இடுகைகள்

அடக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதரவற்றோரின் உடல்களை கௌரவமாக அடக்கம் செய்யும் சமூக சேவகர் - உறவுகள் - காலித் முகமது

படம்
  ஆதரவற்றோருக்கு உறவினர் வாழ்க்கையில் பிறப்பு எப்படியோ, இறப்பும் அப்படித்தான். ஆனால் இறப்பு என்பது நிறைய மனிதர்கப் பயப்படுத்துகிறது. பிறப்பில் உள்ள ஆரவார கூச்சல் இறப்பில் ஏற்படுவதில்லை. ஒரு விதமான சுமையான மௌனம் அனைவரின் மனதிலும் உருவாகிறது.   இறந்தவர்களுக்கு உறவினர்கள் பலம். ஏராளமான உறவினர்கள் உள்ளவர்களுக்கு அவர்களின் உடல்களை எளிதாக தகனம் செய்துவிட முடியும். ஆனால் ஆதரவற்றோருக்கு, குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு   இறப்பு மிகவும் அவலமாகவே உள்ளது. இறந்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படபோவதில்லை. ஆனாலும் இறந்த உடல்களை முறையாக எடுத்ததுச்சென்று குறிப்பிட்ட இடத்தில் எரிப்பது, அல்லது புதைப்பது சிறந்தது.   இந்த சமூகப்பணியை 2017ஆம் ஆண்டு தொடங்கி   சென்னையைச் சேர்ந்த காலித் முகமது செய்து வருகிறார். ஆறு ஆண்டுகளில் காலித் முகமது தனது தொண்டு நிறுவனம் மூலம் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிணங்களை கௌரவமான முறையில் தகனம் செய்துள்ளார். கொரோனா காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாக உடல்கள் வந்திருக்கின்றன. காலித் முகமது முதலில் தனியாக இப்பணியைச் செய்தாலும் இப்போது, ஐநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். ச