பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களை வைத்து முஸ்லீம்களை படுகொலை செய்து வருகிறார்கள்!

 




இந்து சாதி முறை அமைப்பு

உலகிலேயே இந்தியா ஒரு சிக்கலான நாடு என வெளிநாட்டு தோழர்களுக்கு கூற விரும்புகிறேன். ஆரியர்கள்தான் இரண்டு உலகப்போருக்கு காரணம் என ஜெர்மன் நாட்டு தத்துவவாதிகளைக்கூட நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள கல்வியாளர்கள் கூட இந்துமதத்தின் மர்மங்களை கண்டறிய முடியவில்லை.

வயது மூப்படையாத, இறக்காத ஒன்றாக இந்துமதம் இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய மதம். இந்த சாதி அமைப்பு, நான்கு பிரிவுகளைக் கொண்டது. மேலிருந்து கீழ் எனும் பிரமிடு சாதி அடுக்குமுறை கொண்டது. மறுபிறவியை அடிப்படையாக கொண்டு ஒருவர் செய்த புண்ணியம் மேல்சாதியிலும் பாவம் கீழ்சாதியிலும் பிறக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள். இந்துமதத்தில் சர்வ சக்தியும் ஆற்றலும் கொண்டவர்களாக பார்ப்பான்கள் உள்ளனர். இவர்கள் சாதி அடுக்கில் முதலாக இடம்பெறுகிறார்கள். இவர்களே நாட்டை, கட்சிகளை, ஆட்சித்தலைவர்களைக் கூட கட்டுப்படுத்துகிறார்கள். இந்த மேலாதிக்க இந்துமதம் ஆரியர்களின் கண்டுபிடிப்பு. தனியாக ஒருவரை ஒடுக்குவதை விட அமைப்பு ரீதியாக என்றென்றைக்குமாக ஒடுக்கும் அற்புத ஆற்றலைக் கொண்டது. உலகின் எட்டாவது அதிசயம் என்றே கூறலாம்.

பார்ப்பனன் - 5 சதவீதம்
சத்திரியன் - 4 சதவீதம்
வணிகன் - 2 சதவீதம்
சூத்திரன் 45 சதவீதம்

இதுதான் இந்துமத அடுக்குமுறை. இந்தமுறையில் பெரும்பான்மையான மக்களை சிறுபான்மையினர் ஆள்கிறார்கள். இப்படி ஆள்வதை சட்டப்பூர்வமான முறை என வாதிடுகிறார்கள்.

இந்துமதத்தின் அனைத்துமே பிறப்புதான். ஒருவனின் பிறப்புதான் அவன் செய்யும் தொழிலை தீர்மானிக்கிறது. அது நிரந்தரமானது. அதை மாற்ற முடியாது. சிந்தனையாளர்களாக பார்ப்பான்களை நிலைநிறுத்துவதும் இதே அமைப்புமுறைதான். இவர்கள் இல்லாமல் நாட்டில் எதையும் செய்துவிடமுடியாது. அரசு, அரசியல் தலைவர்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள்.

ஆளும் வர்க்கம், பார்ப்பான்களை அடிப்படையாக கொண்டது. இவர்களை போதிசத்வர்கள் என்று அழைக்கிறார்கள். அதாவது, பூமியின் கடவுள்கள். ஆளும் வர்க்கத்திலுள்ள பார்ப்பான்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, மக்கள் கொண்டுள்ள உணர்ச்சிகரமான மன அமைப்பு. அடுத்து, நிர்வாகத்தை கட்டுப்படுத்துகிற ஆற்றல். பொதுவாகவே மக்கள் பார்ப்பான்களை புனிதமானவர்களாக கருதுகிறார்கள்.

சாதிரீதியான புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டாலே உங்களுக்கு இதற்கான பதில் கிடைக்கும். இந்தியாவின் நான்கு பிரதமர்கள் அனைவருமே பார்ப்பான்கள்தான். ஜவகர்லால் நேரு, அவரது மகள் இந்திராகாந்தி, அடுத்து வந்த மொரார்ஜி தேசாய், பிறகு மீண்டும் இந்திரா காந்தி. நாட்டில் முக்கியமான இடங்களை பார்ப்பான்களே பிடித்துக்கொள்கிறார்கள். அனைத்து துறைகளிலும் முக்கியமான இடங்கள் அவர்களிடம்தான் உள்ளன. அமைச்சரவையிலும் கூட பெரும்பாலான அமைச்சர்கள் பார்ப்பான்கள்தான். பிறப்பு தொடங்கி இறப்பு, இறப்புக்கு பிறகும் கூட பார்ப்பான்களை மக்கள் ஆலோசிக்கிறார்கள் என அம்பேத்கர் கூறினார்.

இன்று இந்தியா உள்ள மோசமான நிலைக்கு பார்ப்பான்களை தவிர வேறு காரணம் தேவையில்லை. இந்தியா, அவர்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் உள்ளது. பார்ப்பான்கள், நாட்டை வலுவாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். வேதம், உபநிடதம், இரு புராணங்கள், பகவத் கீதை, மனு ஸ்மிருதி என புனித நூல்கள் அனைத்துமே அவர்களது உருவாக்கம்தான். பல்லாயிரம் கோவில்களில் பூசாரியாக நின்று கடவுளுக்கு தூதர்களாக பணியாற்றுகிறார்கள். எனவே இந்துக்கள் பார்ப்பான்களை கடவுளைப் போலவே வலிமையானவர் என எண்ணுகிறார்கள்.

இந்துமதத்தில் மேலேயுள்ள மூன்று பிரிவினரும் அதிகாரம், வலிமையை கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இருமுறை பிறப்பு கொண்டவர்கள். சூத்திரர்கள் ஒருமுறை பிறப்பு கொண்டவர்கள். மூன்று பிரிவினருமே மார்பில் நூல் அணிந்திருப்பார்கள். காந்தி வைசிய பிரிவை சேர்ந்தவர். இவர் இருமுறை பிறப்பு கொண்டவர்கள் மீது பச்சாதாபம் கொண்டிருந்தார். நகைமுரணாக பார்ப்பான் ஒருவனே அவரை சுட்டுக்கொன்றான். சூத்திரர்கள் மக்கள் தொகையில் 45 சதவீதம் உள்ளனர். இவர்களது பிரிவில் சாதி, துணை சாதிகள் என ஏராளம் உள்ளது. இந்துமத அமைப்பில் மேலே இருப்பவர்கள் நிலத்தை சொத்தாக கொண்டிருக்கிறார்கள். சாதிமுறையில் பிறருக்கு குறிப்பிட்ட தொழில் உண்டு. சவரத்தொழிலாளர்கள், தச்சர்கள், மீனவர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் என பல்வேறு தொழில்களை செய்கிறார்கள். கிராமத்தில் உள்ளவர்கள் இப்படி பலதரப்பட்ட வேலைகளை செய்கிறார்கள். இப்படித்தான் கிராமங்கள் இயங்கி வருகின்றன. இந்தியா என்பது கிராமங்களைக் கொண்ட நிலம். இங்கு சாதி அடிப்படையில் ஒருவர் வேலையை அர்ப்பணிப்பாக, இடையறாது செய்துவரவேண்டும். இதில் அவ்வப்போது வெடிப்புகள் ஏற்பட்டாலும் இந்துமதம், அதை வன்முறை கொண்டு தீர்க்கிறது. பாசிசவாதிகள், இனவெறியாளர்கள், முதலாளித்துவவாதிகள், சர்வாதிகாரிகள் தங்களுக்கு எதிர்ப்புகள் வரும்போது அதை வன்முறை கொண்டு தீர்க்கிறார்கள். இந்துமதம், வேறொரு விதமான மந்திரத்தைக் கொண்டுள்ளது. அடிமைகள், தங்கள் அடிமைத்தனத்தை அனுபவித்து ஏற்றுக்கொள்வதை நாம் காணுகிறோம். இதுபோல கருத்தியலை நீங்கள் வேறெங்கும் காண முடியாது.

இந்துமத அமைப்பில் இறுதியாக சூத்திரர்கள் இடம்பெறுகிறார்கள். ஆனால் உ்ணமையில் அவர்கள் அந்த முறைக்கு வெளியேதான் இருக்கிறார்கள். அவர்களை ஆரியர்கள் தங்கள் இந்துமதத்தின் உள்ளே வைத்துக்கொள்ள விரும்பவில்லை. கிறித்தவர்கள் கூட இந்தவகையில் வேறுபட்டபோக்கைக் கொண்டிருக்கிறார்கள். தீண்டத்தகாதவர்கள், ஆரியர்களுக்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எதிரிகள். இந்து புனித நூல்கள், இந்தியாவின் பூர்விக குடிகளான தீண்டத்தகாதவர்களை கண்டனம் செய்து அவர்களை மதத்தின் வெளியே வைத்து அடிமைகளாக நடத்த கூறுகிறது. மேல்சாதியினர் பணம் கொண்டவர்கள் அல்லது வறுமையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கென சூத்திரர்களை அடிமையாக கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதில் இந்துமதத்தில் கீழே இருப்பவர்கள் சூத்திரர்கள், இந்துகள் என்ற வேறுபாடு கிடையாது.

முஸ்லீம்கள் இந்தியாவை ஆளும்போது இந்து என்ற சொல் பிறந்தது. உண்மையில் இந்துகள் என்பவர்கள் மக்கள்தொகையில் குறைந்தவர்கள்தான். சிறுபான்மையினர்தான். இந்து மதத்திற்கு வெளியே உள்ளவர்களான பட்டியல் இனத்தவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகம். சாதி என்ற சொல்லை உருவாக்கியதால் சிறுபான்மையினர் பெரும்பான்மை மக்களை ஆளும்படி நிலைமை ஏற்பட்டது என்று கூறமுடியாது. ஆங்கிலத்தில் இருந்து வந்த சொல் அது. அதை இந்துகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். பிரிட்டிஷார், இந்தியாவில் இருந்து கிளம்பியவுடன் தங்களை பெரும்பான்மை கொண்டவர்களாக காட்டிக்கொண்டனர். இந்துமதத்தில் தீண்டத்தகாதவர்களையும் இணைத்து அவர்களையும் இந்துகள் என கூறத்தொடங்கினர். மகாத்மா காந்தி கூட நான்கு சாதி அல்லாது பஞ்சர்மா என்று கூறி தீண்டத்தகாதவர்களை தனியாக அதில் இணைக்க முயன்றார்.

இப்படி எண்ணிக்கை அடிப்படையில் இந்துகள் அதிகமானால், அவர்களின் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்கமுடியாது. அதேநேரம், அமைப்புகளை கைப்பற்றி தீண்டத்தகாதவர்களை சூத்திரர்கள் என்ற பிரிவின் உள்ளே அடைத்தனர். அதை அவர்களை நம்பவும் வைத்தனர். இவர்களை வாக்கு வங்கியாகவும் பயன்படுத்த தொடங்கினர்.

சூத்திரர்களை வைத்தே சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்களை அடக்கும் பணியை செய்தனர். இன்று பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களை வைத்து முஸ்லீம்களை படுகொலை செய்து வருகிறார்கள். எஸ்சி, பிசியினர் தாங்கள் முஸ்லீம், சீக்கியர்களை தாக்குவது மேல்சாதியினருக்கு ஆதாயமாக மாறுவதை அறியமாட்டார்கள். மேலும் இப்படி மதரீதியான சண்டை மூலமாக பிளவுபடுத்தப்படுவதால் அவர்களின் அடிப்படை உரிமை, கௌரவத்திற்கு போராடும் ஆற்றலை இழந்துவிடுகிறார்கள். மடை மாற்றப்படுகிறார்கள்.

மேல்சாதியினர், மதரீதியான சண்டைகள், கலவரங்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதை வைத்துத்தான் அரசு, சமூகம் இரண்டிலும் அதிகாரத்தை அவர்கள் தக்க வைத்துக்கொள்கிறார்கள். தீண்டத்தகாதவர்களை இந்துமயமாக்கினால் அவர்கள் இஸ்லாம், கிறித்தவம் ஆகிய வேற்று மதங்களுக்கு மாறமாட்டார்கள்.ஊரிலுள்ள பொதுக்கிணற்றில் கிறித்தவன், முஸ்லீம் நீர் இறைக்கலாம். ஆனால் தீண்டத்தகாதவன் நீர் இறைத்தால் அவன் உடனே மேல்சாதியினரால் அடித்து படுகொலை செய்யப்படுவான். தமிழ்நாட்டில் இந்து மதத்திலிருந்து மாறி இஸ்லாமிற்கு தீண்டத்தகாதவர்கள் மாறியது இந்து அதிகாரத்திற்குபெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது.  

இந்துமதத்தில் கீழ்நிலையில் தீண்டத்தகாதவர்கள் இருப்பது பார்பான்களுக்கு மேல்சாதியினருக்கும் பெரிய பொக்கிஷம் என்றே கூறவேண்டும். அவர்களது கருத்தியல்படி, ஒருவர் கீழ்சாதியில் பிறந்து துன்பங்களுக்கு உள்ளாவது முந்தைய பிறப்பில் செய்த தவறுகளை அடிப்படையாக கொண்டது. கீழ்சாதியினர் எதிர்கொள்ளும் துன்பங்களை அவர்களேதான் உருவாக்கிக்கொள்கிறார்கள். அதிகாரம், சொத்துக்களை அனுபவிக்கும் ஆளும் வர்க்கம் தீண்டத்தகாதவர்கள் துன்பத்தில் உழன்றாலும் அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை.


மூலம்
தலித் தி பிளாக் அன்டச்சபிள்ஸ் ஆப் இந்தியா
விடிராஜசேகர்
தி ஆரியன் மித் - லியோன் பாலியகோவ்

ஹூ இஸ் மதர் ஆப் ஹிட்லர் - விடி ராஜசேகர்

இந்து ஸ்காலர்ஸ், ஜெர்மனி அண்ட் தி தேர்ட் ரெய்ச் - டாக்டர் அகடானந்த பாரதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!