகம் எதற்கு வெளியிட்டிருக்கிறது என்ற காரணத்தை நாம் ஆராய அவசியமே இல்லை. வலதுசாரி பதிப்பகம். அதற்கு உகந்தபடி நாவலின் மையப்பொருளை தேர்ந்தெடுக்கிறது.  இருபத்தொரு மாதங்கள் நீடித்த எமர்ஜென்சியை நினைவூட்டும் விதமாக அதே எண்ணிக்கையில் அத்தியாயங்கள் உள்ளன. சென்னை, திருநெல்வேலி, தில்லி என மூன்று நகரங்களுக்கு கதை நகர்கிறது. அதேபோல பாத்திரங்களும் மாறுகிறார்கள். அனைத்திலும் மாறாத ஒன்று, இருபதம்ச திட்டம். ஐந்து அம்ச கொள்கை, பேச்சைக் குறை. வேலையைச் செய் என்ற வாசகம் ஆகியவைதான்.  நாயகன் சிவசங்கரன் போத்தி வங்கி ஊழியன். அவனுக்கு அரசியலோ, தத்துவமோ, அப்பா வழியில் கூடக்குறைய கற்ற ஆயூர்வேதம் கூட முக்கியமில்லை. வங்கிப்பண

அப்பா தனது உயிரை தியாகம் செய்து காப்பாற்றிய சிறுமியே மகனின் காதலியாக வந்தால்..... ஃபிளேமிங் ஹார்ட்

படம்
  flaming hearts chinese drama rakutan viki தீயணைப்பு துறை சார்ந்த கதை. நாயகன் ஹூவா ரான். இவனின் தந்தையும் தீயணைப்பு வீரர்தான். கேப்டனாக இருந்தவர், 2000ஆம் ஆண்டு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் சிறுமியை காப்பாற்ற முயன்று அதில் வெற்றிகண்டு பதிலுக்கு தன்னையே தியாகம்செய்கிறார். அப்படி இறந்துபோனதால், ஹூவா ரான் நிலைகுலைந்து போகிறான். அப்பாவைப் போலவே படித்து தீயணைப்பு வேலைக்கு வருகிறான். தென்கிழக்கு மருத்துவமனையில் எமர்ஜென்சி பிரிவில் உள்ள இளம்பெண் பழக்கமாகிறாள். இருமுறை அவளது உயிரைக் காப்பாற்றுவது ஹூவா ரான்தான். அவளுடைய கடந்த காலத்தில் ஒரு ரகசியம் இருக்கிறது. அது நாயகனின் அப்பா இறப்பு சம்பந்தமானது. அது என்ன என்பதை சீன தொடர் ஜவ்வாக இழுத்து சொல்லுகிறது.  பொதுவாக தீயணைப்புத்துறை சார்ந்த தொடர் என்றால் தேசப்பற்று என மூக்கு சிந்த வைப்பார்கள். ஆனால் இந்த தொடர் தேசப்பற்று, காதல் என எந்தப்பக்கமும் போகாமல் இருபத்து நான்கு எபிசோடுகளில் முடிகிறது. ஆனால் என்ன சொல்லவருகிறது என ஒன்றும் புரியவில்லை. தொடரின் ஒரே பலம், நாயகன் ஹூவா ரானாக நடித்துள்ள சீன நடிகரின் முக வசீகரம்தான். அவருக்கு அடுத்து நர்சாக வரும் ஷி

அம்மாவைக் கொன்ற அரசியல்வாதியை, போலீஸ்காரர்களை பழிவாங்க முயலும் மகனின் சட்டப்போராட்டம்!

படம்
யூ ஆர் ஆல் சரவுண்டட் கொரிய டிராமா இருபது எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்  நகரில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்படுகிறார். அதை அங்கு வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் பார்த்துவிடுகிறார். காவல்துறை அவரை சாட்சி சொல்ல அழைக்கிறது. ஆனால் அவரை பணக்கார தொழிலதிபர் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டுகிறார். நர்சிற்கு கணவர் இல்லை. ஒரே ஆளாக நின்று வேலை பார்த்து மகனை வளர்க்கிறார். மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என போலீஸ் அதிகாரி சியோ பான் சியோக் உறுதிதருகிறார்.  இதனால் அந்த நர்சம்மாவும் சாட்சி சொல்ல ஒத்துக்கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவர் வீட்டில் கொலையாகி கிடக்கிறார். கொலையாளி விட்டுச்சென்ற டாலர் ஒன்றைப் பற்றி நர்சின் மகன் தகவல் சொல்கிறான். ஆனால் அவனையும் கொலையாளி கொல்ல முயல்கிறான். அந்த நேரத்தில் கொலையாளி போனில் பேசும்போது, சியோ என்ற உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்த அதிகாரியின் பெயரைக் கூறுகிறான். இதைக்கேட்ட சிறுவன், நம்பிய அதிகாரியே மோசம் செய்துவிட்டதாக நொந்துபோகிறான். இவர்களை பழிவாங்குவது என முடிவெடுத்து அந்த நகரில்