இடுகைகள்

நிதித்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்க்கட்சிகளை மிரட்டும் அமலாக்கத்துறை !

படம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள அமலாக்கத்துறை இன்று சிபிஐ யை விட சக்தி வாய்ந்த துறையாக மாறி வருகிறது. அப்படி என்ன ஆற்றல் உள்ளது என பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். சட்டங்கள்தான் அதற்கு சக்தி.... 2002 இல் அமலான பணமோசடி சட்டம் பிஎம்எல்ஏ இதில் ஒருவரை கைது செய்தால் அவர் வெளியே வருவது கடினம். இதில் விசாரணை அதிகாரி தன் அறிக்கையை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்ய முடியும். எஃப்எம்ஓஏ எனும் சட்டம், பொருளாதாரக்குற்றவாளியாக ஒருவரைக் கருதி குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தால், அவரின் சொத்துக்களை எப்பாடு பட்டாலும் பிற்பாடும் வாங்க முடியாது. 2005 முதல் 2019 வரை பிஎம்எல்ஏ சட்டத்தில் வழக்கு பதிவான 164 நபர்களில் வெறும் மூன்றே பேருக்கு மட்டுமே பெயில் கிடைத்துள்ளது. அதுவும் இரண்டு மாதங்களுக்கு குறைவாகத்தான். மற்றவர்களுக்கு சிறைதான் நிரந்தர வசிப்பிடம். பொதுவாகவே அமலாக்கத்துறையிடம் அசையும், அசையா சொத்துக்கள் சிக்கினால் திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் அதை போட்டுவிட்டதாக மனசார நம்பலாம். வழக்கு போட்டு அதை மீட்பதற்குள் உங்களின் சட்டை கிழிந்து தலைமுடி உதிர்ந்து....

சிறுகுறு தொழில்துறைக்கு என்னாச்சு? - அரசின் பாதகமான நிதி,பணக்கொள்கை!

 இந்தியாவிலுள்ள 6.3 கோடி சிறுதொழிலாளர்கள் ஆட்டோமேஷன், அல்காரிதம் என தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்றபடி தொழில்களை மேம்படுத்தி, வருகிறார்கள். நாட்டின் நாற்பது சதவீத ஏற்றுமதிக்கும், 28 சதவீத உள்நாட்டு உற்பத்திக்கும் உதவுவது இவர்கள்தான். தோராயமாக 11 கோடிப்பேருக்கும் மேலாக வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறுகுறுகுறுந்தொழில் துறை, விவசாயத்துறைக்கு அடுத்து வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்குகிறது. மத்திய அரசு பதிவு செய்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக 350 கோடியை இரு சதவீத வட்டியுடன் வழங்குகிறது. கூடவே முத்ரா கடன் வசதியும் உள்ளது. ஆனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்காக இந்திய அரசு செய்த பணமதிப்பு நீக்க முயற்சியில் இத்துறையின் வளர்ச்சி முடங்கியது. இதன்விளைவாக, தொழில்துறை உற்பத்தி இண்டெக்ஸில் (IIP) 3.6 சதவீத வளர்ச்சி மட்டுமே இந்த ஆண்டில் பதிவாகியுள்ளது. இக்காலகட்டத்தில் வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்து வந்தது. இதைக் குறைக்க, ரிசர்வ் வங்கி கடன் தரும் முறைகளையும் மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதனால், சிறுகுறு தொழிலாளர்கள் வங்கிக் கடன் கிடைக்காமல் தடுமாறினர்.  இதற்காகவே இந்திய அரசு, செபியின்