இந்தியாவை தேங்கி கிடக்கிற, நோய் பிடித்த சமூகமாக மாற்றியதே இந்துமதம்தான்!
அரசை கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கம்
இந்தியச்சமூகத்தில் கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என்று தேடினாலும் ஆளும் வர்க்கத்தின் அளவு பத்து சதவீதம்தான் தேறும். இந்தியாவிற்கென நாடாளுமன்றம் உள்ளது. அதற்கான உறுப்பினர்கள், கேபினட் அமைச்சர், பிரதமர் என யாராக இருந்தாலும் சரி, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இயங்க முடியாது. இந்த ஆளும் வர்க்கம்தான் அரசை நடத்துகிறது. அரசு இவர்களை நடத்தவில்லை.
அரசியலமைப்புச்சட்டம் சில விஷயங்களைக் கூறலாம். நாடாளுமன்றம் சட்டங்களை கொண்டு வரலாம். கேபினட் அமைச்சகம் முடிவுகளை எடுக்கலாம். அரசு கூட இறுதியாக ஏதேனும் முடிவுகளை எடுக்கலாம். ஆனால் ஆளும்வர்க்கத்திற்கு அந்த முடிவுகள் சட்டங்கள் பிடிக்காதபோது, அவை நடைமுறைக்கு வராது. எனவே, தலித்துகளை காக்கும் சட்டங்கள் அனைத்தும் காகித தாளில் மட்டுமே உள்ளது. அவை நடைமுறைக்கு வரவில்லை. காரணம், அவையெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு உவப்பாக இல்லை.
இப்பிரச்னையை எளிதாக கூறலாம். ஆளும் வர்க்கத்தை எதிர்த்து எந்த அரசும் இயங்க முடியாது. இதை எதிர்த்து யாரும் இயங்க முடியாது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை ஆட்சியை விட்டு அகற்றியது கூட இதே ஆளும் வர்க்கம்தான். இந்த ஆளும் வர்க்கத்தில் பார்ப்பான்கள் உள்ளிட்ட மேல்சாதியினர் இடம்பெற்றிருப்பார்கள். மேல்சாதியினர் மட்டுமே இந்தியாவில் சொத்துக்களை சொந்தமாக கொண்டிருக்கிறார்கள். ஆக இங்கு சாதி என்பது வர்க்கமாகவும் உள்ளது. இந்த ஆளும் வர்க்கத்தில் தீண்டத்தகாதவர்களுக்கு இடமில்லை. அது சரி, ஒரு வேலைக்காரன் எப்படி ஆளும் வர்க்கத்தில் சேர முடியும்?
1.அனைத்து வர்க்கங்களுக்கு இடையிலும் சமத்துவமின்மையை உருவாக்கவேண்டும்
2.சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் முழுமையாக நிராயுதபாணிகளாக்க வேண்டும்.
3. அவர்களுக்கு முழுமையாக கல்வியை மறுக்கவேண்டும்.
4.அதிகாரம், உரிமை ஆகியவற்றை பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
5. சொத்துக்கள் உரிமையாவதை தடை செய்யவேண்டும். அடிமைப்படுத்தி கீழேயே வைத்திருக்க வேண்டும். பெண்களை கீழே முன்னேறவிடாமல் கீழே அழுத்த வேண்டும்.
இதுதான் பார்ப்பான்களின் அடிப்படைக் கொள்கை. வரலாற்று ரீதியாக இந்தியாவில் உள்ள சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களுக்கு முக்கிய எதிரி பார்ப்பான்கள். இவர்கள் 80 சதவீத இந்துக்களோடு இணைந்து எதிர்ப்பை உருவாக்குகிறார்கள். தீண்டத்தகாதவர்களை மேலாதிக்கம் செய்து நம்பிக்கை, ஆசைகளை அழிக்கிறார்கள்.
சமத்துவமின்மை என்பது பார்ப்பனியத்தின் அடிப்படையான கொள்கை. இந்தியாவில் மட்டும்தான் சிந்தனையாளர்களுக்கென தனி வர்க்கமாக பார்ப்பான்கள் உள்ளனர். இவர்கள் கல்வியில் தங்கள் மேலாதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அக்கல்வியை கீழ்வர்க்கத்தினர் பெறாமல் தடுக்கிறார்கள். அப்படி பெற்றால் மக்களின் நாக்கை அறுத்து, காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும் என்று கூறுகிறார்கள். ஆங்கிலேயேர்கள் இந்திய மக்களை சுரண்டினர், கொடுமைப்படுத்தினர் என காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். உண்மையில் சூத்திரர்களை, தீண்டத்தகாதவர்களை கொடுமைப்படுத்தி சுரண்டியது பார்ப்பான்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.
பார்ப்பான்கள் தங்களின் முன்னுரிமைகளை பாதுகாக்கும் வகையில் சட்டங்களை மாற்றி வலுப்படுத்திக்கொண்டு சூத்திரர்களை, தீண்டத்தகாதவர்களை நிராயுதபாணியாக மாற்றுகிறார்கள். தீண்டத்தகாதவர்களுக்கான தடைகளை அவர்கள் தொடர்ந்து நீக்கமுடியாதபடி மாற்றி பராமரிக்கிறார்கள். அகிம்சை என்பதை தவறானதாக அடையாளப்படுத்துகிறார்கள். உலகில் பெண்களுக்கு இழைக்கப்படும் எந்தவிதமான அநீதிகளுக்கும் பார்ப்பான்கள் ஆதரவளிக்கிறார்கள். அவர்களது மதக்கொள்கைப்படி, பெண்களுக்கு எட்டுவயதுக்கு முன்னரே திருமணம் செய்துவிடவேண்டும். விதவைகளுக்கு மறுமணம் செய்விப்பதை அனுமதிப்பதில்லை. பெண் பூப்படைந்தாளா இல்லையா என்பதைப் பற்றிக்கூட அவளை மணம் செய்யும் கணவன்தான் தீர்மானிக்கவேண்டும். பார்ப்பன ஆரியர்கள் இத்தகைய விதிகளை ஆதரிக்கிறார்கள். பார்ப்பான்களின் சட்டவிதிகள் தீண்டத்தகாதவர்களுக்கும், பெண்களுக்கும் படுமோசமாக உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் எந்த நாட்டிலும் நாட்டு மக்கள் கல்வி அறிவு பெறாமலும், வறுமையிலும் இருக்கவேண்டுமென எந்த தத்துவத்தையும் எவரும் பார்ப்பான்கள் போல உருவாக்கி அதை கடைபிடித்தது கிடையாது. இன்றைய சமூகத்தில் உள்ள பார்ப்பான்கள் தனிநபராக ஒவ்வொருவருமே தங்களுடைய விதிகளை முன்னோர்கள் உருவாக்கி அளித்தது என உளமாற நம்புகிறார்கள்.
பெரிய இந்து சமூகத்தில் பார்ப்பான்கள் வேற்றுகிரகவாசிபோல தென்படுகிறார்கள். வேற்றுகிரகவாசிகள் போல இருப்பதோடு தீண்டத்தகாதவர்களை மோசமாக நடத்துகிறார்கள். இந்த உறவில் எந்த பகுத்தறிவையோ, நீதியுணர்வையோ நீங்கள் காணவே முடியாது.
இதை எழுதும்போது, இந்திய கிராமங்களில் மிகச்சிறிய மாற்றம் மட்டுமே வந்துள்ளது. இந்துகள் எதையும் மாற்ற விரும்புவதில்லை. மாற்றம் என்பது அதன் வடிவத்தில் உள்ளது. கருத்தில் எந்த மாற்றத்தையும் இந்துகள் விரும்புவதில்லை. அமெரிக்காவில் படித்த இந்து அணு விஞ்ஞானி தோற்றத்தில் மாறுபட்டிருக்கலாம். ஆனால் சிந்தனையில் தொன்மையானவராக இருப்பார். வெளியே விஷயங்களை மாற்றினாலும் உள்ளே எந்த மாறுதலும் இருக்காது.
ஆளும் வர்க்கத்தினருக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும், தீண்டத்தகாத இந்துக்களுக்கும் உள்ள வேற்றுமை என்பது வடதுருவம், தென்துருவம் போன்ற இடைவெளியைக் கொண்டது. வெளிநாடுகளில் ஆளும் அரசு தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அது மூடப்பட்ட இடம். இங்கு ஒருவர் குறிப்பிட்ட சாதியில், மதத்தில் பிறந்து வளராதபோது அவரை எதற்கும் அனுமதிப்பதில்லை. எனவே இந்தியா தேங்கிப்போன சமூகமாக உள்ளது. நோயுற்ற சமூகமாக இருக்கிறது. இந்துமதம் இத்தனை ஆண்டுகாலம் பிழைத்திருக்கிறது என்றால் வேறென்ன காரணம் இருக்கமுடியும்?
மூலம்
தலித் தி பிளாக் அன்டச்சபிள்ஸ் ஆப் இந்தியா - விடி ராஜசேகர், யூசுப் நைம் கிளை
ஹூ இஸ் ரூலிங் இந்தியா - விடி ராஜசேகர்
வாட் காங்கிரஸ் அண்ட் காந்தி ஹேவ் டன் டு அன்டச்சபிள்ஸ் - பிஆர் அம்பேத்கர்
தமிழாக்கம்
நரோத்னயா


கருத்துகள்
கருத்துரையிடுக