இடுகைகள்

இந்தியா- மனித உரிமை மீறல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரஞ்சு இந்தியாவில் மக்கள் வாழ முடியுமா?

படம்
பிரதமர் மோடியை கொலை செய்ய முயற்சித்த சதிக்கு காரணம் என குற்றம் சாட்டி ஐந்து பேர்களை மகாராஷ்டிராவின் புனே போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தற்போது கடந்த மூன்று மாதங்களில் மனித உரிமை ஆர்வலர்களை சல்லடை போட்டு தேடி கைது செய்து வருகிறது காவல்துறை. ஃபரிதாபாத்தின் சுதா பரத்வாஜ், டெல்லியைச் சேர்ந்த கௌதம் நவ்லகா, மும்பையைச் சேர்ந்த வெர்னோன் கன்சால்வ்ஸ், அருண் பெரிரா, ஹைதராபாத்தைச் சேர்ந்த வரவர ராவ், கிராந்தி தெகுலா ஆகியோரின் வீடுகள் போலீசாரால் சோதனை செய்யப்பட்டு பின்னர் மேற்கூறிய மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தலித் மற்றும் ஆதிவாசிகள் தொடர்புடைய செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கியவர்கள் என்பது ஒன்றே அரசு இவர்களை சிறைப்படுத்தி சித்திரவதை செய்யக் காரணம். இதற்கு போலீஸ் கூறும் காரணம், பீமா கோரேகான் பேரணி வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதுதான். கடந்த ஜூனில் வழக்குரைஞர் சுரேந்திர கட்லிங், பேராசிரியர் சோமா சென், மனித உரிமை செயல்பாட்டாளர் மகேஷ் ராவத்(நாக்பூர்), தலித் செயல்பாட்டாளர் சுதீர் தவாலே(மும்பை), ரோனா வில்சன்(டெல்லி) ஆகியோர் அதிரடியாக கைத