இடுகைகள்

ஆன்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசுரகுல தலைவரின் இரண்டாவது பிறப்பு

படம்
  பாத் ஆஃப் சாமன்ஸ் காமிக்ஸ் மங்காபேட்.காம் அசுரகுல இனக்குழுவைச் சேர்ந்த தலைவர் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவருக்கு எமனின் அழைப்பு மூன்று முறை கேட்டால் உயிர் பிரிந்துவிடும். இந்த நிலையில், அவரது விசுவாச சீடன் யூம்யங் அமர வாழ்க்கை தரும் மூலிகையை கொண்டு வந்து வாயில் பிழிகிறான். இதனால், அவரது உடல் பலம் பெறுகிறது. அதேசமயம், ஆன்மா உடலை விட்டு வெளியே வருகிறது. அதை எமன் கொண்டு போக நினைக்கிறார். ஆனால் உடல் மூலிகையால் பலம் பெற்றவுடன் ஆன்மா உள்ளே நுழைய முயல்கிறது. உண்மையில் தலைவருக்கு பணம், செல்வாக்கு, மனைவிகள் என அனைத்துமே கிடைத்தும் நினைத்த லட்சியங்களை அடையமுடியவில்லை. அதை அடையவே அமரத்துவ வாழ்வை பெற நினைக்கிறார்.  இம்முறை எமன் செய்த விளையாட்டால் அவரது உயிர், வுடாங் இனக்குழுவில் தாவோயிசம் பயிலும் மாணவன் உடலில் புகுந்துவிடுகிறது. அந்த மாணவனுக்கு அசுரகுல தலைவரின் நினைவுகளும் உள்ளது. அந்த மாணவனின் உடலில் உள்ள இயற்கையான நினைவுகளும் இருக்கிறது. இந்த பிறப்பில் அசுரகுல தலைவர் அவரது இயல்பான தீயசக்திகளை பயன்படுத்த முடியாமல் போகிறது. அதேசமயம் அவரது எதிரிகளை நண்பர்கள் என்ற முறையில் சந்திக்க நேரிடுகிறது

ஒரே பெண்ணை காவல்துறை அதிகாரி காதலிக்க, சீரியல் கொலைகாரன் பாதுகாக்க நினைக்க.. மூவரது வாழ்க்கையை இணைக்கும் காலச்சரடு!

படம்
  பார்ன் அகெய்ன் கே டிராமா 32 எபிசோடுகள் இரண்டுபிறவி கதை. முதல் பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த மூன்றுபேர் மீண்டும் பிறந்து வாழ்க்கையை வாழ முயல்கிறார்கள். அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதே கதை. பதினாறு எபிசோடுகள் வரும் கதையை, அரைமணி நேரமாக பிரித்து சீன தொடர்கள் அளவுக்கு நீட்டியிருக்கிறார்கள். இதுதான் தொடரைப் பற்றிய முதல் மைனஸ் பாய்ண்டாக சொல்லவேண்டும். இந்த தொடரில் கொலை, அதைப்பற்றிய விசாரணை, நீதிமன்ற உரையாடல்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் கதையின் போக்கு நிதானமாகவே இருக்கிறது. பெரிய பரபரப்பு, திகில் என எதையும் அடையவேண்டியதில்லை. இந்த கதையை அதிகாரத்தில் உள்ளவர்களின் சுயநலம், முன்முடிவுகளால் பாதிக்கப்படும் அப்பாவி ஒருவரின் கதை என்று எளிமையாக கூறலாம். சமூக பொதுப்புத்தியில் கொலைகாரரின் மகன் கொலைகாரன்தான், திருடனின் மகன் திருடன்தான் அல்லது குற்றவாளியாகவே இருப்பான் என நினைக்கப்படுவதை தொடரில் வரும் நாயகியைத் தவிர்த்த பிற பாத்திரங்கள் முழுமையாக ஏற்கிறார்கள். அதைப்பற்றிய குற்றவுணர்ச்சியே இல்லாமல் இயங்குகிறார்கள். இதனால் சீரியல் கொலைகாரரின் மகன் வாழ்க்கை அபாயத்தில் சிக்குகிறது. செய

மறுபிறப்பெடுத்து இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைத்து வைத்த தீயசக்தியுடன் போராடும் பூசாரி!

படம்
  ஃபிரம் நவ் ஆன் இட்ஸ் ஷோ டைம் ஃபிரம் நவ் ஆன், இட்ஸ் ஷோ டைம் கே டிராமா ராக்குட்டன் விக்கி இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைக்கப்பட்ட தீயசக்திக்கும், அதை அடைத்த பூசாரிக்குமான   ஜென்மச் சண்டை. தொன்மைக் கால கொரியா. அங்குள்ள சிற்றரசு நாடு. அதில் வாழும் தலைமை பூசாரி, பஞ்சம் தீர்க்க தனது புனித கண்ணாடியைக் கொண்டு   வேண்டிய மழையை வரவைக்கிறார். நாடு செழிப்புறுகிறது. நாட்டு மக்களும் மகிழ்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் மகள், அதாவது இளவரசி அனைவரின் முன்னிலையில் தான் பூன் சிக் என்ற தலைமை பூசாரியை காதலிப்பதாக பேனர் பிடித்து சொல்கிறாள். பூன் சிக்கிற்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை, இளவரசியை தான் விரும்புகிறேன் என்று சொன்னால் அடுத்த நொடி அவரின் தலையை வெட்டி எறிந்துவிடுவார்கள். அவரின் இனத்தை   அழித்து வீடுகளை கொளுத்திவிடுவார்கள். எனவே இளவரசியிடம் அரச குல ஆட்களைப் பார்த்து மணந்துகொள்ளுங்கள். தான் தாழ்ந்த குலத்தை சார்ந்தவன் என்று கூறுகிறார். ஆனால், இளவரசி கேட்பதாக இல்லை. தலைமை பூசாரியும், இளவரசியும் குணத்தில் ஒன்று போலத்தான். தன்னை அழித்துக்கொண்டாவது பிறருக்கு நன்மை செய்பவர்கள். இதுதான் அவர்களை

அள்ளிக் கொஞ்சேன் எனது காதலை....

படம்
  பேசணும்போல இருக்கு என்று உன் முதல் செய்தி வந்தது. அழைப்பதற்குள் அடுத்த செய்தி ஆனால் கூப்பிடாதே என்று. இரண்டு செய்திகளுக்கும் இடையிலான உன் தயக்கம் சற்றே தாமதமாக வந்தடைந்தது என் விரல்களுக்கு -முகுந்த் நாகராஜன்   கல்லூரிக்கு நீ பிரயாணிக்கும் அரசுப் பேருந்து நீ ஏறியவுடன் அரசிப் பேருந்தாகிறது -சண்பகீ.ஆனந்த்   எனது காதலை ஒரு குழந்தையாகவோ, பொம்மையாகவோ மாற்றத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும் பார்த்ததும் அள்ளிக் கொஞ்சுவாய்   எனது ஆன்மாவை முட்டை கேக்காகவோ, சாக்லெட்டாகவோ மாற்றத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும் உனக்குப் பிடித்திருந்தால் சாப்பிடுவாய் இல்லையெனில் குப்பைத்தொட்டியில் எறிந்துவிடலாம். -ஜானகிராமன் படம் - பிக்ஸாபே  காப்புரிமை - ஆனந்தவிகடன்

மனைவியை வல்லுறவு செய்து கொன்றவர்களை, உயிர்த்தெழுந்து பழிவாங்கும் இசைக்கலைஞன் - தி குரோ

படம்
  தி குரோ பிராண்டன் லீ - தி குரோ தி குரோ இயக்கம் அலெக்ஸ் புரோயாஸ் பிராண்டன் லீ அமெரிக்காவில் உள்ள இசைக்கலைஞர், அவரது மனைவி ஆகியோர் அவர்களது வீட்டில் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இசைக்கலைஞரின் மனைவி நான்கு பேரால் வல்லுறவு செய்யப்பட்டு பிறகே இறக்கிறார். குற்றுயிராக இருக்கும் இசைக்கலைஞர், கடும் வேதனைக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரை விடுகிறார். இறந்த பிறகு கல்லறையில் இருந்து காகத்தின் உதவியால் வெளியே வந்து, வல்லுறவு கயவர்களின் மண்டையை உடைத்து மாவிளக்கு ஏற்றுவதுதான் கதை. சூப்பர்மேன் தனமான கதைதான். பெரும்பாலும் படக்காட்சிகள் இரவில்தான் நடக்கின்றன. நாயகன், பக்கெட் ஹெட் எனும் கிடார் இசைக்கலைஞர் போலவே இருக்கிறார். வில்லன்களை அடித்து நொறுக்குகிறார். காக்கையின் படத்தை தரையில், சுவரில் வரைந்துவிட்டு செல்கிறார். ரத்தம், நெருப்பு என கிடைத்த பொருட்களை பயன்படுத்துகிறார். பார்க்கும் காவல்துறை மிரண்டு போகிறது. ஏதாவது செய்கிறார்களா என்றால் எதுவும் செய்வதில்லை. ஏனெனில் அந்த ஊரில் போதை மாஃ|பியா தலைவர் இருக்கிறார். அவருக்கு பயந்துகொண்டுதான் காவல்துறையே இயங்குகிறது. இசைக்கலைஞரின் பாத்தி

தனது உதவியாளரின் உடலுக்குள் புகுந்து நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்யும் டாக்டர்! - கோஸ்ட் டாக்டர் -

படம்
  கோஸ்ட் டாக்டர் தென்கொரிய டிவி தொடர் 16 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர் பூ சியாங் சியோல் ( Boo Seong-cheol  ) டாக்டர் சா இயான் மிங் (Rain), ஆணவம் கொண்ட இதய அறுவை சிகிச்சை நிபுணர். தான் கைவைத்து அறுவை சிகிச்சை செய்தால் அந்த நோயாளி பிழைக்கவேண்டும் என போராடும் மருத்துவர். அவரது துறையின் தலைமை மருத்துவர் பான் கூட சாவின் அர்ப்பணிப்பு உணர்வையும் அறுவை சிகிச்சை திறனையும் பார்த்து பொறாமைப்படுபவர். சா திறமையானவர் என்றாலும், தான் மட்டுமே அறுவை சிகிச்சைக்கான நோயாளியைத் தேர்ந்தெடுப்பேன் என பிடிவாதமாக இருப்பவர். இதனால் எமர்ஜென்சி பிரிவில் அவரது தேவை இருந்தாலும் அதை நான் செய்யமாட்டேன் என   பிடிவாதமாக இருக்கிறார். இந்த நேரத்தில் அந்த மருத்துவமனையின் தலைவராக உள்ளவரின் பேரன் கோ தக் (kim bum), அங்கு வேலைக்கு வருகிறான். இதயநோய் துறைக்குத் தான் பயிற்சி பெற வருகிறான். சிபாரிசில் வந்தவன், மருத்துவமனை அவனுடையது என்பதால் எளிதாக வந்துவிட்டான் என மருத்துவர் சா அவனை அவமானப்படுத்தி பேசுகிறார். இழிவாக நடத்துகிறார். நிறைய நோயாளிகளை பார்த்துக்கொள்ள சொல்லி தள்ளிவிடுகிறார். இத்தனைக்கும் மருத்துவ கல்

செத்தும் பிழைத்து வந்து எதிரிகளை அடித்து நொறுக்கும் அதிசாகச நாயகன்! யமுடிக்கி மொகுடு - சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி

படம்
  யமுடிக்கி மொகுடு சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி இயக்கம் - ராஜ் பினி செட்டி தமிழில் அதிசயப்பிறவி என்ற ரஜினிகாந்த் நடித்த படம் என நினைக்கிறேன். அதைத்தான் தெலுங்கில் ரீமேக் செய்து சிரஞ்சீவி அட்டகாசமாக நடித்து படமாக்கியிருக்கிறார்கள்.  சென்னையில் வாழும் காளி என்ற ரௌடிக்கும், சட்டவிரோத தொழில் செய்யும் இரு பணக்கார ர்களுக்கும் நேரும் பிரச்னைதான் படத்தில் வரும் முதல் பகுதி. இதில் பணக்கார ர்கள் விரோதிகளாக இருந்து பிறகு நண்பர்களாகி காளியை லாரி மூலம் விபத்துக்குள்ளாக்கி கொல்கிறார்கள். பிறகு, காளியின் ஆன்மா எமலோகம் சென்று தனக்கான நீதியைப் பெற்று திரும்ப வந்து எதிரிகளை அழிப்பதுதான் கதை.  இன்னொருபுறம், கிராமத்தில் பெரும் சொத்துள்ளவரின் வாரிசு, பாலு. இவரது சித்தப்பா. அதாவது பாபாய். பாலுவை பயந்தாங்கொள்ளியாக வைத்துக்கொண்டு அவரது சொத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். பாலுவின் அம்மா பெரிய வீட்டில் இருந்தாலும் வேலைக்காரி போல வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் இறந்துபோன காளியின் ஆன்மா பாலுவின் உடலுக்குள் புகுந்தால் எப்படி இருக்கும்? அதேதான். ரவுசுதான். கூடவே அப்பிராணி பாலுவுக்கு பாவாடை தாவணியில் வ

காதலியைக் காப்பாற்ற தனது ஆன்மாவையே தியாகம் செய்யும் காதலன்! சீக்ரெட் கார்டன்

படம்
                        காதலர்களின் ஆன்மா இடம்மாறினால்…… . கிளாட்ஸ்ரோபோகிக் உள்ள தொழிலதிபருக்கு சினிமாவில் சண்டைபோடும் ஸ்டண்ட்கலைஞர்க்கு வரும் காதல்தான் மையக்கதை . கிம் ஜூ போன் , வம்சாவளியாக நிறுவனத்தை நிர்வகிக்க வந்தவர் . இவரது நிர்வாகத்தில் வணிக மால் ஒன்று உள்ளது . இவரது அலுவலகத்தில் இவருக்கு உள்ள உளவியல் பிரச்னையைக் கண்டுபிடித்து ஊர்ஜிதம் செய்து அதை வைத்து நிறுவன இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்க சதி நடக்கிறது . இதனை நிறுவனத்தில் முப்பது ஆண்டுகளாக வேலை செய்துவரும் அவருடைய மாமாவே செய்கிறார் . கிம்மைப் பொறுத்தவரை தினசரி வேலைக்கு போவதில் ஆர்வம் கிடையாது . வாரத்திற்கு மூன்று முறை அலுவலகம் வருபவர் மீது நேரம் எல்லாம் , ஏராளமான நூல்களைப் படிப்பதற்கு நேரம் செலவிடுகிறார் . அதுபோக நேரம் கிடைத்தால் இவரது குடும்பம் ஏற்பாடு செய்யும் பெண்களுடன் டேட்டிங் எனும் பெண் பார்க்கும் படலம் நடைபெறுகிறது . இப்படி வரும் பெண்களை முரட்டுத்தனமாக கேள்வி கேட்டு அவர்களை பீதியாக்கி ஓடவிடுவது கிம்முக்கு முக்கியமான ஹாபி .    கிம்முக்கு தன்னை ஆச்சரியப்படுத்தும் பெண்களே கிடைக்கவில்லை என்ற

ஆத்மா உலகில் மாட்டிக்கொள்ளும் பியானோ ஆசிரியர்! சோல் -2020

படம்
              சோல் சிறந்த முறையில் ஜாஸ் இசையைக் கற்றுக்கொண்ட பியானோ ஆசிரியர் . ஆர்வமே இல்லாத மாணவர்களுக்கு இசையில் ஆர்வம் பிறக்க போராடிக்கொண்டிருக்கிறார் . பள்ளியில் பகுதிநேரமாக ஆசிரியராக உள்ளவருக்கு முழுநேர ஆசிரியர் என்ற பதவி உயர்வும் கிடைக்கிறது . அதேநேரத்தில் அவரது நண்பர் மூலமாக புகழ்பெற்ற டோரத்தி வில்லியம்சின் குழுவில் சேர்ந்து பியானோ வாசிக்கவும் வாய்ப்பு வருகிறது .    அந்த சந்தோஷத்தில் சாலையில் நடந்து செல்லும்போது பாதாளச்சாக்கடையில் விழுகிறார் . அவரது ஆயுள் முடிந்துவிடுகிறது . அவரது ஆத்மா , கிரேட் பியாண்ட் , கிரேட் பிஃபோர் என பல்வேறு உலகங்களுக்கிடையில் மாட்டிக்கொள்கிறது . சொர்க்கம் , நரகம் , அடுத்த பிறப்பு என பல்வேறு விஷயங்களை அவரது ஆன்மா எப்படி கற்றுக்கொள்கிறது , பியானோ வாசிப்பது என்பதில் ஆசிரியருக்கு ஆர்வம் இருந்தாலும் அவரது அம்மாவைப் பொறுத்தவரை அது பைசாவுக்கு பிரயோஜனமில்லாத வேலை . அவரது கனவு நிறைவேறும் நேரத்தில் அவரது உயிர் சொர்கத்திற்கு வந்துவிடுகிறது . பிறகு எப்படி மீண்டும் உலகிற்கு சென்றார் , அவரது கனவை நிறைவேற்றிக்கொண்டாரா என்பதை நகைச்சுவை நெகிழ்