இடுகைகள்

சாதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அய்யா வைகுண்டரின் சமூக சீர்திருத்த செயல்பாடு - மாட்டுச்சாண மூளைகளின் அவதூறு ஏன்?

படம்
  மத நல்லிணக்கத்தை உடைக்கும் மாட்டுச்சாண மூளைகள் மக்களின் மனதில் அன்பை விதைப்பதை விட வெறுப்பை வளர்ப்பது எளிது, அதிலும், உங்கள் வாழ்க்கை நாசமாக போனதற்கு காரணம், இந்த சாதிக்காரன், மதக்காரன் என்ற பழிபோட்டுவிட்டு எளிதாக அந்த சண்டையில் லாபம் பார்க்கலாம். காவிக்கட்சி ஆட்சியில் உள்ள இடங்களில் கலவரங்கள், புல்டோசர் நீதி, பலாத்காரம், மானபங்கம், தீண்டாமை இதெல்லாம் சகஜம். வேதகால இந்தியா, புதிய இந்தியாவாக மெதுவாக உருவாக்கப்பட்டு வருகிறது. குற்றங்கள் இருப்பது புதிதல்ல. ஏற்கெனவே இவையெல்லாம் சிறியளவில் அங்கு இருப்பவைதான். பிழைப்புவாதிகள், அதை தூண்டிவிட்டு தேர்தலில் வென்று வருகிறார்கள். காவிக்கட்சி, ஆட்சியில் இல்லாத இடங்களில் கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானது, பன்மைத்துவ சமூகத்தை, மதங்களை ஒற்றைத்தன்மை கொண்டதாக, ஒரே மதமாக மாற்றுவது. இதற்கு காவிக்கட்சி பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்துகிறது. அதில் ஒன்றுதான், ஆளுநர் என்பது.  அண்மையில் சமூக சீர்திருத்தவாதியான அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்தநாள் விழாவில், அழியும் சனாதன தர்மத்தை காக்க மறுபிறப்பு எடுத்து வந்த விஷ

அறிவுசார்ந்த ஜனநாயகத்தன்மையை அளிக்கும் இணையம்- சர்வன்ட்ஸ் ஆஃப் நாலேஜ் திட்டம் - இன்டர்நெட் ஆர்ச்சீவ்

படம்
  அரசு பொது நூலகங்களுக்கு உள்ளே சென்று படிப்பது என்பது கடினமான செயலாகிவிட்டது. இன்று அப்படி செல்பவர்கள் அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். பொதுவான அறிவுத்தேடலுக்காக செல்பவர்களுக்கு அங்கு இருக்கைகள் கூட இருப்பதில்லை. எல்லாவற்றையும் நாளைய ஊழல்வாதிகளாக உருவாகவிருக்கும் அரசு அதிகாரிகளே நிரப்பியிருக்கிறார்கள். அதையும் மீறி சென்று ஆங்கில வார இதழ்களை படித்தால் நீ யார், அப்பா என்ன செய்கிறார் என்று கேள்வி கேட்கிற  நூலகர்களே கிராமப்புறங்களில் அதிகம். ஆனால் இணையத்தில் இந்த பாகுபாடுகள், வேறுபாடுகள் கிடையாது. அமைதியாக நூல்களை தேடிப்பார்த்து தரவிறக்கிக் கொள்ளலாம். அதிலும் இன்டர்நெட் ஆர்ச்சீவ் வந்தபிறகு நிலைமை மாறிவிட்டது. அதில் ஏராளமான அரிய நூல்கள், வார இதழ்கள், கட்டுரைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதை நூலகரிடம் சாதி சொல்லாமல் எளிதாக இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்திற்கு எதிராக நூல் பதிப்பாளர்கள் வன்மம் கொண்டு வழக்குகளை தொடுத்து வருகிறார்கள்.  பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் உள்ள காந்தி பற்றிய நூல்களை ஸ்கேன் செய்து இணையத்தில்

தனது குடும்பத்தை அழித்த பணக்காரரை பழிவாங்க அலையும் கல்லூரி மாணவன்!

படம்
  கைதி சிரஞ்சீவி, மாதவி ஊரில் பணக்காரரின் மகளை காதலித்து,அதன் விளைவாக அப்பா, அக்கா, இறுதியாக தனது உயிரையே இழப்பவனின் கதை.  இந்த கதை ஒருவகையில் ஆந்திரத்தில் உள்ள சாதிக்கட்டமைப்பை மறைமுகமாக வெளிக்காட்டுகிறது. சிரஞ்சீவியும், மாதவியும் ஒரே கிராமத்தை்ச சேர்ந்தவர்கள். இருவரும் நகரில் சென்று ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நடனம்,நாடகம் ஆகியவற்றில் சேர்ந்து நடித்து இருவருக்கும் காதல் நெருப்பு பற்றிக்கொள்கிறது. மாதவிக்கு பெரியளவில் பணம் இருக்கிறது. படிப்பு முடிந்தால் கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கவேண்டியதுதான் பாக்கி. ஆனால் சிரஞ்சீவிக்கோ, மாதவியின் அப்பா வீரபத்திரனிடம் அடமானம் வைத்த வீட்டை மீட்க வேண்டும். விதவை அக்காவைக் காப்பாற்ற வேண்டும் என நிறைய கடமைகள் உள்ளன. இதனால் படிப்பில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. மாதவிக்கு அவனை காதலிப்பது தவிர வேறு வேலையில்லை.  இந்த நிலையில் தேர்வு எழுதியபிறகு சிரஞ்சீவி தனது கிராமத்திற்கு வருகிறான். அப்படி வரும்போது பேருந்தில் வருவதாக கூறுபவனை, மாதவி தனது காரில் கிராமத்திற்கு கூட்டி வருகிறாள். இதைப் பார்த்து கிராம முன்சீப், வீரபத்திரத்திடம் தகவல் கூற அவர் சி

ஒரே இந்தியா என்ற கூக்குரலால், பன்மைத்தன்மை வாய்ந்த பஞ்சாபி கலாசாரம் அழிக்கப்படுகிறது! - அம்ரித்பால் சிங்

படம்
  அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராளி அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராட்டத் தலைவர் அம்ரித்பால் சிங் சந்து, துபாயில் குடும்பத் தொழிலான சரக்கு போக்குவரத்தை கவனித்துக்கொண்டிருந்தனர். மழுங்கச் சிரைத்த கன்னம், குறைவான தலைமுடி, டீ ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் என வாழ்ந்தவர். இப்போது தோற்றத்தில் நிறைய மாறிவிட்டார். கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கு வந்தவர், சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் தொடங்கிய அம்ரித் சன்சார் என்ற விழாவில் பங்கேற்றார். காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பிய ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவின் அடிச்சுவட்டை பின்பற்றத் தொடங்கிவிட்டார். அம்ரித்பாலைச் சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் உண்டு. இவர்களின் கையில் துப்பாக்கி, வாள் என இருவகை ஆயுதங்கள் உள்ளன. சொகுசு காரில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சீக்கியர்களின் பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசி வருகிறார். சீக்கியத்தை தனி மதமாக இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை என்பதால், அம்ரித்பால் அதன் மீது பெரிய மதிப்பை வெளிப்படுத்தவில்லை. இந்தச் செய்தியை எழுதும்போது தனது கன்னத்தில் தேசியக்கொடியை வரைந்த சீக்கிய சிறுமி தங்க கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கப்பட்டு

இந்து சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழாதபோது ஆழமான வலியை மனதில் உணர்ந்தவர் அம்பேத்கர் - அசோக் கோபால்

படம்
  அம்பேத்கர் சுயசரிதை- நவாயனா இடதுபுறம் - ரவிக்குமார், திருமாவளவன், நவாயனா பதிப்பகத் தலைவர் அசோக் கோபால், வரலாற்று பட்டதாரி. 2003ஆம் ஆண்டு முதல் பி.ஆர். அம்பேத்கரைப் பற்றி படித்து ஆய்வு செய்து வருகிறார். அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் செயல்பாடு, காந்தியுடனான உறவு என பல்வேறு விஷயங்களைப் பற்றி மராத்தி, ஆங்கில மொழியில் இருந்து படித்து வருகிறார். இதன் விளைவாக நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. அதைப்பற்றி அவரிடம் பேசினோம்.   இதுபற்றி   எ பார்ட் அபார்ட் – தி லைஃப் அண்ட் தாட் ஆஃப் பி.ஆர். அம்பேத்கர் என்ற நூலை எழுதியுள்ளார். நூலை நவாயனா பிரசுரித்துள்ளது. நெடுநாட்களுக்குப் பிறகு, அம்பேத்கரின் வாழ்க்கை பற்றிய முழுமையான நூல் வெளிவந்துள்ளது. நூலை எழுதுவதற்கான பணியைப் பற்றி கூறுங்கள். 2003ஆம் ஆண்டு, அம்பேத்கரைப் பற்றி படிக்கத் தொடங்கினேன்.   நான் மிக குறைவாக அறிந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிவதே நோக்கம். இந்த ஆய்வுப் பணியில் அவரைப்பற்றி எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்டதைவிட, அவரே தன்னைப் பற்றி கூறியதை விட, நிறைய விஷயங்களை அறிய முடிந்தது. குறிப்பாக, அம்பேத்கர் புத்தமதத்தை ஏன் தழுவுகிறா

சுலைமான், உதயபுரம் மாளிகையின் தம்புராட்டியை காதலித்தால்... - உதயபுரம் சுல்தான் - திலீப், ப்ரீத்தா

படம்
  உதயபுரம் சுல்தான் - திலீப், ப்ரீத்தா உதயபுரம் சுல்தான் -மலையாளம் உதயபுரம் சுல்தான் மலையாளம் திலீப், ப்ரீத்தா, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார், அம்பிகா அவிட்டம் நாராயண வர்மா உதயபுரம் மாளிகையைச் சேர்ந்தவர். அரச வம்சம். இவரது குடும்பத்தில் இருந்து மாளவிகா என்ற பெண், அப்துல் ரஹ்மான் என்ற முஸ்லீம் காதலனை நம்பி வீட்டை விட்டு சென்றுவிடுகிறார்.   இந்த திருமணத்தால் மாளவிகாவின் அண்ணன்மார்கள் அப்துல் ரஹ்மானின் கால்களை அடித்து சிதைக்கிறார்கள். இதனால் உருவான பகை, தீர்வதாக இல்லை. மாளவிகாவின் சொத்து தொடர்பாக, வழக்கு போடப்பட்டு   நீதிமன்ற படியேறுகிறது. அதில் மருமகன் ரஹ்மான் வெல்கிறார். மாமனார் வர்மா தரப்பு தோற்கிறது. அதேசமயம், ரஹ்மான் - மாளவிகாவின் மகன் சுலைமான், வாய்ப்பாட்டு கலைஞன். சந்தர்ப்ப சூழல் காரணமாக தனது தாத்தாவின் வீட்டுக்கு உதயபுரம் மாளிகைக்கு வருகிறான். அங்கு, ஒரே பெண் வாரிசான கோபிகாவுடன் காதலாகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதே கதை. திலீப், ஜெகதி ஶ்ரீகுமார், இன்னொசன்ட் இருக்கும்போது காமெடிக்கு என்ன குறை…. கொச்சி ஹனீபாவும் முரட்டுத்தனமாக புத்திசாலியாக நகைச்சுவையை சலீம்

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மனிதர்களின் ஏற்றமும், வீழ்ச்சியும்! மருந்து - புனத்தில் குஞ்ஞப்துல்லா

படம்
  எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா மருந்து - நாவல் மருந்து புனத்தில் குஞ்ஞப்துல்லா தமிழில் சு.ராமன் வாரணாசியில் உள்ள மருத்துவமனைக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை. அங்கு பணியாற்றும் பல்வேறு மனிதர்களின் கதை. கதையின் தொடக்கத்தில் தேவதாஸ் என்ற இளைஞர், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக வருகிறார். இப்படி தொடங்கும் கதை பிறகு, லெஷ்மி, டி குமார், ஹஸன், க்வாஜா, தனுஜா, மேட்ரன் ஹெலன், மேரி, குஞ்சம்மா, பியாரோலால் என நிறைய பாத்திரங்களைக் கொண்டதாக மாறுகிறது. இதில், குறிப்பிட்ட பாத்திரங்களை மையப்படுத்தி நகர்கிறது என எதையும் சொல்ல முடியாது. ஆனாலும் மேரிக்கான இடமும், அவளுக்கான விவரணைகளும் நன்றாக உள்ளன. பிறருக்கான வலி, வேதனைகளை அறிந்து மருந்து கொடுத்து அவர்கள் வாழ்வதற்கு தைரியம் தருபவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள். அதேசமயம் அவர்களது தனிப்பட்ட தொழில் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்னைகள், சீர்கேடுகள், மன உளைச்சல்கள் எழுகின்றன. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை புனத்தில் தனது வசீகரமான மொழியில் கூறியுள்ளார். தேவதாஸ் –லெஷ்மி கதை, எப்போதும் போலான காதல் கதையாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்

வன்முறைச் சம்பவங்களை எழுதுவது எப்படி?

படம்
  இன்று உலகம் முழுக்க பத்திரிகையாளர்கள் பல்வேறு செய்திகளை எழுதுகிறார்கள். அதில் அதிகம் கவனம் பெறுவது மனிதர்களைப் பற்றிய செய்திகள்தான். வெற்றி, தோல்வி, மீண்டு வந்த கதைகள் என வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்படி எழுதுவது என பார்ப்போம். ஜாதி, மதம், இனக்குழு, நிறம், பாலியல் என பல்வேறு வகையாக குறிப்பிடப்பட்டு மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள். இப்படி தாக்கப்பட்டவர்களைப் பற்றிய செய்திகளை எழுதும்போது, பெயர்களை வெளியிடவேண்டாம் என தொடர்புடையவர் கூறினால் அதன்படியே செய்தியை எழுத வேண்டும். ஏனெனில் செய்தி வெளியாகி அவரின் மீதமுள்ள வாழ்க்கை, மரியாதை பாதிக்கப்படக்கூடாது. முற்றிலும் அழிந்துவிடக்கூடாது.   பாலியல் வல்லுறவு, சீண்டல் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டால் முடிந்தளவு அவர்களின் பெயர், புகைப்படத்தை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட நினைத்தால் பாதிக்கப்பட தரப்பிடம் உரிய அனுமதி வாங்கவேண்டும். இல்லையெனில் இந்த சம்பவம், பத்திரிகையாளருக்கு தண்டனை அளிக்கும் குற்றமாகவும் மாறலாம். வன்முறை சம்பவத்தை பதிவு செய்யும்போது எழுதும் மொழி, நடை என்பது சற்று மத்திய நிலையில் இருக்கவேண்டும். எந்த தரப்பிற்கும் ஆதரவாக அம

உருளக்குடி கிராமத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்! - சூல் - சோ.தர்மன் - அடையாளம் பதிப்பகம்

படம்
    சூல் நாவல் சூல் நாவல் எழுத்தாளர் சோ.தர்மன் சூல் சோ. தர்மன் அடையாளம் பதிப்பகம்   நாவலாசிரியர் சோ.தர்மன், சூல் நாவலை நீர், நீர் பாய்வதால் பயிர் பச்சைகள் எப்படி விளைகின்றன என்பதையே சூல் என அர்த்தப்படுத்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உருளக்குடி என்ற ஊரின் தொன்மையும், சாதி கட்டுப்பாடுகளும் உடைந்து மெல்ல விவசாயம் என்ற தொழில் அழிவதை 500 பக்கங்களுக்கு விவரித்திருக்கிறார். நாவலில் நாம் ரசிக்கும்படியான விஷயம் என்றால், பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் திட்டுவது போல ஹாஸ்யமாக உரையாடிக் கொள்வதுதான். இதில் பாலியல் சார்ந்த விஷயங்கள் இருந்தாலும் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. கொஞ்சம் விஷமமான விஷயங்களை போகிற போக்கில் பேசிவிட்டு போகிறார்கள். நாவலில் வரும் குப்பாண்டி, கோவிந்தசாமி விவகாரம் முதலில் இயல்பானதாக இருந்து பிறகு மெல்ல ஆன்மிகம் நோக்கி நகர்கிறது. அதற்கு பிறகு குப்பாண்டி குப்பாண்டி சாமியாக மாறுகிறார். அதற்கு பிறகு அவர் பேசுவதெல்லாம் ஆசிரியரின் மனதில் உள்ள உபதேசக் கருத்துகளைத்தான். நீர்ப்பாய்ச்சி, ஊரில் உள்ள மனைவி இல்லாத மூவரின் வாழ்க்கை, எலியன், அவரின் நண்பரான ஆசாரி, கோணக்கண்ணன், சுச

இந்திரா நகர் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட ஆதி திராவிடர் தெரு - அனுசுயாவின் சுயமரியாதை முயற்சி

படம்
  பெயர் மாற்றம் ஏற்படுத்தும் சமூக மாற்றம்! ஹரிஜன், ஆதி திராவிடர் என்ற சொற்கள் நாளிதழ்களில் படிக்க எப்படி இருந்தாலும்   அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள்? சமூக அந்தஸ்து சார்ந்து பார்க்கும்போது இதுபோன்ற வார்த்தைகளை வகுப்பறையில் அல்லது பொது இடங்களில், அரசு அலுவலகங்களில் கூறப்படும்போது தர்மசங்கடமாக உணர்வு எழக்கூடும். அதனால்தான் தலித்துகள் தங்கள் பெயர்களை நாகரிகமாக வைத்துக்கொள்வதோடு சாதியையும் வெளியே தெரிவிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். கல்வி கற்பவர்கள் பொருளாதார ரீதியாகவும் உயர்ந்தபிறகு தங்கள் சமூகம் சார்ந்து பாடுபடுவது குறைவு. பெரும்பாலும் சாய்பாபா, ஐயப்பன் கோவில், மூகாம்பிகை கோவில் என சம்பாதித்த பணத்தைக் கொடுத்து தனது   அந்தஸ்தை மேல்சாதிக்கு இணையாக வளர்த்துக்கொள்ள முயல்வார்கள். அப்படியல்லாமல் தான் சார்ந்த சமூகம், இனக்குழு சார்ந்து கவலைப்படுபவர்கள் தங்களால் முயன்ற செயல்களை செய்து வருகிறார்கள். அப்படி செயல்பட்டு கவனம் ஈர்த்திருக்கிறார் அனுசுயா. நாகர்கோவில் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை நிறைவு செய்தவர், ஹைதராபாத்திலுள்ள   தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிய

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் காந்தி- வரிசைப்படுத்தப்படும் அரசியல், அந்தரங்க தவறுகள்

படம்
  காந்தியை இன்று பின்தொடர்பவர்கள் இருவகையாக உள்ளனர் . காந்தியவாதிகளாக நூல்களில் காந்தியைப் பற்றிய கருத்துகளைப் படித்துவிட்டு அவரைப் பின்பற்றுபவர்கள் . அடுத்து , காந்தியின் புனித தன்மை மனதை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்க , அவரை தனிப்பட்ட வாழ்க்கை , அரசியல் என இரண்டிலும் உள்ள தவறுகளை எடுத்து அதனை விமர்சித்து வருபவர்கள் . காந்தியைப் பின்பற்றுபவர்களை விட அவரை விமர்சிப்பவர்களே இன்றும் அவரை உயிரோடு வைத்திருக்கிறார்கள் . இல்லையென்றால் ஒருவர் இறந்து 150 ஆம் ஆண்டுகளாகியும் கூட ஒருவரைப் பற்றி பேசி விவாதித்துக்கொண்டிருக்க முடியுமா ? காந்தி தலித்துகளுக்கு தனி தொகுதிகள் கூடாது என்று கூறியது உண்மை . உண்மையில் அவர் அப்படிக்கூறியது , இந்தியா எதிர்காலத்தில் பிளவுபட்டு போகக்கூடாது என்ற நோக்கில்தான் . காந்தி , அம்பேத்கரின் பேச்சு , எழுத்துகள் மூலமாகவே தலித்துகளின் பிரச்னைகளை ஆழமாக புரிந்துகொண்டார் . கிறிஸ்துவம் , சமணம் , இந்து ஆகிய மதங்களின் நூல்களை காந்தி படித்துள்ளதால் , அவை பற்றிய அறிவு காந்திக்கு உண்டு . அம்பேத்கர் , அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கவேண்டுமென விரும்பினார் . அரசு அதிகாரம் மூலம் சாதி இழிவ